வெள்ளி, 30 ஜனவரி, 2015

ராணி! மகா ராணி! மங்கம்மா ராணி வருகிறார்! பராக்! பராக்! பராக்!

 வணக்கம் தொழமை நிறை உள்ளங்களே! வரலாறு என்றுமே மறக்கப்படுவதில்லை! ராணி மங்கம்மாள் அதோ போகிறார். எத்தனை எத்தனை துயரங்கள்? தனது இரக்க குணத்தாலும் ஈகைப் பண்பினாலும் மிக உயர்ந்து நிற்கிறார். அவரது வரலாறு இதோ....உங்கள் மழலைகளுக்கு மறவாமல் வாசித்துக் காட்டினால் மகிழ்வேன்.

















சிங்கப்பூர் தமிழ் மாந்தரின் வரலாற்றுப் பதிவாக இந்த சித்திரக்கதை அமைந்துள்ளது அல்லவா? 
எனது மகனின் புகைப்படம் இங்கே....எங்கே அவன் தேடுங்கள் பார்ப்போம்.... 

குறிப்பு:
இந்த நூலை பிடிஎப் வடிவாக மாற்றும் நண்பர்கள் அப்படியே இங்கும் லிங்க் கொடுங்களேன்?!?!?
உங்கள் முக நூல் பக்கங்களிலும் பகிர்ந்து மகிழுங்களேன்? அதற்காகத்தானே இந்த முயற்சி எல்லாம்?
யோசியுங்கள்....யோசிக்கிறேன்....யோசிப்போம்!
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி....

வாழ்ந்தது போதுமா? _009_1972_veera kesari Magazine from Sri Lanka

வணக்கம் நண்பர்களே வாழ்க்கையில் சோதனையில்லை எனில் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை - வாழ்வு இனிக்காது என்பதே என் சிறிய மூளைக்குள் எப்பொழுதும் எழும் சிந்தனையாகவே இருக்கிறது. அந்த வகையில் வெறுமே தரவிறக்க சுட்டியுடன் உங்களுடனான உறவினை முடித்துக் கொள்வது என்பது என்னால் இயலாத ஒரு விடயம். அதனாலேயே மிக அரிதாக சிக்கிய அலெக்ஸ்சாண்டர் சாரின் பொக்கிஷ சித்திரக் கதையை தொடராக நீட்டிப்பு செய்வது என்பதும் நிகழ்கிறது.
தவிர,
 யாழ்ப்பாணத்தில் இருந்த நூலகம் ஒரு இருண்ட காலத்தில் எரிக்கப்பட்டு எத்தனையோ இலக்கிய இலக்கண நூல்கள் திரும்பி வாரா உலகுக்கு சென்று விட்டன என்பது ஒரு தமிழன் என்கிற வகையில் எனக்கும் பெருத்த நட்டமே. அந்த மன வருத்தத்தை இப்படிக் கிடைத்த அரியதொரு சித்திரக் கதை கொஞ்சம் போக்கி விட்டது. இலங்கையில் எங்கோ பதிப்பாகி, கடல் தாண்டி ஆஞ்சநேயரைப் போல   மலை வளமிக்க- சஞ்சீவி மூலிகை மணக்கும் தென்றல் வீசிடும்  தேனீயின் ஒரு கூட்டுக்குக் கூடு பாய்ந்தது எவ்வாறு? அப்படியெனில் இன்னபிற நூல்களும் அங்ஙனமே கிடைத்திடின் அது வரலாறல்லவா? இந்த எண்ணங்களே இந்த வலைப்பூவில் இன்னும் தொடர்வதற்கு எனக்கான காரணம் என்று எடுத்துக் கொள்ளுங்களேன்?!?!?!
இனி,
வாழ்ந்தது போதுமா?
வண்ணங்களில் குறை இருப்பின் தாராளமாக கலாய்க்கலாம். தொடர்பு இல்லாமல் மனதில் பட்ட வண்ணங்களை சோதனை முயற்சி என்கிற (ஹீ ஹீ ஹீ ) நிலையில் ஆங்காங்கு தெளித்திருக்கிறேன். சோதனை(!?!?!?!) வேண்டாமப்பா என்பவர்கள் அதனை அப்படியே ஸ்கிப் பண்ணிடுங்க நைனா! சர்தானே நான் சொல்றது? அக்காம்பா!





