வெள்ளி, 31 ஜனவரி, 2020

ஹீரோ...மழலைகளை கவனிப்போமே..



ஹீரோ...படம் நல்ல கருத்துடன்தான் வந்திருக்கிறது.. என்ன ஒன்று ஆரம்பத்திலேயே நாயகன் செய்வதாக சிலபல சாகஸங்களை நிகழ்த்திக் காண்பித்து விட்டு அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக நாயகன் சூப்பர் ஹீரோவான பின்னணிக் கதையை அமைத்திருந்தால் நன்றாகவே வந்திருக்கும்.. சூப்பர் ஹீரோ என்ற எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டு பாதி படம் வரை காண்பிக்கப்படாத நிலையில் அதுவே திரைப்படத்துக்கான ஸ்பீட் பிரேக்கராக அமைந்து விட்டது.. கடலூர் தூய வளனார் போர்டிங்கில் நான் படித்துக் கொண்டிருந்த சமயம்.. வாசிப்புக்கு நிறைய நேரம் கிடைக்கும்.. அப்போதெல்லாம் எனது ரஃப் நோட்டுகளில் ஓவியம் வரைவது,  விலங்குகளை மையப்படுத்தி கதை எழுதுவது ஆகியவை எனக்கு மிகப்பிடித்தமான செயல்.. ஒரு முறை எனது தந்தையாரும் விசிட்டின்போது அவற்றை நோட்டமிட்டு ஒரு சில நோட்டுக்களை வீட்டுக்கும் எடுத்துப் போனது நினைவிருக்கிறது.. இந்த திரைப்படத்தின் மையக்கருத்தான பிள்ளைகளை அவரவர் திறமைகளை கவனித்து வளர்க்கக் கூறியுள்ளது சிறப்பு..
மேலதிக விவரங்களுக்கு..
https://en.m.wikipedia.org/wiki/Hero_(2019_Tamil_film)
என்றென்றும் அன்புடன்
ஜானி..

வியாழன், 30 ஜனவரி, 2020

சைக்கோ...ஐஸ்ட் எ லுக்..


Being psycho...ஷ்ஷ்ப்ப்பா...முடியலை...கொலையைக் காட்டுறேன்னு மனிதகசாப்புக் கடையைகாட்டுறாங்க.. ஒரு பெண் தப்பிச்சுட்டா கொலை அரிப்பை தீர்த்துக்க அந்த ஏரியால சுத்திட்டிருக்கிற விலைமாதரில் ஒருத்தரை போட்டுத் தள்ளிடுவான்னு சொல்லிட்டு ஒரு பொண்ணு ட்விட்டர் அலர்ட்டால உஷாராகி தப்பிச்சுடறா.. அடுத்த ஒரு சில நாட்கள்லயே அதே பொண்ணை ஸ்க்ரூ ட்ரைவரால குத்துறாரு நம்ம வில்லசைக்கோ.. மயக்க ஸ்ப்ரே அடிக்கிறாரு...சாக்லேட் கொடுக்கிறாரு...கத்தியால குத்துறாரு... போலீஸில் மாடஸ் அப்பரண்டி M.O.(modus operendi) அப்படி ஒண்ணு இருக்கு.. அதாவது குற்ற செயலில் ஈடுபடுறவனுக்கு தனி ஸ்டைல் இருக்கும்.. இங்கே என்னடான்னா எல்லா விதமாவும் வெச்சி செஞ்சிருக்கார் சைக்கோ... படம் பார்த்து டயர்ட்டாகிட்டேன்.. ஒருமுறை பார்த்துட்டு மாசக்கணக்கில மண்டையை பிய்த்துக் கொள்ள வேண்டிய தரமான சைக்கோ படம்.. உதயநிதிக்கும் ஒரு டிபரண்ட் கேரடக்கர்... போதுமே..


வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...