திங்கள், 9 ஆகஸ்ட், 2021

திகில் கிராமம்_முன்பதிவுகள் துவக்கம்..

 பிரியமுள்ள சிநேகிதங்களுக்கு,

வணக்கம்.. வெகு ஆவலைத் தூண்டியுள்ள ரூனி காமிக்ஸ் முதல் வெளியீடு "திகில் கிராமம்"

முன்பதிவு ஆரவாரமாக துவங்கி உள்ளது.  

அதன் முன் பதிவுக்கான சுட்டி இதோ:

திகில் கிராமம்_Rooney Comics

கதையில் வரும் பாத்திரங்கள் நம்மை வெகுவாக பாதிக்கும். ஏதோவொரு அம்சம் நம்முடன் ஒன்றிப்போகும். நிறைய அதிரடிகள், அச்சமூட்டும் நிகழ்வுகள், ஏமாற்றங்கள், பழிக்குப்பழி என்று சகல விதத்திலும் விருந்து படைத்து சாதித்த கதைக்களம் அதுவும் தமிழ் நாட்டில் நிகழ்வதாக சொல்லப்பட்ட கதைக்களம் இத்தனை வீரியமாகவும், விறுவிறுப்புடனும் சமீபத்தில் எதுவும் வாசித்ததில்லை என்று வாசகர்கள் விரைவில் சொல்வார்கள் என்பது உறுதி.. 

திகில் கிராமம்_Rooney Comics

முன்பதிவு நேற்று முதல் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வாசகர்கள் தங்கள் ஆதரவை இந்தத் தமிழ் மண்ணில் திரளென குவித்து ஆதரிக்க இன்னும் ஒரு காரணம் இதோ...

கேரவன் என்கிற பெயரில் இந்திய லெவலில் சாதித்த மாபெரும் வெற்றி பெற்ற காமிக்ஸ் அடுத்த வெளியீடாக லோன் வுல்ப் பப்ளிகேஷனால் ரூனி காமிக்ஸ் இரண்டாவது பிரம்மாண்ட வெளியீடாக பட்டையைக் கிளப்ப வரப்போகிறது.. இந்த அழகான இரத்தக்காட்டேரிகளின் நடன நிகழ்ச்சியை ஆதரிப்போம் வாசக நண்பர்களே!

என்றும் அதே அன்புடன்,
உங்கள் இனிய நண்பன் ஜானி!



8 கருத்துகள்:

  1. வருக..வருக..அருமையான கதைகளை தருக..

    பதிலளிநீக்கு
  2. மிகவும் மகிழ்ச்சியான தருணம் இது. தமிழ் காமிக்ஸ் காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் எனது எனது எனது ஆதரவு என்றும் உண்டு.வாழ்க வாழ்க வாழ்க❤❤❤❤❤❤

    பதிலளிநீக்கு
  3. தோழரே, மிக நல்ல செயல் காமிக்ஸ் உலகிற்கு சேவை செய்யும் ஒவ்வொரு வரையும்,(இது சேவைதான் வியாபாரம் அல்ல)நான் மனதார பாராட்டுவதில்,பெருமிதம் அடைகிறேன். மேலும் உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் நன்றி.


    பதிலளிநீக்கு

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...