புதன், 13 ஜூன், 2018

கொலைக்கரங்கள்...அனுகாமிக்ஸ்..அலெக்சாண்டர் வாஸ்..

வணக்கங்கள் தோழமை உள்ளங்களே.. இம்முறை உங்களை அனு பிரசுரத்தாரின் ராஜா காமிக்ஸ் சென்னையில் இருந்து வெளியிட்டு விற்பனையுலகில் சாதித்த(?) கொலைக்கரங்கள் என்கிற சிஐடி போர்க் சாகசத்தை தரிசிக்க அன்புடன் அழைக்கிறோம்.. இதனை இன்றைய வண்ணமிகு படைப்பாக்கம் செய்ய முயற்சித்து நமக்கெல்லாம் அன்பளித்துள்ள அன்பு இதயம் திரு.அலெக்சாண்டர் வாஸ் அவர்களை இந்த நேரத்தில் நன்றியையும் அன்பையும் பன்னீராய் தெளித்து மகிழ்கிறேன்..

இந்த காமிக்ஸ் முடிவில் ஒரு சில வார்த்தைகள்...உங்களோடு..






இந்த ஓவியங்களை பார்த்தால் நம்ம ஜானி நீரோ போன்று தெரிகிறதா? ஆமாம். அதேதான். அந்தக்காலத்திலேயே.. முத்து காமிக்ஸில் இருபத்து மூன்றாவது வெளியீடாக ஜானி நீரோ சாகசமாக வெளியான வெளியான கொலைக்கரம் புத்தகத்தின் பாதிப்பில் உருவாகி விற்பனையான புத்தகம் இது... 
தரவிறக்க...
இந்த நூலை நமக்காக ஆவணப்படுத்தி வழங்கியிருப்பவர் திரு அலெக்சாண்டர் வாஸ் அவர்கள்.. இந்த நூலை நீங்கள் பகிர்கையில் அவரது பெயரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.. தனது சேமிப்பில் இருந்து எடுத்து வண்ணம் சில பக்கங்களுக்குக் கொடுத்தும் நமக்கென பகிர்ந்துள்ளார். அவருக்கு தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் சார்பில் நன்றியும் அன்பும்.. மற்ற நண்பர்களும் அவரவர் வசமிருக்கும் இது போன்ற படைப்புகளை ஆவணப்படுத்துங்கள்... 
நன்றியுடன் உங்கள் நண்பன் ஜானி.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...