ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

ஈஸ்டர் திருவிழா நல்வாழ்த்துக்களுடன்....ஜானி!

         இறைமகன் இயேசுவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். இயேசுவின் உயிர்த்தெழுதலின் நினைவாகக் கொண்டாடப்படும் தினம்தான் ஈஸ்டர். மக்களுக்காகவே மரித்தார். மக்களுக்காகவே உயிர்த்தார். மக்களுக்காகவே மீண்டும் வருவார். இறுதித் தீர்ப்புதினம் அவர் கரங்களில் உள்ளது. இதுவே கிறிஸ்துவைப் பின்பற்றும் எங்களது நம்பிக்கை. நண்பர்களுக்கு இம்முறை ஒரு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு அடங்கிய சித்திரக்கதையினை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் அனைவருக்கும் என் இனிய ஈஸ்டர் தின நல்வாழ்த்துக்கள். இந்த சித்திரக்கதையினை அன்பளித்து உதவிய அன்பு நண்பர் தமிழ் காமிக்ஸ் உலகம் பதிப்பாசிரியர் திரு.கிங் விஸ்வா அவர்களுக்கும், புத்தகத்தினை அருமையாக வலைப்பூவுக்கு ஏற்றவிதத்தில் மேம்படுத்த ஆலோசனைகள் கொடுத்து உதவிய தமிழ் காமிக்ஸ் டைம்ஸின் நிர்வாகியுமான நண்பர் திரு சொக்கலிங்கம் அவர்களுக்கும் எனது இனிய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
வரலாறு என்பது நடந்த ஒன்றின் பதிவே. விவிலியம் உணர்த்தும் வரலாற்றில் இறைமகன் இயேசு விண்ணிலிருந்து மானிடராகப் பிறந்து மரியாளின் அன்பிலும், யோசேப்பின் அரவணைப்பிலும் உலகில் உலவி அநேகம் மானிடரை ஆசீர்வதித்தும், நோயாளிகளைக் குணமாக்கி, பேய் பிடித்தோரை சொஸ்தமாக்கி, தொழுநோயாளிகளிடம் பரிவு காட்டி மனிதருக்கோர் உதாரணமாகத் திகழ்ந்து தனது அன்பின் பூரணமாக தன்னையே மக்களுக்கு அர்ப்பணித்து, தீயோரின் சதியால் சிலுவையில் அறையப்படுகிறார். மரித்தோரிலிருந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுகிறார். மானிடரின் கண்கள் நோக்க விண்ணிற்கு ஏறி இறைவனின் வலது பக்கம் அமர்கிறார். மீண்டும் வருவார். புதிய வானம், புதிய பூமி மலரும். நல்லோர் அவரது அரசில் வளம் பெறுவர். தீயோர் ஒதுக்கப்படுவர். அவரது ஆட்சிக்கு முடிவிராது. ஆமென்.

வாசித்த அனைத்து இதயங்களுக்கும் நன்றிகள் பல. இனி சித்திரக்கதைக்குள் புகலாமே.
































அப்புறம் புத்தகத் திருவிழாவுக்கு உங்கள் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன். புத்தகங்கள் கையில் பிடித்து வாசிப்பதில்தான் அழகிருக்கிறது என்று தீவிரமாக நம்பும் நண்பர்களுள் நானும் ஒருவன். அதன் வாசமே நம்மை ஆழ்ந்த வாசிப்புக்குள் வழிநடத்தும் என்பது அனுபவபூர்வமான உண்மை. ஆகவே வாருங்கள், நிறைய புத்தகங்களை வாங்குங்கள். வாங்கி வாசித்து மகிழுங்கள் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஈஸ்டர் விழா முடிந்து இந்தப் பரிசினை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நேரிட்டதற்கு பணிகளும் காலமும் இடம்தரவில்லை எனினும் சாரி தோழமை உள்ளங்களே! 
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி! 

4 கருத்துகள்:

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...