பெயின்ட்  டப்பா காலி. தேனீ அண்ணாச்சி  அலெஸ்சாண்டர் அனுப்புனாத்தான்  அடுத்து கலர் அடிக்கணும்! அப்படியே அந்த கரடி முடி பிரஸ் மறந்துடாதீங்க தலீவா! வர்ட்டா? அப்பாலிக்கா மீட்  பண்ணுவோம்பா!

வாழ்ந்தது போதுமா? _008_1972_veera kesari Magazine from Sri Lanka

 இது வரை _ சிறையில் இருந்த சிங்காரத்தை சிக்கலின்றி தப்ப வைக்கிறாள் ஒரு மாது. பின் சிங்காரத்தை சிங் என மாற்றி தாஸ் என்பவரோடு வேறெங்கோ அனுப்பி வைக்கிறாள். எதற்கு? தொடர்ந்து வாசியுங்கள்....

வியாழன், 29 ஜனவரி, 2015

கடல் கடந்தும் காமிக்ஸ் தேடு......

வணக்கம் அன்பு உள்ளம் கொண்டோரே! இம்முறை ஒரு சிங்கப்பூர் சித்திரக்கதை வரிசையுடன் தங்களை சந்திப்பதில் பேருவகை அடைகிறேன். "தமிழுக்குத் தொண்டு செய்பவர்கள் சாவதிலை"  என்கிற அடைமொழியுடன் அட்டகாசமான ஏ நான்கு சைசில் இன்னும் கொஞ்சம் கூடப் பெரியதாக வெளியாகிப் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் படக்கதை வரிசையினை தேடலின் ஒரு பகுதியாகக் காண நேரிட்டது. கண்டு அகமகிழ்ந்து அதனை தங்களுக்கும் காட்சிப்படுத்தும் வாய்ப்பு அமைந்ததற்கு இறைவனுக்கு நன்றிகளை சொல்லிக் கொண்டு கதை குறித்து விளக்குகிறேன். ஆரஞ்சு நிறத்தின் அடர் மற்றும் மென் வண்ணங்களைக் குழைத்து வண்ணம் தீட்டப்பட்டிருக்கும் இந்தக் கதை வரிசையில் யான் காணுவகை அடையப் பெற்றது டாக்டர். செண்பகராமன் பிள்ளை, மறைமலையடிகள், ராணி மங்கம்மாள், பாவேந்தர் பாரதி தாசன், இராச ராச சோழன் மற்றும் கீழே நீங்கள் காணும் புலித்தேவன் ஆகியோரது வரலாற்றுப் பெட்டகங்களான சித்திரக்கதைகள்தான். இவற்றின் விலை விவரங்கள் அந்த குறிப்புகளில் காணப்படவில்லை. வெளியிட்டோர் EVS Publishers, 16, Cuff Road, singapore 209727. Tel.(65)2915334, Fax (65) 2952105. முத்து விசிறியார் இது குறித்து மேலதிக விவரங்களை பின்னர் விசாரித்துப் பகிர வேண்டுகிறேன். இரண்டு தினங்களுக்கு முன்னர் சிங்கப்பூர்-மலேசிய வாழ் தமிழ் சமூகத் தயாரிப்பு சித்திரக்கதைகள் நம்மை வந்து எட்டினால் நன்றாக இருக்கும் என்பது குறித்து தங்களுடன் என் மனதில் இருந்ததை பகிர்ந்தது குறித்து நினைவுள்ளதா? அருமை சகோதரர் அன்பு செல்வன் என்னை சந்திக்க வேப்பேரி வரை வந்திருந்த போது பெரியார் திடலில் உள்ள நூலகத்தில் எனது காமிக்ஸ் தேடலின் ஒரு பகுதியாக ஈடுபட்டிருந்தேன். நூலகர் முருகேசன் அவர்களது கனிவான வார்த்தைகள் மட்டுமன்றி சித்திரக்கதைகளும் அதுவும் அயல் நாட்டில் உருவாகி இங்கே கொண்டு வரப்பட்டுள்ள சித்திரக்கதைகள் குறித்து அறிந்து அக மகிழ்ந்து போன வேளையில் அன்பு செல்வனுடன் ஒரு சந்திப்பும் நிறைவாக அமைந்தது. நண்பர் புதிய தலை முறை. சித்திரக்கதை வயது தாண்டி எல்லை தாண்டி அனைவரையும் அன்பினால் கட்டி இணைப்பதை மிக இரசித்தேன்!  





அப்புறம் இறுதி பன்ச் ஒன்று!
இந்த சித்திரக் கதைகளை தனது பேரப்பிள்ளைகளுக்காக சிங்கப்பூர் சென்றிருந்த போது வாங்கி வந்து அப்படியே நூலகத்துக்கும் ஒரு செட் வாங்கிக் கொடுத்தவர் யார் என்று நினைக்கிறீர்கள்?
விடுதலை நாளிதழ் ஆசிரியரும், திராவிட கட்சியின் தூணும், பகுத்தறிவுப் பாசறையின் பெருமகனாருமான  அய்யா.கி.வீரமணியார்தான் அவர்!
_என்றும் அதே நட்புடன்_உங்கள் இனிய நண்பன்_ஜானி!

வாழ்ந்தது போதுமா? _007_1972_veera kesari Magazine from Sri Lanka


Credits for colour - Vincent Moses Rajah sir and Chokkalingam Panneer selvam sir
bye! with love your friend Johnny

புதன், 28 ஜனவரி, 2015

வாழ்ந்தது போதுமா? _006_1972_veera kesari Magazine from Sri Lanka

dear tamil friends,
this is the gift from our srilankan tamil speaking friends. this story published in a year 1972 and its rare. please preserve this type of comics collections. singapore and malasiyan version of tamil comics may be collected by our friends there like muthu fan in near future. please make sure no single past moments leaving from our life. they will be a great lesson to our tamil society.  

thanks, with ever love, johny

செவ்வாய், 27 ஜனவரி, 2015

வாழ்ந்தது போதுமா? _004 & 005_1972

அது 1972 ம் வருடம். ஒரு அக்டோபர் மாதம். வீரகேசரி தினசரியின் பதிப்புகளில் ஒரு தமிழ் சித்திரக்கதைத் தொடர் கதாசிரியர் மற்றும் ஓவியர் திரு  சந்ரா அவர்களது உபயத்தில் மக்களை மகிழ்விக்க தொடராக வெளியாகி சிறப்பான இடம்பெற்றது. 
அந்தத் தொடர்  "வாழ்ந்தது போதுமா?"
இன்று குடியரசு தின கேளிக்கைகள் நன்முறையில் நிறைவேறிய மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் இந்திய மண்ணின் மைந்தருக்கும், தமிழ் காதல் கொண்ட இலங்கை தமிழக மக்களுக்கும் மீண்டும் இந்தக் கதைத் தொடரின் அத்தியாயங்களைப் பரிமாறுவதில் திரு அலெக்ஸ்சாண்டர் வாஸ் அவர்களும், திரு சொக்கலிங்கம் பன்னீர்செல்வம் அவர்களும், நானும் பேருவகை அடைகிறோம்.
   
வாழ்ந்தது போதுமா-அத்தியாயம் எண் நான்கு மற்றும் ஐந்து இன்று உங்கள் பார்வைக்குப் பரிமாறப்படுகிறது.  
இதுவரை -
சிங்காரம் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதி. சிறையில் கடைசி சில மணித் துளிகளில் அவனது வாழ்வில் திருப்பம் நிகழ்கிறது. சிறையை விட்டு தப்பிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.
இனி....

பணிசுமைகளால்  நேற்று வெளியாக வேண்டிய பக்கமும் இதனுடன் இணைந்து வெளியிடப்பட்டுள்ளது . மன்னிச்சு!
நண்பர் மாயாவி சிவா அவர்களது குடியரசு தின வாழ்த்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தது அது

என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி

சனி, 24 ஜனவரி, 2015

வாழ்ந்தது போதுமா? _003_1972

this part of story was published on 21.10.1972. credits veeraksari magazine. 
bye! part 04 will come after sun day leave as same as the comics published in veerakesari. every sun day not published.

வெள்ளி, 23 ஜனவரி, 2015

வாழ்ந்தது போதுமா? _002_1972


வணக்கங்கள் நண்பர்களே! வீரகேசரி தினசரியில் வெளியான ஒரு விளம்பரம் உங்கள் கவனத்துக்கு !
 வாழ்ந்தது போதுமா-அத்தியாயம் எண் இரண்டு
இதுவரை -
சிங்காரம் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதி. சிறையில் கடைசி சில மணித் துளிகளில் அவனது வாழ்வில் திருப்பம் நிகழ்கிறது. சிறையை விட்டு தப்பிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.
இனி....

                                                                                                                                         -தொடரும்...

