செவ்வாய், 27 ஜனவரி, 2015

வாழ்ந்தது போதுமா? _004 & 005_1972

அது 1972 ம் வருடம். ஒரு அக்டோபர் மாதம். வீரகேசரி தினசரியின் பதிப்புகளில் ஒரு தமிழ் சித்திரக்கதைத் தொடர் கதாசிரியர் மற்றும் ஓவியர் திரு  சந்ரா அவர்களது உபயத்தில் மக்களை மகிழ்விக்க தொடராக வெளியாகி சிறப்பான இடம்பெற்றது. 
அந்தத் தொடர்  "வாழ்ந்தது போதுமா?"
இன்று குடியரசு தின கேளிக்கைகள் நன்முறையில் நிறைவேறிய மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் இந்திய மண்ணின் மைந்தருக்கும், தமிழ் காதல் கொண்ட இலங்கை தமிழக மக்களுக்கும் மீண்டும் இந்தக் கதைத் தொடரின் அத்தியாயங்களைப் பரிமாறுவதில் திரு அலெக்ஸ்சாண்டர் வாஸ் அவர்களும், திரு சொக்கலிங்கம் பன்னீர்செல்வம் அவர்களும், நானும் பேருவகை அடைகிறோம்.
   
வாழ்ந்தது போதுமா-அத்தியாயம் எண் நான்கு மற்றும் ஐந்து இன்று உங்கள் பார்வைக்குப் பரிமாறப்படுகிறது.  
இதுவரை -
சிங்காரம் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதி. சிறையில் கடைசி சில மணித் துளிகளில் அவனது வாழ்வில் திருப்பம் நிகழ்கிறது. சிறையை விட்டு தப்பிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.
இனி....

பணிசுமைகளால்  நேற்று வெளியாக வேண்டிய பக்கமும் இதனுடன் இணைந்து வெளியிடப்பட்டுள்ளது . மன்னிச்சு!
நண்பர் மாயாவி சிவா அவர்களது குடியரசு தின வாழ்த்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தது அது

என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி

1 கருத்து:

மெர்லினின் மந்திர டைரி_பாகம்_04_மூலகங்கள் மூன்று

வணக்கம் தோழமை உள்ளங்களே.. உங்களது நீண்ட நாள் கோரிக்கைக்கு இணங்க இந்த மெர்லினின் மந்திர டைரி பாகம் நான்கு -மூலகங்கள் மூன்று உங்கள் பார்வைக்கு...