புதன், 30 செப்டம்பர், 2020

305~The Three Musketeers 2011




அலெக்ஸாண்டர் டூமாஸின் புகழ் பெற்ற நாவல் இது. ஆர்தோஸ், போர்த்தோஸ், அராமிஸ் ஆகிய மூவரும் தான் மூன்று மஸ்கட்டீர்கள். இவர்களைத் தவிர கதையின் இளவயது நாயகன் ஒருவன் இருக்கிறான். அவன் தான் ஹீரோ. பழைய மஸ்கட்டீர்களை மிலேடி ஒரு முக்கியமான சமயத்தில் ஏமாற்றிவிட்டு எஸ்கேப்பாக, அதன் பிறகு ஹீரோ தானும் மஸ்கட்டீராவேன் என்று கிளம்புகிறான். ஒரு சமயம் மூன்று மஸ்கட்டீர்களோடு அரசிற்கு எதிரான ஆட்களுடன் சண்டையிட்டு அவர்களுடன் ஒட்டிக் கொள்கிறான். அதன் பிறகு ராணியில் வேலைக்காரியாக இருக்கும் சூப்பர் பிகர் கான்ஸ்டன்ஸை கண்டதும் காதலிக்க ஆரம்பிக்கிறான். ப்ரான்ஸ் ராணிக்கும் பக்கிங்ஹாம் ராஜாவுக்கும் காதல் அவர் ராணிக்கு பரிசாய் ஒரு வைர அட்டிகையை கொடுக்க, அதை மிலேடி கும்பல் கடத்திப் போய்விடுகிறது. அதன் பின்னணி பக்கிங்ஹாமுக்கும், ப்ரான்ஸுக்குமிடையே சண்டை மூட்டுவதற்காக. ராணி பதறிப் போய் மூன்று மஸ்கட்டீர்களை கூப்பிட்டு அதை திரும்ப காப்பாற்றி வர சொல்லுகிறாள். அவர்கள் காப்பாற்றினார்களா? இல்லையா என்பதுதான் கதை.


அபாரமான ஒளிப்பதிவு. சிஜி ஒர்க், ப்ரம்மாண்டமான மாளிகைகள், செம ரிச்சான ப்ரொடக்‌ஷன் வேல்யூ, என பிரம்மாண்டம் காட்டியிருக்கிறார்கள்.

சுருக்கமா சொல்லலும்னா நம்மூர்ல டைரக்டர் சங்கர் படம் மாதிரி.!


லாஜிக்கை எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு ஜாலியாய் ரசிக்க வேண்டிய படம் இது.

படம் தொடங்கி கொஞ்ச நேரம் கொட்டாவி வருவதை தவிர்க்க முடியவில்லை..

அப்பறம் போகப் போக பட்டய கௌப்புது.

இதோட ரெண்டாம் பாகம் 2013-ல ரிலீசாகி இருக்கு..

ஆனா தமிழ்ல இல்ல.

இது போன்ற திரைப்படங்களை இரசிக்க நண்பர் குணாவின் பெருமுயற்சியில் உருவான தமிழ்மினிக்கு வாருங்கள்..

லிங்க்..

t.me/tamilminitamil


செவ்வாய், 29 செப்டம்பர், 2020

ஓவியர் திரு.கே.சி.சிவசங்கரன் மறைவு

 




இந்த விக்ரமாதித்தனையும், வேதாளத்தையும் கடந்து வராதவர்கள் யாருமே இருக்க முடியாது.

’அம்புலிமாமா’வின் கண்களாக விளங்கியவர். பல லட்சம் ஓவியங்களை வரைந்த கரங்களுக்கு சொந்தக்காரர் கே.சி.சிவசங்கர் (எ) ஓவியர் சங்கர் (வயது 97), இன்று மதியம் 1.30 மணியளவில் இயற்கையோடு இணைந்தார்.

போய் வாருங்கள் தாத்தா. எங்கள் கனவுகளில் என்றும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாய் வாழ்வீர்கள்.

திங்கள், 28 செப்டம்பர், 2020

வினோபாவின்.."வியாபார வில்லங்கம்"

அறிமுகம்: வினோபா, ஓவியர்..இலங்கை மண்ணின் மைந்தர். தந்தையார் வழக்கறிஞர்(அமரர்). தாயார் வங்கி முகமையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார். இரு சகோதரிகள்..
சின்னஞ்சிறு வயதிலேயே தானாகவே ஓவிய ஆர்வம் கொண்டு வரையத் துவங்குகிறார்..ரியாலிஸ்டிக்காகவும், மாடர்னாகவும் இப்போதுள்ள ஓவியர்களுக்கு இணையான ஸ்ட்ரோக்குகளில் அழகான குதிரைகளையும் கௌபாய்களையும் கதையோடு பரிமாறுகிறார்.. இரண்டு கைகளிலும் ஒரே நேரத்தில் வரையும் மகத்தான ஆற்றலையும் இவர் பெற்றிருக்கிறார்.. இவரை நாமும் வாழ்த்துவோம்..
இரு கரங்களினாால் வரையும் கலக்கல்களைக் காண:

 















ஒரு வழிப்பறி, இரு கொலைகள்.. டிடெக்டிவ் ராபின்(றொபின்-இலங்கை வழக்கு) துப்பறிவதில் உண்மை வெளியாகிறது.. பரபரப்பான பக்கங்களில் கதை சொல்கிறது ஓவியங்கள்.. இரண்டையும் ஒற்றை ஆளாக வினோபாவே சாதித்திருக்கிறார். அவரை வாழ்த்துவோம்...

முகநூலில் அவரை தொடர:

For pdf:

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

தலையில் பாய்ந்த தோட்டா_கே.வி.கணேஷ் பிறந்ததின பரிசு

 


*HAPPY BIRTHDAY*
🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
*நண்பர் K.V. கணேஷ் அவர்களின் பிறந்தநாள் சிறப்பு வெளியீடு*

*தலையில் பாய்ந்த தோட்டா*

*மனதை வருடும் ஒரு கிளாசிகல் த்ரில்லர்*

மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஐந்து பாக குண்டுபுக்கான ஒரு வாளின் கதை மொழிமாற்ற காமிக்ஸை உருவாக்கியவர் நம் நண்பர் K.V. கணேஷ் அவர்கள். அதுமட்டுமல்லாமல் எண்ணிலடங்காத மொழிமாற்ற காமிக்ஸ்களை நம் வாசகர்களுக்காக அவர் உருவாக்கியிருக்கிறார். இப்பொழுதும் ஒரு 9 பாக கதையை கையில் எடுத்திருக்கிறார். சரளமாக பேசுவதிலும் அன்பாக பழகுவதிலும் பண்பாக நடந்து கொள்வதிலும் மிகச் சிறந்தவரான திரு K.V. கணேஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ( எத்தனையாவது பிறந்தநாள் என்பது பிரம்ம ரகசியம்) . இந்த இனிய நாளை இன்னும் ரசனைக்கு உரியதாக மாற்ற கிளாசிக்கல் த்ரில்லர் ஆன "தலையில் பாய்ந்த தோட்டா" சிறப்பு வெளியீடாக பகிரப்படுகிறது. இந்த மொழி மாற்ற காமிக்ஸ் பற்றி ஒரு சிறிய அறிமுகம்....