வியாழன், 22 ஜனவரி, 2015

வாழ்ந்தது போதுமா? _001_இது ஒரு அரிய சித்திரக் கதைத் தொடர்!_vazhnthathu pothuma_a comics series from veerakesari magazine!!!

அன்பிற்கினிய நட்பு பூக்களே!
வணக்கம். வலைப்பூவுக்கு வருகை புரிந்தமைக்கு என் வந்தனங்கள்.
அது ஒரு வியாழக்கிழமை. வருடம் 1972. மாதம் அக்டோபர். அன்றுதான் இந்தத் தொடர் ஒரு துவக்கம் பெற்றது. அன்றுதான் அருமையான எழுத்தாளர் திரு சந்ரா அவர்களது இனிமையும், பரபரபரப்புமான இந்தத் தொடர் வீர கேசரி நாளிதழில் அச்சேற்றம் கண்டது. தமிழ் செம்மொழி இன்னும் ஒரு சிறகைத் தன் மகுடத்தில் அன்றுதான் தரித்தது. வீரகேசரி தினசரிக்கும், ஓவிய எழுத்தாளர் திரு சந்ரா அவர்களுக்கும் இந்தத் தொடரை அர்ப்பணித்துக் கொண்டு, இந்த அபூர்வமான சித்திரக்கதையை வெகு நாட்களாக தனது பொக்கிஷ சாலையில் பாதுகாத்து  இன்று நம்முடன் இந்த தொடரை மகிழ்வோடு பகிர்ந்து கொண்டு கொண்டாடும் அன்பு மிகு அலெக்ஸ்சாண்டர் வாஸ் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு இந்தத் தொடரைத் துவக்குகிறேன்.
ஒரு அருமையான தொடரை அந்த காலக்கட்டத்தில் வெளியான அதே மன நிலையில் நீங்கள் இரசிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அதே போன்றதொரு வியாழன் அன்று ஒரு துவக்கம் கொடுக்கிறேன். நேரமும், காலமும் காவலனின் பாதையில் மக்கள் சேவைக்கு முதன்மை கொடுத்துப் பின் இரசிகர் சேவைக்கு உற்சாகத்துடன் வருகையில் கொஞ்சம் முன்-பின்னாக இந்தத் தொடர் வந்தால் அதற்கு முன்னதாகவே மன்னிப்பினைக் கோருகிறேன்! தமிழ் - இலங்கை மக்களின் தொடர்ந்த அன்புக்கும் இதுபோன்ற சித்திரக் கதைகள் உருவாக்கத்தில் அங்கும் நண்பர்கள் தொடர் ஆதரவும், முயற்சிகளையும் முன்னெடுத்தால் இன்னும் வெவ்வேறு புதிய சித்திரக்கதைகள் உருவாக வேண்டும். மக்கள் மனம் சித்திரங்களால் நிறைய வேண்டும் என்கிற சின்ன சிந்தனையை உங்களோடு பகிர்ந்து கொண்டு கதைக்கும் நேரத்துக்கு உங்களை நேராக அனுப்பி விடுகிறேன். மகிழுங்கள்! மனம் மலர்ந்து வாழுங்கள்! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

   கதை துவக்கம் பெறும் தினமாதலால் ஒரு அணிகலன்-அழைப்பிதழ்  முயற்சி மேலே உள்ளது. மற்றபடி கீழே உள்ள உண்மையான பக்கங்களே தொடரும்.
துவக்க வார்த்தைகளிலேயே நம்மைப் நிமிர்ந்து அமரச் செய்து விடுகிறார் திரு சந்ரா. இந்தத் தொடர் முழுக்கவே அடுத்தடுத்த திருப்பங்களும். திடுக்கிடும் சம்பவங்களுமாகக் கடப்பதை நீங்கள் காணலாம். ஒரு இரசிகராக கதைக்குள் தொடரைத் தொடர எனது வாழ்த்துக்கள்ங்க!

