பிரியமிகு தோழமை நெஞ்சங்களே! இனிய வணக்கங்கள்!
எனது வலைப்பூவுக்கு வருகை புரிவோர் குறித்து புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பார்த்தோமெனில் அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள் எப்போதுமே உச்சத்தில் நிற்கிறது. ராஜேஷ் குமார் அண்ணனின் சிவப்பு வானம் குறித்த பதிவு அதன் பின் தொடர காமிக்ஸ் பதிவுகள் மூன்றாமிடத்துக்கு வந்துள்ளன. மனிதருக்குள்ள அறிவுத்தேடல் என்பது தொடர்ச்சியான ஒன்று என்பது என் வரையில் மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது. ஆகவே இந்த உடனடிப்பதிவு! உங்களில் சிலர் காமிக்ஸ் தொடர்பான கேள்விகள் இடம்பெற்றிருப்பது குறித்து ஆச்சரியம் அடையலாம். சமீபத்திய காவல்துறை போட்டித் தேர்வில் டின் டின் வளர்க்கும் நாயின் பெயர் என்ன என கேட்கப்பட்டிருந்தது தாங்கள் அறிந்ததே. எனவே காமிக்ஸ் துறையிலும் ஒரு கண் இருக்கட்டும் என்பதே எந்தன் வேண்டுகோள்! ஸ்டார்ட் ரீடிங் கைஸ்! அப்படியே உங்க நண்பர்களுக்கும் முகநூலிலோ வாட்ஸ் அப்பிலோ தெரியப்படுத்தலாமே??? செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா? ஹீ ஹீ ஹீ!
அறிவுக்கு அடுத்த நூறு கேள்வி பதில்கள்!
வ.எண்.
|
கேள்விகள்
|
பதில்கள்
|
1.
|
இந்தியாவில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் யார்?
|
அன்னை தெரசா
|
2.
|
இந்தியாவின் முதல் இளைய பெண் மேயர் யார்?
|
பஞ்சமாருதி அனுராதா (இருபத்தாறு வயதில்)
|
3.
|
இந்தியாவின் முதல் பெண் உலக அழகி பட்டம் பெற்றவர்?
|
ரீட்டா பரியா
|
4.
|
இராமாயண சீதையைக் குறிக்கும் பெயர்கள் எவை?
|
மைதிலி, ஜானகி
|
5
|
பெண்களுக்கு எந்த ஆண்டு முதல் இந்தியாவில் ஓட்டு உரிமை
வழங்கப்பட்டது?
|
1928
|
6
|
ஹைதராபாத் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
|
மூசி நதி
|
7
|
உலகின் மிக நீண்ட நீர்ப்பாசனக் கால்வாய் எது?
|
இந்திராகாந்தி கால்வாய்
|
8
|
சார்க் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
|
1985
|
9
|
ஆகாகான் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
|
ஹாக்கி
|
10
|
ரங்கசாமி கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
|
ஹாக்கி
|
11
|
ஹாப்மேன் கோப்பை தொடர்புடைய விளையாட்டு எது?
|
டென்னிஸ்
|
12
|
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் எத்தனை ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும்?
|
நான்கு ஆண்டுகள்
|
13
|
மகாவீர் சக்ரா விருது இரு முறை பெற்ற இந்திய ராணுவத் தலைவர் யார்?
|
வைத்யா
|
14
|
கால்குலேட்டர் கம்ப்யூட்டர் தயாரிப்பில் பயன்படும் வாயு?
|
ஹேலான்
|
15
|
உலகில் அதிகமானவர்களை வாட்டும் நோய்?
|
பல்வலி (ஒழுங்கா பல் விளக்குங்க மக்கா!)
|
16
|
வூலர் ஏரி அமைந்துள்ள மாநிலம் எது?
|
ஜம்மு
|
17
|
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எங்கு அமைந்துள்ளது?
|
மும்பை
|
18
|
ஹிந்துஸ்தான் உப்பு நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?
|
ஜெய்ப்பூர்
|
19
|
ஹிந்துஸ்தான் இரும்பு நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?
|
ராஞ்சி
|
20
|
நமது நாட்டின் தேசிய வாத்தியக் கருவி எது?
|
வீணை
|
21
|
தோலின் நிறத்துக்குக் காரணமான நிறமி எது?
|
மெலனின்
|
22
|
அகில இந்திய மலேரியா கழகம் எங்கு அமைந்துள்ளது?
|
கொல்கத்தா
|
23
|
இந்தியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகம் எங்குள்ளது?