இங்கிலாந்து படைகளுக்கும் அயர்லாந்து படைகளுக்கும் ஆங்காங்கே மோதல்கள் வெடிக்கின்றன . இந்த சூழ்நிலையில் இங்கிலாந்தில் இயங்கும் ஐரிஷ் தீவிரவாதிகளை கண்டுபிடிக்க இரட்டை உளவாளியாக நியமிக்கப்படுகிறான் ஆங்கர். அவன் சென்றடையும் தீவிரவாதக் குழுவில் சாரா எனும் பெயரில் அவனுக்கு ஒரு காதலி கிடைக்கிறாள். தீவிரவாதிகள் குழுவுக்கு உள்ளேயே பல குழப்பங்கள் நிகழ அக்குழுவின் தலைவன் ஒருநாள் சுடப் படுகிறான். அவனது தலையில் பாய்கிறது ஒரு தோட்டா. ஆங்கர் பலத்த முயற்சிகளுக்குப் பின் தலைவனை சுட்ட நபரை கண்டுபிடிக்கிறான்... அது அவனது காதலி சாரா... இதற்கிடையில் அவன் ஒரு இரட்டை உளவாளி என்பது அனைவருக்கும் தெரியவருகிறது ... அதன்பின்???

காதல் அன்பு பாசம் தேசப்பற்று துரோகம் வன்மம் கொடூரம் இரக்கம் க்ரைம் என அனைத்து வகை உணர்ச்சிகளையும் சேர்த்து ஒரு கலவையான கிளாசிக்கல் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்த மொழிமாற்ற காமிக்ஸ் உங்கள் அனைவரையும் கவரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

K.V. கணேஷ் அவர்களின் பிறந்தநாள் சிறப்பு வெளியீடான தலையில் பாய்ந்த தோட்டா மொழிமாற்ற காமிக்ஸின் தரவிறக்க லிங்க்

https://bit.ly/2Ga1PZZ

*நண்பர் K.V. கணேஷ் அவர்களின் பிறந்தநாள் சிறப்பு வெளியீடு*

*தலையில் பாய்ந்த தோட்டா*

*மனதை வருடும் ஒரு கிளாசிகல் த்ரில்லர்*

#COMICS_PDF_TIMES

புதன், 23 செப்டம்பர், 2020

ஒரு கடிகாரத்தின் கதை- பிரசன்னா

 த்ரில்லான கதைகள் சின்னஞ்சிறியதாக இருந்தாலுமே ஏதாவது ஒரு குறிப்பை நமக்கு விட்டு செல்கிறது.. இதோ ஒரு கடிகார வியாபாரியும் அவரது மகளும் வாழும் மகிழ்ச்சியான வாழ்வில் அடிக்கும் புயலில் இருந்து எப்படி மீண்டார்கள் என வாசித்துத்தான் பாருங்களேன்..


கோவை ப்ரசன்னா ஸ்ரீதர்

நமக்காக அளித்த செம்ம கதை இந்த கடிகாரத்தின் கதை..

நான்கு பக்க சிறுகதை





For pdf fans:

https://www.mediafire.com/download/zu1qi9olb25zvfo

ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

இப்போதே அழித்து விடு -மாடஸ்டி & வில்லி

 

அந்த மின்வேலி தீவைச் சுற்றி ஓடியிருந்தது.. உள்ளே பிரிட்டிஷ் இராணுவ இரகசியக் கோப்புகளடங்கிய ட்ரக் மறைவாக நிறுத்தப்பட்டிருந்தது.. அதை அழித்தாக வேண்டும்.. மாடஸ்டி ப்ளைஸி வில்லி கார்வினோடு தனிப்படகில் தீவின் மிக அருகில் இறக்கிவிடப்பட்டனர்.. கோப்பை எடுக்க மின்வேலியைத் தாண்டியாக வேண்டும்.. மின் வேலியோ எளிதில் புக முடியாதவாறு வலுவாக பிணைக்கப்பட்டு உயர் மின்னழுத்த மின்சாரம் பாய்ந்தோடிக் கொண்டிருந்தது.. என்ன செய்யலாம் என அடர் இருளில் அமர்ந்து சிந்திக்கத் துவங்கினார்கள் இருவரும்.. முதலாவது கம்பியைப்பிணைக்கும் வயர்கள் எங்கிருந்து கொண்டுவந்து இணைத்திருக்கிறார்கள் என பார்க்க வேண்டும்..
சின்னதொரு ட்ரோனை இருளிலும் ஊடுருவிப் பார்க்கக்கூடிய காமிராவோடிணைத்து பறக்க விட்டனர்.. அந்தத் தீவை சில நிமிடங்களிலேயே சுற்றிப் பந்து ட்ரக் நிற்கும் இடத்துக்கு மிக அருகிலேயே கட்டுப்பாட்டறை செயல்படுவதையும் காவலுக்கு தீவில் தற்போது ஆறே பேர் இருப்பதையும் கண்டுகொண்டார்கள்.. மின்வேலிக்கு வரும் மின்சார வயர்களைத் துண்டித்தவுடனேயே அலாரம் அலறத் தொடங்கியது.. ஒரு தவுசண்ட்வாலா வெடியை ட்ரோனில் அனுப்பி  வெடியை பற்ற வைத்து வேறு பக்கத்தில் போட செய்தனர்.. படபட வெடிச்சத்தத்தில் ஓசை வந்ததிசை நோக்கி ஓடிய செக்யூரிட்டிகளை ஏமாற்றிவிட்டு எளிதாக மின்வேலிக்கம்பத்தை நொறுங்கி விழச்செய்து உள்ளே நின்ற லாரியில் சுற்றிலும் பாமைப் பொருத்திவிட்டு வெளியேறிப் பாய்ந்தனர். உறக்கத்திலிருந்த அடியாட்களும் வாரிச்சுருட்டிக் கொண்டு வெளியேறி வருவதற்குள் போட்டைத் தொட்டது மாடஸ்டி ஜோடி.. அங்கே அதற்குள் அறுவரில் ஒருவன் வந்து போட்டைப் பார்த்து உஷாராகி விட்டிருந்தான்.. அவன் சுடத் தொடங்க கார்வினின் கத்தி அவன் கழுத்தில் குத்தி நின்றது.. அலறக்கூட வாய்ப்பில்லாமல் அப்படியே மடங்கி விழுந்தான் அவன்.. போட் புறப்பட்டு மூன்றாவது நிமிடத்தில் அந்த லாரி குண்டு வெடித்து மொத்தமும் சாம்பலாகியது..
..அதிரடிகள் இப்போதைக்கு முற்றும்..
நிற்க..இது ஸ்பைடர் படை வாட்ஸ் அப் குழுவுக்காக நான் எழுதிய கதை.. 


ஓநாய்கள்-எட்டியான்னே ஷ்ரெட்டர்


 

கதை கேட்கிற வழக்கமுள்ள +18 நட்பூக்கள் மட்டும் படித்து டைமிருந்தா ரெண்டுவரி உங்க கருத்துகளைக் கொடுக்க அழைக்கிறோம்...

*இது ஒரு கம்ப்ளீட் கிராபிக் நாவல்..ஓவியங்களில் வேறு வகை ஸ்ட்ரோக்குகள்..கதைக்கு அவசியமான விதத்தில் வரையப்பட்டிருக்கிறது..