அப்புறம் நேற்றுடன் சென்னை புத்தகக் கண்காட்சி இனிதே நிறைவடைந்தது. நிறைய மகிழ்வான தருணங்கள் இம்முறை. நண்பா குழாம் தி.நகரை முற்றுகையிட்டதில் இருந்து அடுத்தடுத்து இரசிக்கும் விதமான நிகழ்வுகள் அரங்கேறின. சேலம் டெக்ஸ் விஜயராகவன், டெக்ஸ் சம்பத், ஈரோடு விஜய், மாயாவி சிவா, தாரமங்கலம் பரணிதரன், ரம்மி XIII, இன்னும் பல நண்பர்கள் அன்பளித்த இனிப்பும் அவர்களது அன்பும் நெஞ்சில் நீங்காமல் நிறைந்துவிட்டது. மறுபடியும் சந்திப்போம் நண்பர்களே! என்னிடம் சொல்லியும், சொல்லாமலும் சில நெஞ்சங்கள் கடந்ததும் நிகழ்ந்தது! அனைவருக்கும் நன்றிகள்! ஒரு சேதி சொல்லவா? இந்த முறை புத்தகத் திருவிழா எக்கச்சக்க லாபம் அடைந்ததால் தலைநகரில் இருந்தே சில விசாரிப்புகள். அடுத்த முறை இன்னும் பெரிய அளவில் இது அமையும் போல..
மிக நெருங்கிய, என் மீது பாசம் வைத்துள்ள நண்பர் ஒருவர்  இந்த காமிக்ஸ் மீதான ரசனை-நேசம் பொறுப்புமிக்க பணியில் உள்ள உங்களுக்குத்  தேவைதானா ?  என்று பொருள்பட கேள்வியொன்றை வீசினார். சித்திரக்கதைகள் மீது நேசம் வளர செய்த மறைந்த எனது பாட்டனார் திரு.அமிர்தன் அவர்களைத்தான் இது குறித்து கேட்க வேண்டும். பழமை என்கிற விதத்தில் அன்னாருடைய அரிய புகைப்படங்களையும் பதிவோடு பதிவாக பாதுகாப்பு செய்யும் விதமாக அவ்வப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேனே?  
என்றும் அதே அன்புடன் உங்கள் நண்பன் ஜானி (எ) ஜான் சைமன் 
குறிப்பு:
வீர கேசரி இதழுக்கு ஒரு மெயில் அனுப்பி கூடுதல் தகவல்கள் கோரியுள்ளேன். குறிப்பாக இந்தத் தொடர் குறித்த தகவல்கள் கூடுதல் விவரங்கள் தெரிய வந்தால் நம்முடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். ஒரு ஆவணப்படுத்தும் நோக்கில் இந்தத் தொடரை முன்னோக்கி செலுத்துவோம். பை!

புதன், 21 ஜனவரி, 2015

தீராத தமிழ் தாகம்!

அப்பப்பா! கொட்டித் தீர்த்து விட்டனர் நமது தீண்டமிழ் புரவலர்கள்!
நிலத்தால் நினைத்தாலும் பிரிக்கவியலா தமிழ் தாகம் ஆஹா! தமிழ் மீதான காதல் கொண்ட நெஞ்சங்கள் இருக்க திகையாதே மனமே என்கிற மகிழ்ச்சி அலை பொங்கிப் பிரவாகிக்க நான் அடுத்த பதிவினை எழுதிடுகிறேன்!
சந்ரா என்கிற பெயரில் பிரமிக்க வைத்த ஓவிய + கதாசிரியர் இவர்தான்!

நன்றிகள் http://vaasakam.blogspot.in/2009/11/blog-post.html
விக்கிபீடியா தொகுத்துள்ள தகவல்கள்
சந்ரா
அவரது படைப்புகளை வாசிக்க
பக்கங்கள் சில..

தகவல் தொகுப்பிற்கு உதவிய அன்பிற்கினிய நண்பர்கள்
பிரதீப் சுந்தரேஸ்வரன், பத்மனாபன் சுகந்தன், அபிஷேக் ஞான சேகரன், பாலகிருஷ்ணன் பரமசிவம் அவர்களுக்கு மிகுந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்!
கதை குறித்த புள்ளி விவரங்களை பின்னர் தெரிவிக்கிறேன். அதிலிருந்து சில பக்கங்கள் உங்கள் பார்வைக்கு இப்போது பரிமாறுகிறேன்! விரைவில் விருந்து கிடைக்கும்! அய்யா சந்ரா வாழ்க!


இதே போன்று வெளியான மற்ற இதழ்கள் உதாரணமாக
கூகுள் பக்கங்கள்
சிரித்திரன்
போன்றவை இன்னும் கிடைக்கிறதா என்றும் தங்கள் தேடலை விரிவாக்கம் செய்யுங்களேன்? வானமே எல்லை! விரியுங்கள் சித்திரக்கதை எனும் சிறகை...
 என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி எ ஜான் சைமன்!

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...