சனி, 11 ஆகஸ்ட், 2018

IND-23-25-அபயக்குரல் ஆணை-ப்ளாஷ் கார்டன்-ஜேம்ஸ் ஜெகன்

இனிய வணக்கங்கள் தோழமை நெஞ்சங்களே...
1986ஆம் ஆண்டு வெளியாகி பரபரப்பூட்டிய ப்ளாஷ் கார்டனின் சாகஸம் அபயக்குரல் ஆணை..அபயக்குரல் என்றாலே கெஞ்சுவது போன்று இருப்பதே இயல்பு..அதெப்படி ஆணையாகிறது என்று கேட்டால் தலைப்பை தேர்ந்தவர் மிகவும் புத்திசாலித்தனமாக தலைப்பிட்டிருப்பதாகவே கூற வேண்டும். தலைப்பிலேயே முழுக்கதையையும் முடித்திருக்கிறார்..
ஒரு அபயக்குரல் ஆணையாக மாற்றமடைவது எப்படி?


தனது சாகஸப் பயணத்துக்கு விடுப்பு கொடுத்து விட்டு சற்றே ஓய்வெடுக்க டேலுடன் ப்ளாஷ் செல்லுமிடத்திலும் தொல்லைகள் அவர்களது எதிர்காலப்பயணி ஈகன் வடிவில் வந்து சேர்கின்றன. கால் கட்டு, காட்டருவிப் பயணம், காஸட் என அடுத்தடுத்த காட்சிகள் வேகமெடுக்க தேவத்தீவு இளவரசி தலியாவின் அபயக்குரலைக் கேட்டு அதிர்ச்சியடையும் ப்ளாஷ் பல்வேறு தடைகளைத் தாண்டி தேவத்தீவு நோக்கி பிரயாணிக்கிறார். அதன்பின்னர் நடந்தது என்ன?
கதைக்கு மேலும் அணி சேர்க்கும் விதமாக
*காப்டன் கப்சிப்

*இந்திய சரித்திர சின்னங்கள் வரிசையில் கோனார்க் சூரியன் கோவில்


*சித்திரஜெயன்


*இரசிக்கத்தக்க விளம்பரங்கள்


ஆகியவை இணைக்கப்பட்டிருக்கின்றன..
இந்நூலை எளிதில் வாசிக்க ஏற்றவகையில் பிடிஎப் வடிவில் அன்பளித்த திரு.ஜேம்ஸ் ஜெகனுக்கு வாசகர்களாகிய நமது சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்..
சுட்டியை பயன்படுத்தி மகிழ்வீர்...
அபயக்குரல் ஆணை-1986-ஜேம்ஸ் ஜெகன்

3 கருத்துகள்:

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...