சனி, 16 செப்டம்பர், 2017

பால்கன் காமிக்ஸ் வரிசை -002

வணக்கங்கள் பிரியமான உள்ளங்களே,
இம்முறை நாம் காணவிருப்பது பால்கன் இதழின் இரண்டாம் இதழ்.
சந்தமாமா பிரசுரத்தாரின் இந்த நூல் வெளியான ஆண்டுகளில் தான் நமது பிரபல முத்து காமிக்ஸ் நிறுவனர்களுள் ஒருவரான திரு.எம்.சவுந்திர பாண்டியன் அவர்கள் அங்கே பணியாற்றி வந்ததாக நமது வாசகர்கள் மத்தியில் அவரே ஒரு முறை குறிப்பிட்டுள்ளார். எனவே காமிக்ஸ் உலகை நாற்பதாண்டுகளாக தன் பிடியில் வைத்திருக்கும் முத்து-லயன் காமிக்ஸ் நிறுவனத்தின் விதை விழுந்து முளைத்து, வேர்விட்டு இன்று ஆலமரமாக நம் முன் நிற்பதற்குக் காரணமான இதழ் இந்த பால்கன் காமிக்ஸ் வரிசை என்கிற வகையில் இந்த இதழ்களின் வரிசை மிகவும் அபூர்வமானதும், அசத்தலானதும் அரிதானதுமாகும். இந்தப் புத்தகத்தை வாசிக்கக் கொடுத்து உதவிய திரு.முருகன் தியாகராஜன் அவர்களிடம் மட்டுமே இவ்விதழின் பிரதி இன்றைய காலக்கட்டத்தில் இருக்கிறது போலும். மிகவும் அபூர்வமான இந்த நூலில் இருந்து சில கைபேசி புகைப்படங்களும், நூற் குறிப்பும் மட்டும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.  

இதழின் பெயர்: பால்கன்
மாதமிருமுறை
மலர் : 1
இதழ் : 2
30 ஜனவரி 1968
இலங்கை - 75
மேற்கு ஆப்பிரிக்கா,கிழக்கு ஆப்பிரிக்கா-1 ச,
மலேசியா மற்றும் சிங்கப்பூர் - 45 
சித்திரக் குறிப்புகள்
போர்க்கருவிகள் வளர்ந்த விதம்
வான வெடி அம்பு...
Medieval hand cannon from around 1350 (Photo Credit: National Firearms Museum)

துப்பாக்கிகளுக்கு முன்னோடியான இவை 1364 ஆண்டுகள் துவக்கத்திலேயே பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மனித வரலாற்றில் முதன்முதல் தோற்றமாக இந்த ஆண்டு குறிப்பிடப்படுகிறது. அதிலிருந்து வெறும் பதினான்கே ஆண்டுகளுக்குள் ஐரோப்பா முழுவதுமே கைத்துப்பாக்கிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.   
எறியும் விதம்
ஜெர்மனி-பிரான்ஸ் போரில் உபயோகித்த வான வெடி அம்பு நீண்ட தோல் குழாயால் செய்யப்பட்டிருந்தது. அதனுள் வெடி மருந்து நிரப்பி முடிவில் திரி வைக்கப்பட்டிருந்தது. அதன் மறுமுனையில் 16 ராத்தல் வெடி குண்டு இருக்கும். திரியில் தீ வைத்ததும் தோல் குழாயில் உள்ள மருந்து வெடித்து அம்பு மேல் நோக்கிப் பாய்ந்து அரை மைல் தூரத்துக்கு அப்பால் விழும். கீழே விழுந்ததும் அதன் முனையில் உள்ள வெடி குண்டு 120 ராத்தல் அழுத்தத்துடன் வெடிக்கும்.  

தொடர்கள்
ஹீரோஸ் -ஸ்பார்ட்டன் வீரன்
சீசர் தன் தளபதி ருடீலியசிடம் ஹீரோசைக் கொல்லச் சொல்கிறான். அவ்விதமே ருடீலியஸ் ஹீரோசை இருபது வீரர்களுடன் கோட்டையை முற்றுகையிட அனுப்பினான்.அதன் பின் நடந்தது என்ன? 
விடை தெரிய தேடிப்பிடித்து வாசியுங்கள்...பால்கன் காமிக்ஸ்..