*கூட்டுக் குடும்ப கதை கேட்டல்களை நினைவூட்டும் வித கதையமைப்பு..

வாருங்கள் பாலிராக் எஸ்டேட்டுக்கு..கதையோடு காத்திருக்கிறோம்...

https://www.mediafire.com/file/ewlq2apa10gxrzk/%25E0%25AE%2593%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D.pdf/file


வெள்ளி, 18 செப்டம்பர், 2020

தெய்வம் நின்று கொல்லும்-ஸ்டீவ் ரோஜர்ஸ்

 


தெய்வம் நின்று கொல்லும்-மனித உருக்கொண்ட ஏழு மிருகங்களின் கதை-படக்கதை
அற்புதமான சித்திரங்கள். கதையும் அருமை.
தமிழில் :ஸ்டீவ் ரோஜர்ஸ்
முதன் முதல் கன்னி முயற்சி👍
புதியவரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்..

https://www.mediafire.com/download/lg56l87ey7zvke0

விமர்சனம்-1:

"தெய்வம் நின்று கொல்லும்" 

மிக அருமையான, சுவையான கதைக்களம்.

முடிவு முன்னமே யூகிக்க முடிந்த ஒன்று என்ற போதும், தொய்வில்லாமல் நகர்கிறது.

கதையின் போக்கொடு இடைச்சொருகலாய் மனிதர்களாய் இருந்தவர்கள் எப்படி படிப்படியாக காமம், ஆதிக்க வெறி, இன வெறி, என முன்னேறி (பின்னிறங்கி) மனிதர்களை வேட்டையாடி உண்ணும் (தின்னும்) விலங்குகள் நிலைக்கு சென்றனர் என நினைவூட்டி கதை கூறிய போக்கு ரசிப்பதாய் இருந்தது....

சித்திரங்கள் அருமை.

Thanks a lot 👏🏻👏🏻👏🏻

விமர்சனம்-2

*தெய்வம் நின்று _கொல்லும்_* ...



சும்மா பராக்கு பார்த்துக் கொண்டே, பிடிஎஃப் டவுன்லோடி வைக்கலாம் என்று தான் நினைத்தேன். பிடிஎஃப் லேப்டாப்பில் டவுன்லோடியதும், தானாகவே ஓபன் ஆகிவிடும். சரி ஒன்று இரண்டு பக்கங்களை பார்ப்போம் என பக்கங்களை நகர்த்தினேன்... இருபதே நிமிடங்கள்... நான்ஸ்டாப் ஆக்ஷன் ரணகளம், ரத்தக்களறியை படித்து முடித்து விட்டேன்...


பஞ்சமா பாதகங்கள் எதற்கும் அஞ்சாத ஏழு மனித மிருகங்கள்... ஆண்டுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு இடத்தில் ஒன்று கூடி விருந்து படைத்துக் கொள்கிறார்கள். ஏழு பேரும் கல்லூரி பருவத்தில் ஒன்றாக படித்தவர்கள்... வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் வருவது போல, மனமொன்றிய கொலைகாரர்கள்... ஏன் கொல்கிறோம், யாரைக் கொல்கிறோம் என்றெல்லாம் விதிகள் இல்லை... எனக்குப் பிடிச்சிருக்கு செய்கிறேன் என்று ரத்தக்களறியாக ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்... 2015 வரை...


2016-ல் வேட்டைக்கு கிளம்பியவன் இரையாக மாறி விட்ட கதை... அவர்கள் வேட்டையாக கிளம்பியதோ கிளேர் விண்டர்மேன் என்ற சாப்ட்வேர் என்ஜினியரை... அம்மணி எவ்வளவு சாஃப்ட்டான என்ஜினியர் என்று வரலாற்றை சரியாக தெரிந்து கொள்ளாத வேட்டைக்காரர்கள் அந்த ஆண்டுக்கான இரையாக கிளேரை தேர்ந்தெடுத்து வரவழைக்கிறார்கள்... அவ்வளவு தான் 35வது பக்கத்தில் தொடங்கும் மனித வேட்டை ஆடுகளம், இறுதிபக்கம் வரையிலும் ஆக்ஷன் மற்றும் அதிரடி ரத்தக்களறியுடன் ஜெட் வேகத்தில் செல்கிறது....


மனித வேட்டையில் வென்றவர் யார் ஏழு ஆண்களா? ஒரு பெண்ணா? அவளுக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு? யார் அவள் ? என்று தெரிந்து கொள்ள ஒரு பக்கம் விடாமல் படியுங்கள் நண்பர்களே...


இதில் குறிப்பிடத்தகுந்த பாராட்டுக்குரியவர்கள், தடையில்லாத, பிழைகளற்ற மொழிபெயர்பை செய்தவரும், கண்களுக்கு வருத்தமில்லாத எழுத்துருவை வடிவமைத்தவருமே...🥰🥰🥰🤝


ஆனாலும், நமக்கு இந்த கதையை பரிசளித்த ஆசான் @⁨Cm Suresh Chand⁩ அவர்களுக்கும் கரம் கூப்பிய நன்றிகள்ள்ள்ள்ள்....🥴🙏🙏🙏

பூபதி ராசிபுரம்

வியாழன், 17 செப்டம்பர், 2020

வெள்ளைக்கண் பயங்கரம்..

வணக்கம் தோழர்களே.. 
ராணி வாராந்தரி..எடிட்டர் திரு.ராமகிருஷ்ணன் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..
ராணி காமிக்ஸ் தொடர்பான கூடுதல் விவரங்கள் சேகரிக்க அவரை நேரில் சென்று சந்திக்க நானும் ஒரு கோடி வசந்த குமார் என்ற நண்பரும் போயிருந்தோம்.. அத்தனை பிசியான பணிகளுக்கிடையேயும் நாங்கள் ராணி காமிக்ஸ் வாசகர்கள் என்பதை அறிந்தவுடன் அத்தனை அன்பாக வரவேற்று சில நிமிடங்களை ஒதுக்கிப் பேசினார்.. அதில் அவரது நேர்மையான ஒளிவுமறைவற்ற பேச்சு என்னை மிகவே கவர்ந்தது.. ராணி காமிக்ஸை உயிர்ப்பிக்கும் எண்ணம் தந்தி நிறுவனத்திடம் உண்டா என்கிற முக்கியமான கேள்வியை அவரிடம் கேட்டபோது அதற்கான யோசனை ஏதும் இப்போது இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.. அதுபோக பழைய இஷ்யூஸ் சேமிப்பில் ஏதும் இருக்கிறதா என்ற கேள்விக்கும் தங்களது கோடவுன் மழைவெள்ளப்பாதிப்பில் சுத்தமாக பழைய வெளியீடுகள் முழுதும் அழிந்து விட்டன என்றார். 
நிற்க.. அவரது சித்தி மகன் திரு.செந்தில் குமார் என் நீண்டகால நண்பர் என்பதாலும், செந்தில் குமார் தற்போதும் காமிக்ஸ் வாசகர் என்பதாலும் இந்த சந்திப்பு இன்னும் நெருக்கமாக அமைந்தது உபரி தகவல்.. அன்னாரது மறைவு ராணி குடும்பத்தில் பேரிழப்பாகும்.. ராணி காமிக்ஸ் வாசகரான நாம் திரு.ராமஜெயம், திரு.அ.மா.சாமி ஆகியோர்களை கேள்விப்பட்டிருப்போம்.. இவர் ராணி ஆசிரியராக எனக்குத் தெரிந்து சுமார் பன்னிரண்டுஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றினார்.. இவரை இழந்தது ராணி காமிக்ஸ் வாசகரான நமக்கும் பேரிழப்பே.. அவரது நினைவாஞ்சலியாக இந்த மொழிபெயர்ப்பை சமர்ப்பிக்கிறேன்..  
**************************