|
கொல்கத்தா
|
24
|
இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் எங்குள்ளது?
|
கொல்கத்தா
|
25
|
ஜவ்வாது மலை எந்த மாவட்டத்தில் உள்ளது?
|
வேலூர்
|
26
|
நாளந்தா பல்கலைக் கழகம் அமைந்துள்ள மாநிலம் எது?
|
பீகார் – 09/2014 ல் மீண்டும் செயல்படத் துவங்கிவிட்டது.
|
27
|
இந்தியாவின் வழியாகச் செல்லும் ரேகை எது?
|
கடக ரேகை
|
28
|
உலகின் முதல் பெண் பிரதமர் எந்த நாட்டை சேர்ந்தவர்?
|
இலங்கை
|
29
|
சுரங்கப்பொருட்களை உற்பத்தி செய்யும் மாநிலம் எது?
|
பீகார்
|
30
|
மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலம் எது?
|
உத்தர பிரதேசம்
|
31
|
இந்தியாவில் செயல்படும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
|
பிரதம மந்திரி
|
32
|
இந்தியாவில் பெயரளவு அதிகாரம் யாரிடம் உள்ளது?
|
ஜனாதிபதி
|
33
|
பஞ்சாபின் நாட்டிய நாடகம் எது?
|
பாங்கரா
|
34
|
சித்திரக்கதை நாயகன் டின் டின் னின் நாயின் பெயர் என்ன?
|
ஸ்நோயி (Snowy)
|
35
|
சித்திரக்கதை நாயகன் டெக்ஸ் வில்லரின் குதிரையின் பெயரென்ன?
|
டைனமைட்
|
36
|
சித்திரக்கதை நாயகன் முகமூடி(phantom)
வேதாளனின் குதிரையின் பெயர் என்ன?
|
ஹீரோ
|
37
|
சித்திரக்கதை நாயகன் முகமூடி(phantom)
வேதாளனின் (ஓ)நாயின் பெயர் என்ன?
|
டெவில்
|
38
|
சித்திரக்கதை நாயகன் ரெட் டஸ்டின் குதிரையின் பெயர் என்ன?
|
பிலோமினா
|
39
|
இரும்புக்கை மாயாவி என்று செல்லமாகக் குறிப்பிடப்படும் சித்திரக்கதை
நாயகனின் பெயர் என்ன?
|
லூயிஸ் கிராண்டேல்
|
40
|
ஜேம்ஸ்பாண்ட் எந்த நாட்டின் எந்தப் பிரிவில் வேலை செய்வதாக
எழுத்தாளர் இயான் பிளெமிங் குறிப்பிடுவார்?
|
இங்கிலாந்தின் MI – 6
|
41
|
கல்வித் தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார்?
|
நெ.து.சுந்தர வடிவேலு
|
42
|
மாடர்ன் தியேட்டர்ஸ் உருவாக்கியவர் யார்?
|
டி.ஆர்.சுந்தரம்
|
43
|
ஹூண்டாய் நிறுவனம் எந்த நாட்டை சேர்ந்தது?
|
கொரியா
|
44
|
சங்க கால பத்துப்பாட்டுகளுள் ஒன்று எது?
|
திருமுருகாற்றுப்படை
|
45
|
நைட் சார் என்பது என்ன?
|
இரவில் உலாவரும் ஒரு வகை பறவை
|
46
|
எந்த மத நூல் இரத்தத்தால் எழுதப்பட்டது?
|
லங்கா வீரன் சுத்ரா
|
47
|
பாபநாசம் அணைக்கட்டு எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
|
தாமிரபரணி
|
48
|
சாத்தனூர் அணைக்கட்டு எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
|
தென்பெண்ணை
|
49
|
கோதுமை உற்பத்தியில் முதலிடம் பிடிக்கும் நாடு?
|
இந்தியா
|
50
|
சிவகாசியில் இருந்து வெளியாகும் தமிழகத்தின் ஒரே காமிக்ஸ் பதிப்பகம்
எது?
|
பிரகாஷ் பப்ளிஷர்ஸ்
|
51
|
2014 ல் நெனோஸ் கோப் கருவி கண்டுபிடிப்புக்காக வேதியியலுக்கான
நோபல் பரிசினைப் பெற்றவர்கள் யார் யார்?
|
ஸ்டீபன் ஹெல் (ஜெர்மனி)
பெட்சிக், வில்லியம் மோனர் (அமெரிக்கா)
|
52
|
ஸ்டீபன் ஹெல் பயன்படுத்திய முறை என்ன?
