வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

*தீராத தாகங்கள்..*_ஜானி சின்னப்பன்

 


துடித்தே 

தேய்ந்து போன 

நிமிடங்களின் ஏக்கங்கள்.. 


காத்திருந்தே

காய்ந்து போன

கண்ணீர்த் துளிகள்..


நிம்மதியைப்

பறித்துப்போன 

நிலைக்கா விநாடிகள்.. 


அனலைக் கிளப்பிப் 

புகையாய் மறைந்த

வெப்ப மூச்சின் 

துக்கங்கள்...


இயக்கம் நின்ற

இரத்தம் சுண்டிய

இதயத் துடிப்புகள்..


ஆழ்கடலின் அழுத்தமிகு 

காரிருள் அமைதியாய் நீ..

கடும் புயலொன்றில்

சிக்கி சேதாரமான

சிறு படகாய் நான்..


வெறிக்கும் கண்ணின் 

நிச்சலனம் பெருங்காவியம் 

ஒன்றை மௌனத்தின் 

பிரபஞ்சத்தில் எழுதிப் போகிறது..


நான் சென்று விட்டவன்..

உடல் விட்டு விலகியவன்..

தனியன்..


ஆன்மாவாய் 

பிரபஞ்சம் தாண்டிப் 

பயணிப்பவன்..


இப் பாழும் இருளிலும் 

உன் நினைவலை

துரத்திப் பிடித்தென்னை 

அடிக்கும் துயரின் ஆணி உனக்கென்ன தெரியுமடி 

என் காதலைப் பற்றி...?!?!?


_ஜானி சின்னப்பன்..

_ஓவியம்_Lesndro cano bazan க்யூபா நாட்டு ஓவியர்..art credits..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...