பிரியமுள்ள அன்பு மிகு உள்ளங்களே! உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்!
என்னுடைய இந்த நூற்றி ஐம்பதாவது பதிவில் உங்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! தொடர்ந்து பல நண்பர்கள் ஊக்குவிப்பில் மட்டுமே வலைப்பூவினை அவ்வப்போது என் எண்ணங்களால் இட்டு நிரப்பி வருகிறேன்! பல முறை அறுத்து அர்த்தமற்ற விதத்தில் கொண்டு சென்றிருப்பினும் எனக்கு உங்களுடன் பழக களம் அமைத்துக் கொடுத்த இந்த வலைப்பூ என்றும் மகிழ்ச்சியை மட்டுமே விதைத்து வந்துள்ளது, மீண்டும் நன்றிகள் நண்பர்களே!
ஆமாங்க. போன பதிவில் பார்த்த அதே யெகோவா விட்னெஸ் சபையின் இன்னுமொரு விவிலியக்கதைதான் யோசேப்பு. யாக்கோபின் மகன் யோசேப்பு தனது சகோதரர்களால் பொறாமையின் சூழ்ச்சிக்கு இரையாகி எகிப்துக்கு அடிமையாக விற்கப்பட்டு அங்கே அவரின் மீதான அவதூறுகளால் சிறைவாசம் அனுபவிக்க நேர்கிறது. அப்போது எகிப்தின் பாரோ மன்னன் கண்ட ஒரு கனவினை விளக்கிச் சொல்ல ஆளில்லாமல் தவிப்பதைக் கண்ணுற்ற கோப்பைகளின் தலைவன் கொடுத்த ஆலோசனையின்படி சிறையில் இருக்கும் யோசேப்பினை தன்னை சந்திக்க அழைக்கிறார் பாரோ. அதன் பின்னர் நிகழ்வதே இந்த கதையின் சுருக்கம். படித்து ரசியுங்கள்!
தெசலோனிக்கேயர் நிருபம் புதிய ஏற்பாட்டில் காணும் ஒரு கடிதம் ஆகும். அது என்ன சொல்கிறது-
"எவருக்கும் தீமைக்குத் தீமை செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுள் ஒருவருக்கொருவர் மட்டுமின்றி, எல்லாருக்கும் எப்பொழுதும் நன்மை செய்யவே நாடுங்கள்!"
நல்ல விஷயம்தானே? முயற்சி செய்தால் தப்பில்லையே? என்னங்க நான் சொல்றது?
அப்புறம் எங்க ஊர் மணலூர்ப்பேட்டைக்கு ஒரு விசிட் அடித்து இருந்தேன். பையனுக்கு முதல் டெர்ம் விடுப்பு கிடைத்தது அல்லவா?
அதில் கண்ணில் பட்ட காட்சிகளில் சில..
மரங்களைக் காப்போம்! அவை நமது சுவாசம்!
மரங்களே மண்ணின் அழகோவியங்கள்!
மரங்களைக் காப்போம்! மண்வளம் பெருக்குவோம்!
குச்சிப்பாளையம் எலும்பு உடைந்து போனால் கட்டு கட்டுவதில் மிகவும் பிரபலமான ஊர். இங்கே கவலைப்படாத காதலர் சங்கம் என்கிற ஒரு சங்கத்தை உண்மையிலேயே நிறுவி இருக்கிறார்கள். ஹீ ஹீ ஹீ !
தூரத்துப் பச்சை!
நண்பர் கணபதியின் ஊர் சாங்கியம்!
இரு மருங்கிலும் மரங்கள் அடர்ந்து நின்றால் ஆஹா ஆஹா கணபதி கொடுத்து வைத்தவர்!
எங்கள் ஊரின் கில்லி பள்ளி! இந்த பள்ளியில்தான் பல லொள்ளுகளுக்குப் பின்னர் வெற்றிகரமாக ப்ளஸ் டூவை முடித்து மனதில் கனத்துடன் வெளியேறி இன்றும் சென்று எட்டிப்பார்த்து பெருமூச்சினை உதிர்த்து வருகிறேன்! அது ஒரு அழகிய நிலாக் காலம்!!! இந்த புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பது போல நின்ற நண்பர் பரதன் உண்மையில் யாருக்கோ பேசிக்கொண்டிருந்தார். இந்த பதிவினை அவர் பார்த்து வியக்கக்கூடும்!
அழகிய எங்கள் தெரு!
செஞ்சியின் ராணிக்கோட்டை பேருந்தில் இருந்து ஒரு பார்வை!
செஞ்சியின் இன்னொரு மலை இது கூழாங்கல் கொட்டிக்கிடப்பது போன்ற அமைப்பில் விரிந்து பரந்து அமைந்துள்ளது!
ஆயா கருப்புக்கிழவி கதைகள் வெளியாவதைக் குறித்த முதல் விளம்பரம்
திகில் காமிக்ஸில் பன்னிரண்டாவது இதழாக வெளியான மர்ம சவப்பெட்டிகள் என்கிற ப்ரூனோ பிரேசில் சாகசத்தில் வெளியான முதல் விளம்பரம் மற்றும் அறிமுகங்கள்
அப்புறம்? அப்புறமே! ஹீ ஹீ ஹீ
என்றும் அதே அன்புடன் உங்கள் நண்பன் ஜானி!
அருமை
பதிலளிநீக்குநன்றி நண்பரே....
பதிலளிநீக்கு