|
ஸ்டிமுலேட்டர் எமிஷன் டெப்ளிஷன்(ஸ்டெட்) இதில் உடலில் உள்ள செல்லின் மூலக்கூறுகளை லேசர் உதவியுடன்
தெளிவாகப் பார்க்க முடிந்தது.
|
53
|
நெனோஸ்கோப் கருவியின் உபயோகம் என்ன?
|
பர்கின்சன், அல்சீமர், ஹன்டிங்க்டன்ஸ் போன்ற நோய்கள் சம்பந்தப்பட்ட
ப்ரோடீன்கள், மூளை செல்களை ஆராய உதவுகிறது.
|
54
|
ஸ்டீபன் ஹெல் எத்தனை லேசர் ஒளிக்கற்றைகளைப் பயன்படுத்தினார்?
|
இரண்டு. ஒன்று மூலக்கூறுகளை பிரகாசமாக ஒளிரச் செய்யும். மற்றது இதர
மூலக்கூறுகளை ஒளிரச் செய்யாது. இதன் மூலம் செல்லின் மூலக்கூறுகளை தெளிவாக ஆராய
முடியும்.
|
55
|
அமெரிக்காவின் பெட்சிக், மோனர் பயன்படுத்திய முறை என்ன?
|
ஒற்றை மூலக் கூறு மைக்ராஸ்கோப். இந்த முறையில் செல்லின் ஒவ்வொரு
மூலக்கூறுகளையும் ஒளிரச் செய்யவும் அணைக்கவும் முடியும்.
|
56
|
மேம்படுத்தப்பட்ட மைக்ராஸ்கோப் உருவாக்கியவர் யார்?
|
எர்னஸ்ட் அபே, 1873
0.2 மைக்ரோ மீட்டர் வரை நுண்ணிய பொருட்களை
காணவியலும்.
|
57
|
சித்திரக்கதை நாயகன் லக்கி லூக்கின் குதிரையின் பெயர் என்ன?
|
ஜாலி ஜம்பர்
|
58
|
பல்லவர்கள் ராஜ்யத்தின் தலைநகர் எது?
|
காஞ்சி புரம்
|
59
|
உலகிலேயே மிகப்பெரிய தொங்குபாலம் உள்ள இடம் எது?
|
ஜப்பான்
|
60
|
வெறி நாய்க்கடிக்கு சிகிச்சை கண்டுபிடித்தவர் யார்?
|
லூயி பாஸ்டியர்
|
61
|
மைக்ராஸ்கோப் கண்டுபிடித்தவர் யார்?
|
அன்டன் வான் ல்யூவன் ஹாக்
|
62
|
இயேசு கிறிஸ்து பிறந்த பெத்லஹெம் எந்த நாட்டில் உள்ளது?
|
ஜோர்டான்
|
63
|
உலகின் மிகப் பெரிய நூலகம் எங்குள்ளது?
|
மாஸ்கோ, லெனின் நூலகம்
|
64
|
இந்தியாவில் பொம்மலாட்டம் எங்கு தோன்றியது?
|
கர்நாடகம்
|
65
|
டைட்டானிக் திரைப்படத்தை இயக்கியவர் யார்?
|
ஜேம்ஸ் கேமரூன்
|
66
|
முந்திரி எந்த மாநிலத்தில் அதிகம் பயிரிடப்படுகிறது?
|
கேரளா
|
67
|
சித்திரக்கதை நாயகன் மாண்ட்ரேக்கின் உற்ற நண்பர் யார்?
|
லொதார்
|
68
|
சித்திரக்கதை – பேய்க்கதைகளில் வரும் கறுப்புக் கிழவியின் உண்மையான
பெயர் என்ன?
|
ஹெப்சிபா கிரிம்
|
69
|
இரு கண்களால் இரு வேறு காட்சிகளைப் பார்க்கும் உயிரினம் எது?
|
குதிரை
|
70
|
ஸ்பைடர் மேனின் நிஜப் பெயர் என்ன?
|
பீட்டர் பார்க்கர்
|
71
|
பீட்டர் பார்க்கர் எந்த பத்திரிக்கைக்காக புகைப்படம் எடுத்துக்
கொடுப்பதாக கதையில் வருகிறது?
|
Daily Bugle (தின சங்கு ஹீ ஹீ )
|
72
|
உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் எத்தனை முறை நடந்துள்ளது?