வெள்ளைக்கண் புரபஸர் வாலஸை நினைவிருக்கிறதா?
ராட்சதபல்லி, மந்திர மண்டலம்,பூனைக் கண் மனிதன் மற்றும் கொலைகாரக் கூட்டம் ஆகிய ராணி காமிக்ஸ்கள் அதிரடி சிறுவர்கள் நிக் & டானை மையப்படுத்தி வந்தவை..
ஒரு வித வாயுவைப் பாய்ச்சி அல்லது சின்னஞ்சிறிய பிராணிகளை பிரம்மாண்டமாக்கி உலகை அச்சுறுத்தும் கொடியவர்கள் கைகளில் சிக்கினால் என்னாகும் என்பபதை சித்திரங்களில் காண்பித்து கதிகலங்க விட்டிருப்பார்கள்... அதன் தொடர்ச்சியில் ஒரு சம்பவமே இந்த கதை.. 

கதைப்படி க்ரீச் தனது கொடிய வாயுவை பாயவைக்குமிடத்திலெல்லாம் பாதிக்கப்படும் மனிதர்கள், உயிரினங்கள் வெள்ளைக் கண் கொடூரர்களாக உருமாற்றம் அடைவதுடன் க்ரீச்சின் அடிமையாகவும் செயல்படுகிறார்கள்.. இவர்களைக் கொண்டு பிரிட்டனை அழித்தொழித்து உலகை ஒரு கை பார்ப்பதையே இலட்சியமாகக் கொள்கிறார் க்ரீச்.. இதனை முறியடிக்க நம் ஹீரோக்கள் நிக்கும், டானும் களமிறங்க.. நடந்தது என்ன என்பதே கதை.. 
கதை வசனங்கள் இன்றே வாசித்து மகிழவும் ஓவியங்களோடு வாசிக்க ஏற்ற விதத்தில் பின்னர் உங்களை தக்க சமயத்தில் வந்தடையும் வரை காத்திருக்க இயலாதவர்களுக்காகவும் வசங்கள் இதோ...




எஸ்ரா க்ரீச்.. கொடூர குணமுள்ளவன்.. அவனிடம் வெள்ளை வாயு இருந்தது. அதை வைத்து யாரையும் தன்வசப்படுத்திக் கொள்வான்.  வெள்ளைவாயுவின் தாக்குதலுக்குட்பட்டவர்கள் க்ரீச்சின் ஆணைக்கு அடிபணிவர். கொடூர குணமும், அதீத வலிமையும் அவர்களுக்கு வெள்ளை வாயுவால் கிடைக்கும்..பிரிட்டனை பிடிப்பதில் படுதோல்வியை அவன் சந்தித்தான்.. கொஞ்சகாலம் அவனைப்பற்றி ஏதும் தகவல் இல்லாமல் இருந்தது. இராணுவ-காவல்துறை இணைப்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ப்ரிகேடியர் பெர்விக்கை அரசு நியமித்தது..


ஒரு நாள்..

க்ரீச் அடுத்து எங்கே தலைகாட்டுவான் என தெரியவில்லை. நீங்கள் இருவரும் இதில் உதவுங்கள்.


துவக்கத்திலிருந்தே நிக்கும் டானும் இதில் உதவி வருகின்றனர்..


வெள்ளைக்கண் வாயுவை அவன் உபயோகித்த போதிருந்தே அவனை விரட்டி வருகிறோம்..



பலமுறை அவனை கைது செய்யும் அளவு நெருக்கத்துக்கு போயிருக்கிறோம்..


நல்லது. அவனைப்பற்றி தெரிந்தால் உடனே இந்த எண்ணை தொடர்புகொள்ளுங்கள்..அதிரடிப்படையை அனுப்பி வைக்கிறேன்..


எங்களை நம்பலாம் சார்.



எஸ்ரா க்ரீச் புதுத் தாக்குதலுக்கு ஏற்கனவே ஆயத்தமாகிவிட்டிருந்தான்.


அதோ தெரியும் பிரிட்டனின் இரகசிய ஆயுதத் தொழிற்சாலையை கைப்பற்றி நம் பலத்தை காட்டுவோம்..


கடைசித்தாக்குதலின்போது நிகழ்ந்த விபத்தில் அவனது கால்களை இழந்து விட்டிருந்தான்..



புதுவிதமான துப்பாக்கிகளும், கையெறி குண்டுகளும் அங்கே கொட்டிக் கிடக்கின்றன..அவை நமக்கே சொந்தமாக வேண்டும்..


அங்கே உலவிக் கொண்டிருக்கும் பாதுகாவலர்களை நமது அடிமையாக்க வெள்ளை வாயுத்தாக்குதலை இப்போதே துவக்கிவிடுவோமா பாஸ்..? 


அவர்கள் ஏற்கனவே என்னைப்பற்றிக் கேள்விப்பட்டிருப்பதால் தகுந்த பாதுகாப்பு முகமூடிகளோடுதானிருப்பார்கள்..உள்ளே நுழைய வேறு விதமாக பலப்பிரயோகம் செய்யப்போகிறோம்.. 


Page 2


சரியான நேரத்தில் போதுமான பலத்தோடு தாக்குவோம்.. 

அதற்கான வழிகளைத் தேடுங்கள்..



பிற்பகலில்..


ஆஹா.. திகிலைக் கிளப்பும், அழிவைத் தரும் ஆயுதங்கள் அதோ இருக்கின்றன..



வாயுவை வீசலாமா பாஸ்?


பொறு.. அவர்கள் கீழே அனைத்தையும் இறக்கி வைக்கட்டும்.. தேவையானதைப் பொறுக்கிக் கொள்வோம்..


சர்க்கஸ் துவங்கிவிட்டது. போய் லாரிகளை சொந்தமாக்குங்க தோழர்களே..



நண்பா ஒன்று சொல்லவா?


சொல்லுங்க.. ஸ்பார்க் ப்ளக்கை சரி பண்ணிட்டிருக்கேன்..


மறுவினாடி..


இப்போது நீ எங்களில் ஒருவன்.. என் வார்த்தைக்குக் கட்டுப்படு..



உன் தோழர்களை அழை..



சரி மாஸ்டர்.. ப்ளாக்கி இங்கே வா..

Page-3

க்ரீச்சின் ஆட்கள் அனைவரையும் அடிமைகொண்டனர்..


கொல்..


கொல்..


உங்க லாரிகளை தயாராக வைங்க..நீங்க கொண்டாடுறமாதிரி ஒரு வேலை இருக்கு..


நாங்க ரெடி..


பொதுமக்கள் சர்க்கஸூக்கு வரத்துவங்கியிருந்தார்கள்..


பாஸ்..நம்மிடம் இத்தனைப்பேருக்கு வாயு இல்லையே..


முட்டாளே..நாம இப்போ விலங்குகளை வசப்படுத்தப்போகிறோம்..


நிக்கும், டானும் அங்கே வந்தனர்..


