ஞாயிறு, 1 மே, 2016

சவுல்_விவிலிய சித்திரக் கதை வரிசை_010

வணக்கங்கள் நண்பர்களே,
அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்!
உங்கள் காலம் அரசர்கள் காலத்துக்கு முந்தைய காலமாக இருந்தால் என்ன நிலை நீடித்திருக்கும்? ஆளுக்காள் நாட்டாமை என்கிற நிலைதானே இருந்திருக்கும்? ஆனால், யூத மக்களுக்கு ஒருவரும் அரசராக இல்லாமல் இறைவனே நேரடி ஆட்சி நடத்திய காலம் ஒன்று உண்டு. அப்போது அவர் நியமிக்கும் தலைவர் மக்களை வழி நடத்துவார். அவர் வழிகாட்டி மட்டுமே. மக்களை ஒருங்கிணைத்தல் மட்டுமே அவர் பணி. வரி வசூல் செய்தல், நாட்டு நலன் திட்டங்கள், போர் என்கிற சங்கதிகள் இல்லாத ஒரு கட்டம். சாமுவேல் சரித்திரம் சென்ற விவிலியக் கதையில் வாசித்திருப்பீர்கள். இறைவன் நேரடியாக சாமுவேலுடன் பேசினார். அவர் மக்கள் பணியில் இருந்தார். மக்கள் தங்கள் எதிரிகளிடம் இருந்து தங்களைக் காக்க ஒரு அரசன் வேண்டும் என்று அடம் பிடித்த போது இறைவன் யாரும் எதிர்பாராத விதமாக ஆடு, மாடு மேய்த்து வந்த சவுலை அழைத்து யூத மக்களை ஆளும் மன்னராக்குகிறார். யூத மக்களின் முதல் அரசன் சவுல். சவுலின் வரலாறு இதோ.  

































அப்புறம் நண்பர்களே ஒரு வித்தியாசமான கோரிக்கை. வித்தியாசமான நண்பரிடம் இருந்து தமிழ் காமிக்ஸ் டைம்ஸில் விடுக்கப்பட்டது. அதன் தமிழாக்கம் இதோ.
"நீங்கள் இப்போது மேற்கத்திய நாடுகளில் வளர்ந்து வரும் நண்பர்கள் நிதி திரட்டல் மூலமான சித்திரக்கதை வெளியீட்டு உத்திகள் பற்றி அறிந்திருக்கலாம். நிறைய சித்திரக்கதை வாசகர்களையும், ஆர்வலர்களையும் கொண்டுள்ள நம் மத்தியில் நம் ஒவ்வொருவரிடம் இருந்தும் சிறு தொகையை முதலீடு செய்து நாம் ஏன் நமது சொந்த சித்திரக்கதைகளை உருவாக்கக் கூடாது? பக்கங்களை உருவாக்குவதில் (ஓவியங்கள் மற்றும் பக்க லே அவுட்) எனது பணியை நான் நல்லதொரு தொகையில் செய்து தருகிறேன். நமது சித்திரக்கதைக்காக நான் குறைவான விலையில், எனது பங்காக விலையைக் குறைத்து செய்து தருகிறேன். இங்கே இருக்கும் மற்ற ஆர்வமுள்ள ஓவியர்களும் இதில் இணைந்து பங்கு கொள்ளலாம். அதே போன்று பதிப்பகத் துறையில் இருக்கும் நமது தோழர்கள் பதிப்புப் பணிகளை உங்களுக்குள் பகிர்ந்து கொள்ளலாமே. கதைகளுக்கான யோசனைகள் நம்மில் எவரும் கொண்டு வரலாம். அந்தக் கதைகளை, நாமே உருவாக்கும் ஒரு குழு வளர்த்தெடுக்கலாம். எனில் விரைவிலேயே நமது சொந்த சித்திரக்கதைப் புத்தகம் நமது கரங்களில் தவழும்...! அதனைத் தொடர்ந்து மேலும் பல சாதனைகள் கை கூடும்.
இது ஒரு யோசனைதான். அனைவரும் இது குறித்த உங்கள் சிந்தனைகளுடன் வெளிப்படையாக விவாதித்திட முன்வாருங்கள்."
-வின்சென்ட் மோசஸ் ராஜா.
(நண்பர் திரு மோசஸ் v. ராஜா அவர்கள் ஏற்கனவே அம்புலி மாமா, இந்து, சுட்டி விகடன் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றி மற்றும் பங்களித்தவர். இப்போது சர்வதேசப் பதிப்பகங்களுக்கும் நடப்பில் பங்களித்துக் கொண்டிருப்பவர். _ஜானி) 
மீண்டும் உங்கள் அனைவருக்கும் உழைப்பாளர் தின நல் வாழ்த்துக்கள் கூறிக் கொண்டு விடைபெறுவது உங்கள் இனிய நண்பன் ஜானி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...