|
இரு முறை
|
73
|
விண்ணிலுள்ள நட்சத்திரங்களில் ஒன்று
|
ஹெர்குலிஸ்
|
74
|
கிரேக்க கடவுளரில் ஒருவர்
|
ஹெர்குலிஸ்
|
75
|
சென்னையில் துவங்கப்பட்ட முதல் ஆங்கில செய்தித்தாள் எது?
|
மதராஸ் கூரியர்
|
76
|
விமானத்தை உருவாக்கிய ரைட் சகோதரர்களின் ஆரம்ப தொழில் என்ன?
|
சைக்கிள் கடை
(விடா முயற்சியால் வானையே வெற்றி கொண்டவர்கள். இவர்களது வரலாறு
நமக்கெல்லாம் ஒரு பாடம்)
|
77
|
பேரியாழ் எத்தனை நரம்புகளைக் கொண்டது?
|
இருபத்தொன்று
|
78
|
பேட்மேனின் நிஜப் பெயர் என்ன?
|
ப்ரூஸ் வாய்னே
|
79
|
வெற்றிடத்தின் வழியே செல்ல முடியாதது எது?
|
ஒலி
|
80
|
கோவை வந்த ரஷ்யத்தலைவர் யார்?
|
குருஷ்சேவ்
|
81
|
அயோடின் பற்றாக்குறையால் வரும் நோய் எது?
|
காய்டர்
|
82
|
அன்னைக்கு உபதேசம் செய்த சிறுவன் யார்?
|
கபிலர்
|
83
|
உலகின் மிகத் தொன்மையான நாடாளுமன்றம் எது?
|
இங்கிலாந்து
|
84
|
விண்வெளியில் மிதந்த முதல் மனிதர் யார்?
|
அலெக்ஸ்ஸி லியானோவ்
|
85
|
ரிப்பன் கட்டிடம் எங்குள்ளது?
|
சென்னை
|
86
|
ரிப்பன் பிரபுவினை எளியவர்கள் செல்லமாக அழைத்த பெயர் என்ன?
|
ரிப்பன் எங்கள் அப்பன்
|
87
|
ஆழ்வார்களில் பெண் யார்?
|
ஆண்டாள்
|
88
|
இறைவனுக்காக பேயுரு கொண்டவர் யார்?
|
காரைக்கால் அம்மையார்
|
89
|
இயேசு கிறிஸ்துவின் பெண் சீடர்களுள் முதன்மையானவர் யார்?
|
மேரி மகதலேனா
|
90
|
உலக மக்கள் தொகை தினமாக அனுசரிக்கப்படும் தினம் எது?
|
ஜூலை 11
|
91
|
மாநிலங்களவை மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை எத்தனை?
|
250
|
92
|
இரும்புக்கை மாயாவி பணி புரியும் அமைப்பின் பெயர் என்ன?
|
நிழற்படை, பிரிட்டன்
|
93
|
இரும்புக்கை மாயாவியாரின் சக ஊழியர்களை எவ்வாறு குறிப்பிடுவார்கள்?
|
நிழல் என எண்ணிட்டு
குறிப்பிடுவர்.
|
94
|
சித்திரக்கதை நாயகன் ஜானி நீரோவின் பெண் உதவியாளரின் பெயர் என்ன?
|
ஸ்டெல்லா
|
95
|
ஜானி நீரோ யார்?
|
சித்திரக்கதை நாயகருள் ஒருவர். ஒரு தொழிலதிபர். முன்னாள் சாகச
வீரர்.
|
96
|
அணுசக்தி தயாரிக்க உதவிடும் மூலப் பொருட்கள் யாவை?
|
யுரேனியம் மற்றும் தோரியம்
|
97
|
தேசிய அறிவியல் தினமாக அனுசரிக்கப்படும் நாள் எது?
|
பிப்ரவரி 28
|
98
|
நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்தவர் யார்?
|
டேவிட் புஷ்னல்
|
99
|
நமது நாட்டின் முதல் பெண் முதுகலை பட்டதாரி யார்?
|
சந்திரமுகி போஸ்
|
100
|
சித்திரக்கதை நாயகியருள் பிரபலமான ஒருவர்?
|
மாடஸ்டி பிளைசி (Modesty Blaise)
|
அப்புறம் என்னங்க? உங்க தேர்வுகளில் பட்டையைக் கிளப்ப என் சார்பிலும், இதர காமிக்ஸ் நண்பர்கள் சார்பிலும் வாழ்த்துக்கள்!
என்றும் அதே ப்ரியமுடன்! உங்கள் நண்பன் ஜானி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக