செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

LL_052-குட் பேட் அண்ட் அக்ளி_டைலன்டாக்

 வணக்கங்கள் வாசகர்களே... 

சென்னை புத்தக திருவிழாவில் வெளியிடப்பட்ட குட் பேட் அண்ட் அக்ளி என்கிற டைலான் டாக் கதையை ரிவ்யூவுக்கு நமது அன்புக்குரிய திரு.மணிவாசகம் அனுப்பி வைத்திருந்தார். 

இதோ லயன் லைப்ரரியின் ஐம்பத்திரெண்டாவது வெளியீடு.. டைலன் டாக்கின் இரண்டு கதைகள் இந்த வெளியீட்டில் உள்ளன. அவை, 

1.ரெஸ்ட் இன் பீஸ் 

2.நிழலுடன் நடனம் 

க்ரிப்பா மற்றும் போசென்டி இருவரது மிரட்டல் சேர்க்கைதான் இந்தக்கதை.. எப்போதும் டைலன்டாக் ஆவியுலகுடன் பிரச்சினை செய்து கொண்டே இருப்பது வழக்கம். அதிலும் அவரால் பாதிக்கப்பட்டோரின் ஆவிகள் கொடுக்கும் அழுத்தங்கள் இணையும்போது நிகழ்வது என்ன என்பதைப் பற்றிய தொடர் சம்பவங்களை உள்ளடக்கியே உருவாக்கப்பட்டிருப்பது இந்தக்கதை.. ஒரு இடுகாட்டின் உள்ளே டைலான் செல்கிறார்.. அந்த அமைதியும் அமானுஷ்யமும் அங்கே வைக்கப்பட்டிருக்கும் சிலைகள் தானாகவே டைலான் மேலே விழ முயற்சிப்பதும் இவ்வளவு ரண களத்திலும் காமெடியாக டைலான் கூறுகிறார்.. "தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போச்சே.. பரலோகத்தில் பாலே ஆட" அவ்வளவு அசாதாரணமாக இவற்றை டைலன் எடுத்துக் கொள்வது அவரின் அனுபவப் பூர்வமான அமானுஷ்ய அனுபவங்களின் முந்தைய விளைவுகளே என்பதை நமக்கு அந்த வசனங்கள் மூலம் தெரிவித்து விடுகிறார். 
டைலானை ஓடவைத்து துப்பாக்கி குண்டுகளை வாங்கியும் சாகாமல் எழுந்து ஓட வைத்து கலாட்டா செய்யும் இந்த உருவம் ஏற்கனவே டைலானுடன் மோதி போய் சேர்ந்த நபர் என்பதும் அந்த சம்பவத்தில் ஏகப்பட்ட அப்பாவி  உயிர்கள் பறிக்கப்பட்டு இருக்கின்றன என்பதும் அந்த வருத்தம் டைலானை வாழ்நாள் முழுவதும் டைலானை துரத்தும் என்பதும் தன் தவறுகள் எத்தனை துரத்தினாலும் தன் மனதை சாந்தப்படுத்திக் கொண்டு அடுத்த பிரச்சினையை எதிர்கொள்ள நமது நாயகன் டைலன் தயாராவான் என்பதும் கதையின் ஓட்டத்தில் நமக்குக் கடத்தப்படும் செய்தி.. 
அடுத்த கதை நிழலுடன் நடனம்.. ஆவிப் பெண் ஒருத்தி.. அழகில்லாமல் பிறக்கும் யாருக்கும் ஒரு அழகான இதயம் இருக்கும் என்பதனை அறியாத சமூகம் ஒருத்தியை அவமானப்படுத்தி பாடி ஷேமிங் செய்து கொடுமைப்படுத்துவதை சகியாமல் ஒரு கட்டத்தில் தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளும் வனிதையின் ஆன்மா அமைதியற்று அலைந்து திரிகிறது. அதன் அமர்க்களத்தில் கல்லூரி அல்லோலகல்லோலப் படுத்துகிறது. அதனை டைலன் சந்தித்து அமைதிப்படுத்தி காதல் கொள்ள அதுவும் அமைதி கொண்டு அங்கிருந்து அகல்கிறது.. ஆக இந்த இரு கதைகளும் திருவிழா ஸ்பெஷல் கதையில் இடம்பெற்றுள்ளன.. 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LL_052-குட் பேட் அண்ட் அக்ளி_டைலன்டாக்

 வணக்கங்கள் வாசகர்களே...  சென்னை புத்தக திருவிழாவில் வெளியிடப்பட்ட குட் பேட் அண்ட் அக்ளி என்கிற டைலான் டாக் கதையை ரிவ்யூவுக்கு நமது அன்புக்க...