ஞாயிறு, 5 நவம்பர், 2017

016-மீகா...ஒரு விவசாயியின் கிளர்ச்சி...

வணக்கம் நண்பர்களே....
மண்ணைப் பொன்னாக மாற்றும் அரிய வித்தை கற்றவர்கள் விவசாயிகள்.. பூமித்தாயை சிறப்பித்து அவளின் அற்புதமான செடிகளையும், கொடிகளையும், மரங்களையும், அவை சார்ந்த உயிர்களையும் போற்றி வளர்ப்பவர்கள் விவசாயிகள்.. நிலத்தைப் பண்படுத்துதல் என்பது சவாலான காரியம். முழு நேரமும் அதில் ஈடுபட்டால்தான் அதனை செம்மை செய்து விதைகளை ஊன்றி..நீரைப் பாய்ச்சி...குறிப்பிட்ட கால இடைவெளியில் நீரை விட்டு...தொடர்ச்சி அற்றுப் போகாமல் பார்த்து...பூச்சித் தாக்குதல் இருக்கிறதா என்று கண்ணில் விளக்கெண்ணை விட்டுப் பார்த்து நமக்கான உணவை உருவாக்குகிறார்கள். விவசாயிகளின் அவலக் குரலுக்கு செவி மடுக்கவும் இன்றைக்கிருக்கும் ஆட்சியாளர்களுக்கு நேரம் போதவில்லை. ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருப்பவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் சாதாரண விவசாயிகளுக்கு மறுக்கப்படுகின்றன.. நானும் விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவன்தான்... நிலங்கள் என்று ஏதோ இருக்கும் பகுதியில் விவசாயம் செய்து பார்த்து விட முனைந்து கொண்டிருப்பவன்தான்... தடைகள் ஏராளம்... தாண்டத் தாண்ட புதுப்புது தடைகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.. விடாப்பிடியாக இருப்போருக்கு மட்டுமே விவசாயம் சாத்தியம் போலும்.. நீங்களும் உங்கள் பகுதியில் முயற்சி செய்யுங்களேன்....

இங்கே நாம் காணவிருப்பது மீகா என்பவரைப் பற்றி.. அவர் ஒரு
 விவசாயி.. அரசாங்கம்  ஒரு விவசாயியை எத்தனை கொடுமை செய்கிறது? அவ்வாறு கொடுமை இழைக்கப்பட்டவரின் இறுதி முறையிடுதல் யாரிடம்? இறைவனை நாடி நிம்மதியைத் தேடப் போன மீகாவுக்குக் கிடைத்த பதில் என்ன? அந்த பதிலால் அதிர்ச்சியடையும் மீகாவின் வேண்டுதல்கள் என்னாயிற்று? அவரை இறைவன் எவ்வாறெல்லாம் பயன்படுத்தினார் என்கிற வரலாறு இது... ஒரு விவசாயியின் வாழ்க்கை எத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்பதெல்லாம் இந்த கதையில் சுட்டிக் காட்டப்படுகிறது. இந்த புத்தகம் வாயிலாக இறை வார்த்தைகள் உங்களை அணுக உதவிய திரு.அலெக்சாண்டர் வாஸ் அவர்களுக்கு Tamil Comics Times Face book Team தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது..

கதை தொடர்கிறது....

































இந்த கதையை பிடிஎப் வடிவில் பெற....



சிறு வண்ண முயற்சிகள்...













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கிளாசிக் ஸ்பெஷல் -2-வகம் காமிக்ஸ் மார்ச் வெளியீடு

  இனிய வணக்கங்கள் தோழர்களே.. இந்த மார்ச் மாதம் வெளியாகியுள்ள காமிக்ஸ்களின் வரிசையில் வகம் லேட்டஸ்டாக இறக்கி இருப்பதுதான் இந்த கிளாசிக் ஸ்ப...