வெள்ளி, 17 ஜனவரி, 2020

RC 151 -செவ்வாய்_கிரகத்து_வைர_மனிதன்_பிளாஷ் கார்டன்

நமது சித்திரக்கதை உலக  நாயகர்களில்  பிளாஷ் கார்டனுக்கு தனியொரு இடம் உண்டு.. காதலி டேல், விஞ்ஞானி ஜார்க்கோவ் துணையுடன் வெவ்வேறு கிரகங்களுக்கு சென்று வியத்தகு சாகசங்களை நிகழ்த்திடுவது நமது பிளாஷ் கார்டனின் சித்திரத் தொடர்..  மலை வாசஸ்தலத்துக்கு சென்றவிடத்தில் பனி விளையாட்டில் ஈடுபடுகிறார். பனிக்கரடியோடு மோதுகிறார். கால் முறிந்த நிலையில் பனிச் சரிவில் இருந்து தன்னுயிரை காத்திட பெரும்பாடு படுகிறார். ஓநாய்களின் தொல்லை வேறு தொடர்கிறது... தன்னால் தனித்துப் போராட முடியாத நிலைமையில்  செவ்வாய் கிரகத்தின் வைர மனிதனான மந்திர தந்திரம் தெரிந்த பால்டர் என்கிற தனது நண்பனை உதவிக்கு அழைக்கிறார். இதில் ஆர்வமூட்டும் சேதி என்னவெனில் லோகிதான் உன்னை அனுப்பி இருக்கிறது என்பார் பிளாஷ்.
Image result for loki
நாம் அவெஞ்சர் திரைப்பட வரிசைகளில் பார்த்த லோகி இங்கே நல்லதொரு பெயர் வாங்கி இருக்கிறார். பால்டர் நகருக்குள் வர பொது மக்களின் கிண்டல் கேலிக்கு ஆளாகிறார். கோபத்தில் உள்ளூர் ஜனங்களை துவைத்து எடுத்து விடுகிறார். அவர்கள் போலீசை அழைக்க பால்டரை சுடும் அதிகாரிகளை தன்னிடமுள்ள சுத்தியலை கொண்டு தடுத்து வசனம் பேசுகிறார் பால்டர்.. இது லோகியின் ஆயுதம் என்கிறார்.
Image result for lokiநம்ம அவெஞ்சர்களில் இது தோரின் ஆயுதம் என்பதை நாமறிவோம். இங்கே வேறு கதையும் காணக்கிடைக்கிறது.. பிரச்சினை பெரிதாகிக் கொண்டே போக நமது டேல் ஹெலிகாப்டரில் வந்திறங்கி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறாள். மருத்துவமனையில் பிளாஷ் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நடந்தேற பால்டர் தனது செவ்வாய் கிரகத்துக்கு திரும்பி செல்வதாக கதை அமைக்கப்பட்டிருக்கிறது.. அநேகமாக அது ஆஸ்கார்டாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். நமது புரிதலுக்காக அதனை செவ்வாய் கிரகம் என்று சுட்டியுள்ளனர்.. நல்ல பொழுதுபோக்காக வாசிப்பதற்கான கதை...   இதன் விஷூவல் ஆல்பம் இதோ...



































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...