வெள்ளி, 9 ஜனவரி, 2015

பைபிள் காமிக்ஸ் _Bible Comics!!!

வணக்கங்கள் ஆருயிர் நெஞ்சங்களே!!! 
       விவிலியத்தில் எண்ணற்ற சம்பவங்கள், உவமைகள், தீர்க்கதரிசனங்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன!!! அவைகளை காமிக்ஸ் வடிவில் வித விதமாக வெளியிட்டு பல்வேறு பதிப்பகங்கள் முயன்று பார்த்துள்ளனர்! அந்த காலத்தில் இவையும் நன்கு விற்பனையாகி மக்களுக்கு இறைவனின் அன்பையும் ஆசீரையும் கொண்டு சேர்க்க உதவின! தற்போது இந்த சித்திர கதைகள் கிடைப்பது மகா அரிதாக இருக்கிறது! தொடர்ந்த பலவருடத் தேடலில் என் தேடலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக கிடைத்ததொரு அபூர்வ மனிதர் திண்டுக்கல் திணறும் விதத்தில் அடுக்கி வைத்துள்ள பொக்கிஷ மூட்டையை நம் அனைவருக்காகவும் அன்புள்ளத்துடன் அளித்து உதவினார்! அவருக்கும் இந்த முயற்சியில் மிகவும் உறுதுணையாக இருந்த அன்பு நண்பர் பன்னீர்செல்வம் அவர்களுக்கும், ஸ்ரீராம் மற்றும் R.T.முருகன் அவர்களுக்கும் எனது நன்றிகள்!!

நிற்க!!
 இது போன்று வெவ்வேறு முயற்சிகள் வெவ்வேறு காலக் கட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன!! அந்த காலத்தில் வேளாங்கண்ணி தேவாலய கண்காட்சியகத்தில் காமிக்ஸ் வடிவில் வந்த புனிதர்கள் வரலாறு இன்றுவரை என் தேடல் பட்டியலில் இருக்கிறது!!! தங்களிடமோ தங்கள் அருகாமையில் உள்ள தேவாலயங்களிலோ இந்த தொகுப்புகள் இன்றளவும் பாதுகாக்கப் பட்டிருக்கலாம்!!! 
எனக்காக தங்கள் ஊர் பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரி சகோதரிகளை அணுகி இந்த தொகுப்பு குறித்து விவாதித்து தகவல் தெரிவித்தால் மிகுந்த ஆசிர்வாதமாக இருக்கும்!!!! முயலலாமே!!!  

இந்த தொகுப்பில் வந்த அனைத்து காமிக்ஸ்களின் அட்டைப் படங்களும்  இந்த சொடுக்கியை தட்டி கண்டு களிக்கலாம்!
PDF வடிவில் பெற 
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி!!!!


1 கருத்து:

மெர்லினின் மந்திர டைரி_பாகம்_04_மூலகங்கள் மூன்று

வணக்கம் தோழமை உள்ளங்களே.. உங்களது நீண்ட நாள் கோரிக்கைக்கு இணங்க இந்த மெர்லினின் மந்திர டைரி பாகம் நான்கு -மூலகங்கள் மூன்று உங்கள் பார்வைக்கு...