வெள்ளி, 7 ஜனவரி, 2022

ப்ரியமானவனே..ஜானி சின்னப்பன்

ஞமலியெனினும் 
தோழனெனினும் 
துணைவன் நீயே.. 
கைப்பிள்ளையாய் 
மடியில் வைத்துக் 
கொஞ்சிய மழலை நீ.. 
காடுமேடெங்கும் 
காவலாய் உடன் வந்த 
நெடுங்கால நண்பன் நீ.. 
கயவரை அணுகவிடாமல் என் 
குடிசையைப் பாதுகாப்பதில் 
நல்லதொரு காவலனும் நீ..
கடைசிவரை வாலாட்டி 
உன் குரலால் தாலாட்டி 
கூடவே துணை நிற்பாய் 
தோழனே.. 
உனக்கீடாய் உறுதுணையேதும் 
உண்டோ உலகிலே.. 
ஜானி சின்னப்பன்


 

2 கருத்துகள்:

ஜோஸ் ஆர்டிஸ் Jose Ortiz சிறு குறிப்புகள்..

ஸ்பானிஷ் ஓவியர் ஆவார்.. முர்சியா பிராந்தியத்தில் உள்ள கார்டகேனாவில் பிறந்தார். அவரது வாழ்க்கை சிறு வயதிலேயே தொடங்கியது, 1948 இல் ஸ்பானிஷ் பத...