ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

ஜென்மஜென்மமாய்..._ஜானி சின்னப்பன்

 


ஏன் இப்படி?

என்கிறாய்..

எப்போதுமே 

இப்படித்தான் 

இவன் 

என்பதை 

எத்தனை 

எளிதாக 

மறந்து போனாய்..

உனை சந்தித்த

அந்நொடி

அதிர்வை 

அகத்தில்

உணர்ந்தேன்..


நீ என்னவள்

என..


இன்றல்ல 

நேற்றல்ல 

ஜென்ம

ஜென்மமாய் 

தொட்டுத்

தொடர்ந்து 

வரும் நம் பந்தம்..

அடி

பேதைப் 

பெண்ணே..

உன்னுள் 

உன்னைக் 

கேட்டுப்பார்.. 

உற்றுக் கேள்.. 

அதே 

அலை அங்கும்..

அறிவாய்.. 


ஆழ்கடல்

நிச்சலனமாய்

அமைதியோடு

காத்திருப்பேன்..

கைசேர்வாயா

காரிகையே..


_ஜானி சின்னப்பன்..


#கவியதிகாரம் #ஜானி #jscjohny #chapterpoet

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

The Road Graphic Novel_intro அறிமுகம் மற்றும் கதைச்சுருக்கம்..

 வணக்கம் நண்பர்களே..  இது குருத்தோலை ஞாயிறு. இயேசு கிறிஸ்து தன் பாடுகளுக்கு முன்பு எருசலேம் மாநகரில் கோவேறு கழுதையின் மீது வந்து இறங்கும் தி...