ஞாயிறு, 26 நவம்பர், 2017

019-இறைவாக்கினர் எரேமியா...விவிலிய சித்திரக்கதை வரிசை.

ப்ரியமுள்ள தோழமைகளே... 
இன்றைக்கு நான் கொண்டு வர உத்தேசித்து இறைவனின் சித்தத்தால் மலர்ந்திருப்பது இறைவாக்கினர் எரேமியாவின் வாழ்க்கை வரலாற்றின் சுருக்கம். விவிலியத்தில் பழைய ஏற்பாட்டின் காலத்தில் பிறந்து வளர்ந்து தேவனுக்காக எழும்பிப் பிரகாசித்ததொரு நட்சத்திரம்தான் எரேமியா. இறைவன் வழங்கிய தீர்க்கத்தரிசனங்களை மக்களிடையே கொண்டு சேர்த்தார்.. அவரது வரலாறு விவிலியத்தில் ஒரு புத்தகமாகவே சேர்க்கப்பட்டிருப்பது அவருடைய முக்கியத்துவத்தை நன்கு விளக்கும். இறைவனை நம்பி நாடி இருப்பதில் உள்ள நன்மையையும் விலகிப் போவதில் உள்ள தீமையையும் எடுத்தியம்பும் இந்தப் புத்தகத்தை நன்கு வாசித்து கிறிஸ்துவ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் கொஞ்சம் புகட்டினால் மிகுந்த மகிழ்ச்சியடைவோம். அன்புக்குரிய திரு.அலெக்சாண்டர் வாஸ் அவர்களது ஆதரவில் இந்தப் புத்தகம் சேகரிக்கப்பட்டு வெளியாகிறது. அவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இறைவன் அவரையும் அவர் குடும்பத்தாரையும் ஆசீர்வதிப்பாராக.. அவர் வீட்டில் அடுத்த மாதம் 28.12.2017ல் அவரது மகளுக்கு நடைபெறவிருக்கும் திருமண விழாவை சிறப்பாய் தேவன் நடத்திக் கொடுப்பாராக.. மணமக்களுக்கு வாழ்த்துகளை அட்வான்சாக இப்போதே தெரிவித்துக்கொள்கிறேன்.  
வாழ்க்கையில் எத்தனையோ விதமான போராட்டங்கள்..அவற்றை இறைவனின் மீதான நம்பிக்கையை ஆயுதமாகக் கொண்டு நீந்திக் கடக்க முயற்சிக்கலாம். இனி எரேமியா இதோ உங்கள் முன்பு....


































இந்த எரேமியாவின் புஸ்தகத்தைத் தரவிறக்கம் 
செய்திட பிடிஎப் லிங்க்:
எசேக்கியேல் புத்தகத்துடன் சந்திக்கிறேன்.. 
இப்போதைக்கு உங்களிடம் இருந்து விடை பெறுவது..
உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...