சர்க்கஸூக்குப் போவோமா?


போகலாம்.. க்ரீச்சைத்தான் எங்கேயும் காணோமே..


நிக், டான் இருவரது ஸ்கூட்டர்களையும் அங்கே நிறுத்தியபோது..


ஹேய்..இங்கே வராதீர்கள்..விலங்குகள் மிரண்டுவிடும்..வெளியே போங்கள்..


அதுதானடா எனக்கு வேண்டும்...


மறுவினாடி..


எல்லா மிருகங்களுக்கும் வாயுவைப்புகட்டி அவிழ்த்து விடுங்கள்.. இரணகளம் துவங்கட்டும்..ஹாஹாஹா..



ஆஆஆ..



க்ரீச்சின் புதுக்கூட்டணி அனைவரையும் மிரண்டோட வைத்தது.


ஹாங்ங்ங்க்..


அதற்கு மதம் பிடித்திருக்கு.. வெளியே ஓடுங்க..


Page-4

ர்ர்ரா... 


ஐயோ..நிறுத்த முடியலையே..


உதவி..


அந்த கொரில்லா தப்பியோடுது..


நாம அவங்களுக்கு உதவுவோம்..


ஆனால்..


பின்னாலே பார்.. நம்மைக் காப்பாத்திக்குவோம் ஓடு டான்.


அது நம்மைத் துரத்துதே..


அடக்கடவுளே.. எல்லா விலங்குகளுமே வெளியே வந்திருக்குங்க..


நாம வலைகளையும், பராமரிப்பாளர்களையும் தேடிப் பிடிச்சாகணும்..


பிரயோஜனமில்லை.. அதன் கண்ணைப் பார்.



வெள்ளையா இருக்கே..


அதே.. க்ரீச் இங்குதான் இருக்கார்.


ஹிஹி..மொத்த நகரமும் கதிகலங்குது.. நம்ம படையை இலக்கை நோக்கி திருப்புவோம்..



Page 5

நிக், டான் இருவரும்தேடலைத் துவக்கினார்கள்.


அதோ அந்த ட்ரைவர்களுக்கு விழி வெள்ளையாக இருக்கின்றன.. க்ரீச்சின் அடிமையாகிவிட்டார்கள் போலிருக்கிறது..


அவர்களைப் பின்தொடர்வோம். போன் செய்து வீரர்களை உஷார்ப்படுத்துவோம்..



நகரமே அச்சுறுத்தலுக்குள்ளாகிக் கிடந்தது..


விலங்குகள் வெளியே சுற்றிக் கொண்டிருக்கின்றன..


சுற்றி வருதா.. அங்கே பார்..



மறுநொடி..


ஆஆஆஆ..


வெள்ளைக்கண் பட்டாளம் நகரைவிட்டு வெளியேறியது..


கிறுக்கர்கள்.. சிவப்பு விளக்கை மதிக்காமல் போகிறார்கள்...போலீசை அழை..


சிதவுகளுக்கிடையே ஒரு போன் பூத்தை டான் கண்டுபிடிக்க..



உஷார்...க்ரீச் நிறைய ஆட்களோடு வடதிசையில் போகிறார்..நாங்க பின்தொடர்கிறோம்..




ஏதோ பெருசா ஒரு திட்டம் அவரிடம் இருக்கு...சந்தேகமேயில்லை..



அடச்சே..அவர் இரகசிய ஆயுதக் கிடங்கை நோக்கித்தான் போகிறார்..



Page 6


பின்னர்

முன்னேறி வாருங்கள்.. வந்து தொழிற்சாலையை உடைத்துத் தள்ளுங்கள் தோழர்களே..


மறுவினாடி



நிறுத்து முட்டாளே..


தாக்கறாங்க..

டமால்..



ஆஆஆ..


அருமை பாஸ். நாம சாதிச்சிட்டோம்.



இரண்டாவது தடுப்பில்..


அவன்களின் டயரைக் குறிவை..



இல்லையில்லை.. நாம டிரைவர்களைக் குறி வைப்போம்..


ஆனால் வெள்ளைக் கண் மனிதர்கள் அதையும் மீறி முன்னேறினர்..


ஆயுதக்கிடங்கு நம்வசம்.. அட்டகாசமான ஆயுதங்களை அள்ளுவோம்..



கணினிமயமான ஆலையாதலால் குறைவான பணியாட்களே அங்கே இருந்தனர்.


வெள்ளைக் கண் மனிதர்களின் தீரத்துக்கு முன்னால் எவருமே நிற்கவியலாது.



சீக்கிரமாக துப்பாக்கிகள், வெடிகுண்டுகளை சேகரித்துக் கொண்டு ஓடிவிடுவோம் தலைவா..


ஆனால் நிக்கும், டானும் நைசாக உள்ளே புகுந்து விட்டனர்.




அதோ க்ரீச்சின் வேன்.. இராணுவம் வரும்வரை அவரை தேக்கி நிறுத்துவோம்..



அப்படியே செய்யலாம்


வேனை இனி கிளப்பமுடியாது...


ஆஹா..இராணுவம் வந்தாச்சு.. யுத்தம் துவங்கப்போகுது நிக்..


Page 7

வெற்றி.. இந்த ஆயுதங்கள், மிருகங்கள், அடியாட்கள் துணையோடு மாபெரும் பேரழிவை நிகழ்த்துவேன்..


ஆனால் இராணுவத்தினர் அனைத்தையும் சமாளிக்கத்தகுந்த முன்னேற்பாடுகளோடு களத்தில் பாய்ந்து வந்தனர்.


கருணை காட்டாமல் கடுமையாக தாக்குங்கள்.. இம்முறை க்ரீச்சை உயிருடனோ பிணமாகவோ நாம் பிடித்தாக வேண்டும்..


வாழ்வா..சாவா.. போராட்டம்..


க்ரீச் இன்னும் உள்ளேதான் இருக்கிறான். பின்னால் காவல்துறை சுற்றி வளைத்தாயிற்று.. முன்னால் நாம் மடக்கிப் போட்டுவிட்டோம்..


உயரதிகாரியொருவர் ஹெலிகாப்டரில் விரைந்து வந்திறங்கினார்.


பார்த்தால் நமது ஆட்களின் கை ஓங்கிவிட்டது தெரிகிறது.. இம்முறை வெள்ளைக்கண்பட்டாளத்தை நசுக்கிப் போட்டுவிடலாம். என்னை இறக்கி விட்டுவிட்டு  ரோந்தில் இரு..


சரி சார்.



முடக்கிப் போட்டு விட்டோம் சார். தீ கட்டுக்குள் வந்ததும் உள்ளே போய் தாக்கலாம்..


நல்லது.. உயிரிழப்பை தவிர்க்கவும்.. மூலையில் முடங்கிய விலங்குகளைப் போல் பாய்ந்து வருவார்கள்..


புகையின் மறைவில் தப்பியோட எத்தனிக்கும் க்ரீச்சை நிக்கும், டானும் கவனித்து விட்டனர்.


வேனை முடக்கிப்போட்டு விட்டார்கள் தலைவரே..


எவனோ உளவு பார்த்து இராணுவத்தை வரவழைத்திருக்கிறான்.. திட்டம் படுதோல்வி..நான் தப்பியாக வேண்டும்..


எச்சரிக்கை..அவர் நம்மைக் கவனித்து விடப்போகிறார்..

பக்கம்-8 

க்ரீச் ஹெலிகாப்டரைப் பார்த்து விட்டார்..


ஹெலிகாப்டர்..ஆஹா..வாய்ப்பு தேடி வந்திருக்கிறதே..



அடக்கடவுளே.. புகைத்தாக்குதலை தடுத்தாக வேண்டும்..


வேகமான புகைத்தாக்குதல் ..



ஏய்..யாரது..ஆஆஆ..


என் ஆணைக்கு அடிபணியுங்கள்.. ஹெலிகாப்டர் என்னை ஏற்றிக் கொண்டு புறப்படட்டும்..


மறுவினாடியே..


சார்..ஹெலிகாப்டரில் க்ரீச் தப்புகிறார்.



ஆனால்..விமானி?


க்ரீச்சின் வெள்ளைக்கண் வாயுத்தாக்குதலுக்குள்ளாகிவிட்டார்கள்..



அடடா..அவர்களை காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே..



அந்த பயங்கர உண்மையை உணர்ந்து இராணுவ துப்பாக்கிகள் முழங்கின.. ஆனால்..



இம்முறை உயிர்பிழைத்ததே அரிதுதான். ஆனாலும் மீண்டும் வருவேன்.. பிரிட்டனும் உலகமும் எனக்கு அடிபணியும்வரை ஓயமாட்டேன்..


அடச்சே...ஒரு சில வினாடிகள் அந்த ஹெலிகாப்டர் தாமதித்திருந்தால் அவரை கைது செய்திருக்கலாம் சார்..


எப்படியோ தொழிற்சாலையையும், ஆயுதங்களையும் காப்பாற்றிவிட்டோம்.. என்றேனும் ஒரு நாள் சிக்காமலா போய்விடுவார்..?


முற்றும்..




தொடர்புடைய இடுகைகள்..




புதன், 16 செப்டம்பர், 2020

தனித்திரு..தணிந்திரு..ஜம்போ 16

 




Old pa anderson..

தனித்திரு..தணிந்திரு..தலைப்பில் ஜம்போ காமிக்ஸ் வெளியீடாக ரூ.நூறு விலையிலும் அறுபது பக்கங்களுடனும் வெளியாகியிருக்கிறது.. ஹெர்மான் ஓவியங்களால் உயிரூட்ட  ய்வெஸ்ஸின் கதை அனல் பறக்கிறது.. கதையின் தலைப்பை பழி தீர்த்த பாட்டனார் என்றுகூட மாற்றியிருக்கலாம்.. கருப்பினத்தவரை அத்தனை அநீதிகளுக்கும்  உட்படுத்தும் சமூக அமைப்பு.. குழந்தைகள் சாலையில் விளையாடுவதையும் அடக்கி வைக்க நினைக்கும் கொடூர மனம்படைத்தவர்களின் பூமி மிஸ்ஸிஸிப்பி.. பிரசவத்தில் இறந்துபோன தன் மகளின் மகளை தாயாய் பேணிப் பாதுகாக்கும் பெரியவர் ஆண்டர்ஸன்.. திடீரென அவள் காணாமல் போக அந்த சோகத்தில் தன்னுடைய மனைவியையும் பலிகொடுத்து விட்டு தனியே வாழும் ஆண்டர்ஸனுக்கு தன் பேத்தியின் நிலை என்ன ஆனது என தெரியவருகிறது.. அதற்குக் காரணமானவர்களை ரணமாக்கும் ருத்ர தாண்டவமே இக்கதை.. நெஞ்சை உலுக்கும் சோகத்தோடு கதை முடிகிறது... கானகத்தில் நடக்கும் திகில் துரத்தல்கள் வண்ணத்தில் மிரட்டுகின்றன. அநியாயம் என்று இழைக்கப்பட்டாலும் என்றாவது ஒரு நாள் சரியான "தீர்ப்பு தேடி வரும்.." (அடடே..இதைக்கூட தலைப்பாக்கியிருக்கலாமே... )

ஆண்டர்ஸனின் கரங்களைப் பற்றிக் கொண்டே கதைக்குள் குதித்தால் கண்டுணரலாம் அவர் காயங்களை... 

-ஜானி சின்னப்பன், தமிழ் காமிக்ஸ் டைம்ஸ்..

காயூஸ் செவ்விந்தியர் தாக்குதல் 1847 வரலாற்றுப் பின்னணி

 30,நவம்பர் 1847 கொடூரமான தினமாக அமைந்துபோனது விட்மேன் தம்பதியினருக்கு... 



ஒரேகான் வழித்தடம்

***மார்க்கஸ் விட்மேன் ஒரு இயற்பியலார் மற்றும் மிஷனரி.. 

தன்னுடைய மனைவி நார்ஸிஸ்ஸா விட்மேனுடன்  ஒரேகான் வழித்தடத்தில் காயூஸ் செவ்விந்தியர்கள் குடியிருப்பருகே அவர்களது ஆலயம் மற்றும் குடியிருப்பை அமைத்துக் கொண்டனர்..அனாதைப் பிள்ளைகளுக்கு அடைக்கலம் கொடுத்தும் அருகிலுள்ள செவ்விந்தியர்களுக்கு கல்வி கொடுத்தும் மருத்துவம் பார்த்தும் சேவையாற்றிக் கொண்டிருந்தனர்.. அவ்வப்போது தோல் வியாபாரம் செய்பவர்கள் ஐரோப்பாவிலிருந்து ஒரேகான் வழித்தடத்தில் அவ்வப்போது பயணம் மேற்கொள்கையில் அடைக்கலமளித்து வந்தது விட்மேன் குடியிருப்பு.. சுமார் ஆயிரம் பேரை அப்பகுதியில் குடியேற்றியதில் விட்மேனுக்கு பெரும்பங்குண்டு.. ஐரோப்பியர்கள் தத்தம் தேசத்தின் வியாதிகளை தாங்கி எதிர்ப்பாற்றலுடன் அமெரிக்கா வந்து சேர்ந்தபோது தம் நோய்க்கிருமிகளை இம்மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியர்களால் எதிர்கொள்ள முடியாது போனதால் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டு வந்த காலக்கட்டம் அது. தட்டம்மையானது இதுபோன்ற வணிகர்கள் மூலமாக மிஷனரிக்குள்ளிருந்த பிள்ளைகளுக்கும் பரவியது. ஐரோப்பிய பிள்ளைகள் பிழைத்துக் கொள்ள செவ்விந்தியப் பிள்ளைகள், பெரியவர்கள் என சுமார் இருநூறு பேருக்கும் மேலாக மரணதாண்டவம் நிகழ்ந்தது.. ஐரோப்பியர்களின் இயற்கையான நோய் எதிர்ப்பாற்றலே இதற்கு காரணம் என்றபோதிலும் தம் இனத்தவர் மாத்திரம் மரணத்தை தழுவ வெள்ளையர்கள் பிழைப்பது எவ்விதம் என்ற கேள்வி காயூஸ் இனத்தவரின் மனதை அரித்துக் கொண்டே இருந்த நிலையில்தான் அந்த விபரீதம் உருப்பெற்றது.. 1847 நவம்பர் 29-30 ல் காயூஸ் இனத்தலைவர் டிலோக்கெய்க்ட் தலைமையில் வெள்ளையர்களின் குடியிருப்பினை துவம்சம் செய்து தீக்கிரையாக்கினர்.. விட்மேன் தம்பதியினர், பிரபல அரசியல் அறிஞர் ஆலிவர் கேம்பெல் உள்பட 14 வெள்ளையர்கள் மோதலில் பலியானார்கள்..

53 பெண்கள், சிறுவர்களை காயூஸ் இனத்தவர்  பிணைக்கைதியாக்கிக் கொண்டனர்.. சுமார் ஒரு மாதகாலம் நிகழ்ந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் அனைவரும் விடுவிக்கப்பட்டாலும்..அது ஆரம்பம் மாத்திரமே.. 1855 வரையிலும் ஏகப்பட்ட குடைச்சல்களை காயூஸ் செவ்விந்தியர்கள் கொடுத்து வந்தபின் அவர்களது யுத்தத்தின் பலன்களாக சில பிரதேசங்களை அமெரிக்கா அவர்களுக்கு ஒதுக்கி உடன்படிக்கை செய்து கொண்டது..


மார்க்கஸ் விட்மேன் நினைவாக ஒரு சிகரத்துக்கே பெயரிடப்பட்டது.. அவரது ஆளுயர சிலையொன்று வாஷிங்டனில் அமைக்கப்பட்டுள்ளது.. விட்மேன் பெயரில் கல்லூரிகளும், பள்ளிக்கூடங்களும் அமெரிக்காவின் பல்வேறு பகுதியிலும் இன்றளவும் இயங்கி வருகின்றன.. 

மார்க்கஸ் விட்மேனின் கல்லறை, வல்லா வல்லா, வாாஷிங்டன்
விட்மேன் சிகரம்
தோல் விியாபாரிகளின் அங்காடி

அந்நாளைய பிரபல பத்திரிக்கை

காயுஸ் செவ்விந்தியர்கள் வீரத்துக்கும், குதிரையேற்றத்துக்கும்  பேர்போனவர்கள்..

வலிமையான இனமாதலால் சுற்றியுள்ள இனத்தவரை அடிமைப்படுத்தவும் கொள்ளையடிக்கவும் செய்தனர். வேட்டையிலும், வர்த்தகத்திலும் சூரர்கள்.. குதிரைகளைப் பழக்குவிப்பதில் தலைசிறந்து விளங்கியதாலேயே இன்றைக்கும் காயுஸ் குதிரைகள் என சிறப்பானதொரு இனமே அமெரிக்க இராணுவப்பிரிவில் உள்ளது. அளவில் சிறியதாக இருப்பினும் அவை காயுஸ்களால் நன்கு பழக்குவிக்கப்பட்டு நான்கு அடிக்கு சரேலென எகிறிப் பாய்வதைக் கண்டு 1873ல் ஸ்க்ரிப்னர்ஸ் மாதப் பத்திரிக்கை அந்நாட்களில் கட்டுரையில் பிரசுரித்திருந்தனர். அப்பத்திரிக்கை 1870-1881வரை நடத்தப்பட்டு பின்னர் விற்பனை செய்யப்பட்டுவிட்டது.. அதனை வாங்கி செஞ்சுரி பத்திரிக்கை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது கொசுறு சேதி..

நிற்க. டெக்ஸ் வில்லரின் "பந்தம் தேடிய பயணம்", லயன் வெளியீடு செப்.2020யில் இந்த ஒரேகான் வழித்தடமும், வெள்ளையர் குடியேற்றப் பகுதியும், காயுஸ் செவ்விந்தியர்களும் கதையோட்டத்தில் சுட்டிக் காண்பிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தமிழ் காமிக்ஸ் ஆர்வலர்களுக்கான சிறப்புத் தகவல்..

-ஜானி சின்னப்பன், தமிழ் காமிக்ஸ் டைம்ஸ்.. 

நீதிதாஸ் சாரின் கருத்து..

இதனை வழங்கிய ஜானி சாருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

இதில் எனது கருத்து என்னவென்றால்,நீங்கள் இன்னொரு நாட்டிற்குச் சென்று நல்லதே செய்தாலும்,இந்த ஆணியை உங்க ஊருலியே பிடுங்கலாமே என்பதுதான் அந்த மன்னர் ந் மக்களது நிலைப்பாடாக இருக்கும்.நம் நாட்டிலேயே இதை நாம் பார்த்திருக்கிறோம்.

ஆங்கிலேயர்களைப் பொருத்தவரை நாகரிகம் பண்பாடு சொல்லித்தருகிறோம் என்பார்கள்.செவ்விந்தியர்களின் பண்பாடு ஏறக்குறைய தமிழர்களின் பண்பாட்டுக்கு இணையான பழமையான பண்பாடு.

நெசவு,விவசாயம்,கடவுள் வழிபாடு,வானவியல்,மருத்துவம்,சிற்பம்,ஓவியம் போன்ற துறைகளில் எகிப்துக்கு இணை சொல்லக்கூடிய நாகரிகம் அவர்களுடையது.தமிழரைப்போலவே இயற்கையை வணங்கி அதையே தங்கள் வாழ்வாகக் கொண்டவர்கள் செவ்விந்தியர்.

இப்படி இருக்க,உருவ வழிபாட்டை முற்றிலுமாக ஒதுக்கும் கிறித்துவ மதத்தையும் அதைப் பரப்புகின்ற மிஷனரிகளையும் எதிரிகளாக செவ்விந்தியர் பார்த்ததில் வியப்பேதுமில்லை.

ஏற்றுக்கொண்டவர்களுக்கு உணவும் வசதிகளும் ஏற்காதவர்களுக்கு தோட்டாக்களும் வழங்கப்பட்டுதான் அமெரிக்கா வசப்படுத்தப்பட்டது.

கடவுளர் சாபத்தால் நோய்கள்,இயற்கை சீற்றங்கள் உருவாகின்றன என்பது பழங்குடியுனரிடையே உள்ள உலகளாவிய நம்பிக்கை.இப்படியிருக்க வெள்ளையர்கள் மட்டும் பிழைப்பதில் ஏதோ உள்குத்து இருப்பதாக செவ்விந்தியர் கருதியதில் வியப்பேதுமில்லை.Herd immunity பற்றி இப்போதுள்ள அறிஞர்களுக்குள்ளே சந்தேகம் நிலவும்போது அந்தக் காலத்தில் செவ்வி தியர்களை இது குழப்பியிருக்கும் என்பது நிஜம்.

சொல்லப்பால்,நோயாளிகள் பயன்படுத்திய கம்பளிகளை வெள்ளையர்கள் செவ்விந்தியர் பகுதியில் திருட்டுத்தனமாக போட்டுவிட்டு வந்ததும் அதன்மூலம் பரவிய அம்மை நோய்க்கு ஏராளமான செவ்விந்தியர் பலியானதும் வரலாற்திலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்து,பண்டமாற்று.முறையில் தங்கள் வாழ்வியலை அமைத்துக்கொண்ட செவ்விந்தியருக்கு தோல் என்பது முக்கிய வணிகப்பொருள்.தோலும்,கம்பளியும் குளிர் மிகுந்த நி லப்பரப்பில் உயிர்வாழ உணவுக்கு அடுத்தபடியாக தேவைப்படுபவை.ஆண்டுதோறும் வேட்டைக் காலத்தில் சேகரிக்கக்கூடிய மாமிசமும் தோலும் கம்பளியும் அடுத்துவரும் குளிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ளும் தெம்பைக் கொடுப்பன.கத்திகளையும் வில் அம்பையும் வைத்து செவ்விந்தியர்கள் மேற்கொண்ட வேட்டை மனிதர் விலங்கு எண்ணிக்கையில் சம நிலையைப் 👸 வந்த நிலையில் தோட்டாக்களையும்,கருமருந்தையும் கையில் எடுத்துக்கொண்டு களமிறங்கிய வெள்ளையர்களின் வேட்டை வேகம் செவ்விந்தியரை எதிர்காலம் குறித்த பேரச்சம் கொள்ள வைத்திருக்குமெபதில் சந்தேகமே இல்லை.