சோதனைக்கு ஒருவன்
வீரமிக்க இளைஞன் மைக் லேன் கடுமையான சோதனையில் வெற்றியடைந்து அரசாங்க விஞ்ஞான கூடத்தின் பரிசோதனை மனிதனாகிறான். புரபசர் கர்னீலியஸ் தீ அவனைத் தன்னுடைய அபூர்வக் கண்டுபிடிப்பான மாத்திரையை விழுங்கச் சொல்கிறார். மைக் மாத்திரையை விழுங்கினானா? அதன் பின் நடந்தது என்ன? 
விடை தெரிய தேடிப்பிடித்து வாசியுங்கள்...பால்கன் காமிக்ஸ்...

டான் டேர் - வானவெளியில் கண்ட பயங்கரக் காளான்
வான வெளி வீரர் டான் டேர் மனித விரோதி மீகோனின் ஆயுதத்தை தடுத்து நிறுத்துவாரா? விடை தெரிய தேடிப்பிடித்து வாசியுங்கள்...பால்கன் காமிக்ஸ்..


கடல் குரங்கு
நீரிலும் நிலத்திலும் வாழும் அதிசயக் கடல் குரங்கை கண்டுபிடிக்கப் போன பீட்டர் காணாமல் போகிறான். அவனைத் தேடிக் கடல் வீரர் மேசன் தன் விசைப்படகு ராஜாளியில் போனார். சுமத்திராவின் அருகே கடலில் நொறுங்கி நின்ற பீட்டரின் கப்பல் வெண் புறாவைக் கண்டார். தன் உதவியாள் குவாரோவுடன் அதனுள் போகிறார். அதன் பின் நடந்தது என்ன? விடை தெரிய தேடிப்பிடித்து வாசியுங்கள்...பால்கன் காமிக்ஸ்...
தெய்வத்தின் சாபம்
பறக்கும் தட்டு வீரர்கள்
ஜீடா துணைக் கிரகத்தின் வெளிக் கிரக மனிதர்கள் மேஜர் கிரண்ட், பாபின் பெயிலி இருவரையும் பறக்கும் தட்டு வீரர்களாக்கினார். சமூக விரோதிகளை ஒழிக்க அவர்களுக்குப் பறக்கும் தட்டும் அதிசயக் குழலும் கொடுத்தனர். அதன் பின் நடந்தது என்ன? 
விடை தெரிய தேடிப்பிடித்து வாசியுங்கள்...பால்கன் காமிக்ஸ்...  


இரும்பு மனிதன்


கறுப்பு வில் சென்னா

தனிக்கதை
விடுதலை வேட்கை

கொள்கைக்காக உயிர் விடும் வீரர்கள்....
தனிச்சண்டை


சிறுவர் சித்திரத் தொடர்கள்
பழங்கால நாய் ஜில்லி
தீராத விளையாட்டுப் பிள்ளை - புரூன்

சிறுவர் பகுதி
ஆறு வேலிகள்
புள்ளிகளும் கோடுகளும்...
கறுப்புப் பந்து
விநோதப் பறவை -புதிர்

புதிர் விடை 
பால்கன் ஆல்பம் : படங்கள்..நாளைய மோட்டார் கார்
இத்தனை விவரங்களுடன் அற்புதமாக வெளியாகி அன்றைய நாட்களில் ஆச்சரியத்தையும், வாசகர்களுக்கு புத்துணர்வையும் இந்த இதழ் வரிசை கொடுத்து இருக்கும் என்பதில் ஐயமில்லை. இதன் அளவு என்ன தெரியுமா? A3!!!  
விடை பெறுகிறேன் நண்பர்களே.. உங்கள் தேடல்கள் இது போன்ற அபூர்வமான இதழ்களை நோக்கியே இருக்கட்டும்...
சமீபத்தில் துவங்கப் பட்டு வரவேற்பை பெற்றுள்ள சில முக நூல் பக்கங்கள் குறித்த லிங்க் கீழே கொடுக்கிறேன். இணைந்து வாசித்து மகிழுங்கள்...

COMICS PDF TIMES

படக்கதை பகிர்வுகள்

என்றென்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி.... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...