வேட்டை சமூகம் எப்போதுமே ஆயுதத்தால்தான் பேசும்.எனவே மோதல்கள் தவிர்க்க முடியாதவை என்றாகிடும்போது பறிபோகும் மனித உயிர்களுக்காக ஏதும் செய்ய முடியாத கையறு நிலை இரண்டு பக்கத்திலுமே சமம்.ஆனால் மண்ணின் மைந்தர்களுக்கோ பறிபோவது வெறும் நிலம் மட்டுமல்ல....

என் பதிலுரை:

தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சார்.. நானறிந்ததை கூடுமானவரை  அப்படியே தமிழில் தர முயற்சிக்கிறேன். இதில் இன்னொரு தலைவலியையும் சேர்த்தே கிளப்பி விட்டனர். கத்தோலிக்க மிஷனரிகளுக்கும், ப்ராட்டஸ்டன்ட் மிஷனரிகளுக்குமிடையே பிரச்சினை வெடித்தது. அதன் விளைவாக பாதிரிகள் ஆங்காங்கேசுட்டுக் கொல்லப்பட்டதும் நிகழ்ந்தது.. பழி செவ்விந்தியர்கள் தலையில் சுமத்தப்பட்டு ஏகப்பட்ட உயிர்பலிகள்..

ஆக ஐரோப்பாவை சேர்ந்த வெள்ளையர்களே வெங்கலக்கடை யானையாக அமெரிக்க கண்டத்தில் புகுந்து தம்போக்கில் வாழ்ந்த சிவப்பிந்தியர்களின் வாழ்க்கையை குழப்பி அழித்தொழித்துள்ளனர். தம்முள்ளும் ஒற்றுமையின்றி அடித்துப்பிடித்து ஒவ்வொரு பகுதியாக அவரவர் தேசத்துக்கு விசுவாசம்  காட்டியதும்.. மதச்சண்டைகளை அமெரிக்காவிலும் விரிவாக்கம் செய்ததும் வரலாறு..



ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

வேதாளர் வண்ணத்தில் முதல்முறை தரிசனம்

13,செப்டம்பர் இதே தினத்தில் 1936ஆம் ஆண்டு எல்அவ்வென்சுரோஸ்ஸோ 
(L'avventurosso) என்கிற வாராந்திர பத்திரிக்கையில் முழு வண்ணத்தில் அறிமுகமானார் வேதாளர். Uomo Mascherato என்ற பெயருக்கு நடமாடும் நிழல் என்றும் அர்த்தமுண்டு. அப்பெயரில் இத்தாலியில்  அறிமுகமாகி பெரும் வெற்றி கண்டார்.. 

 தொடர்புடைய இடுகைகள்:

https://phantomraymoore.wordpress.com/2020/05/16/1st-appearance-of-the-phantom-or-uomo-mascherato-in-a-weekly-comic-magazine-italy-13th-september-1936/


https://it.m.wikipedia.org/wiki/Uomo_mascherato

*ஜானியின் அசுர வேட்டை*

 


*விறுவிறுப்புக்கும் சுறுசுறுப்புக்கும் பஞ்சமே இல்லாத*
*ஜானியின் அசுர வேட்டை*
*புத்தம் புதிய மொழிபெயர்ப்பு படக்கதை பிடிஎஃப்*
*மறு பதிப்பு*
அஸ்கார்ட்.....
கடவுளர்களின் விதியால் கொல்லப்பட வேண்டிய சூழ்நிலையின் கைக்குழந்தை. தந்தையின் கருணையால் உயிர் பிழைக்கிறான். வளர்ந்ததும் அவனது லட்சியமே கடவுளர்களால் உருவாக்கப்பட்ட மிருகங்கள் என சொல்லப்படுவதை கொல்வதே. அப்படிப்பட்ட ஒரு மிருகம் தான் கிரேக்கன்...

அதன் வாழ்வு முறையோ வித்தியாசமானது .. கடலில் செல்லும் மீனவர்களின் படகுகளை ஒரு உயிர் கூட தப்ப முடியாமல் அழிப்பது அதன் பொழுதுபோக்கு.. கூலியாக தரப்பட்ட ஒரு பெரும் தொகைக்காக அதைக் கொல்ல கிளம்புகிறான் அஸ்கார்ட். கடவுளர்களை நம்புகிறவர்களும் நம்பாதவர்களும் செய்யும் உயிர்த் தியாகங்கள் மெய்சிலிர்க்க வைப்பதுடன் அஸ்கார்டின் வேலைகளை தாமதமும் செய்கின்றன..

இவை அனைத்தையும் மீறி அஸ்கார்ட் தனது முயற்சியில் வெற்றி பெற்றானா என்பதை மிகவும் விறுவிறுப்பான சம்பவங்களில் சுறுசுறுப்பாக சொல்லும் இந்த புத்தம் புதிய படக்கதையின் அருமையான மொழிபெயர்ப்பு விநாயகர் சதுர்த்தியின் விடுமுறை கொண்டாட்டமாக உங்களுக்கு அமையும்...

நேர்மையான காவலர் ஜானியின் வீரியமான மொழிபெயர்ப்பு சரளமான நடையில் வசீகரிக்கும் நேர்த்தி ஒருபுறம்...
தேவைப்பட்ட அளவுகளில் இன்னும் அழகாக்கும் ஃபாண்ட்களில் பலூனில் அடைக்கப்பட்ட தமிழ் வசன பதிவும் டும் ..  தட்டால்.. போன்ற முழுமையான தமிழ் டிஜிட்டல் எஃபெக்டுகளும் மதுரை மாமனிதர் இளங்கோவால் அற்புதமாக வடிவமைக்கப்பட்டு மனதை கொள்ளைகொள்ளும் சிரத்தை மறுபுறம்....
இவற்றின் நடுவே கடலின் நடுவே நடக்கும் காட்சிகளாகட்டும்... கடுமையான மலங்காடுகளும் பனியால் மூடப்பட்ட சிகரங்களின் சித்திரங்கள் ஆகட்டும்...
மிக அழகிய முழு வண்ண படங்கள் உங்களை பைத்தியமாகவே ஆக்கும். மிகச் சிறப்பான இந்த படக்கதையில் பிடிஎஃப்👇
இணைப்பு

http://bit.ly/2jPWCvH

*விறுவிறுப்புக்கும் சுறுசுறுப்புக்கும் பஞ்சமே இல்லாத*
*ஜானியின் அசுர வேட்டை*
*புத்தம் புதிய மொழிபெயர்ப்பு படக்கதை பிடிஎஃப்*

#COMICS_PDF_TIMES

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...