புதன், 28 மார்ச், 2018

Bond in tamil...

இவர் டைனமைட் காமிக்ஸின் ஜேம்ஸ்பாண்ட்...2015 நவம்பர் முதல் கலக்கி வருகிறார். இயான் பிளெமிங் பப்ளிகேஷனில் இருந்து முறைப்படி காப்பிரைட் உரிமம் பெற்று டைனமைட் காமிக்ஸ் நிறுவனத்தார் ஜேசன் மாஸ்டர்ஸ், ராபா லோபோஸ்கோ ஓவியங்களிலும், வாரன் எல்லிஸ் கதையிலும் சைமன் போலேன்ட் எழுத்திலும் மாதாமாத இதழாக கொண்டு வந்திருந்து வெற்றிகரமாக இன்றும் விற்பனையாகிக்கொண்டுள்ள பரபரப்பான தொடர்கள்தான் இந்தக் கதையின் சிறப்பே. 

        VARGR-அந்தத் தொடர் இதழ்களின் முதல் கதை. இந்தத் தலைப்பை திட்டமிட்டதே சுவாரஸ்யமான தகவல்தான். வடக்கு ஜெர்மானிய மொழியான ஓல்ட் நார்ஸ்.. ஸ்காண்டிநேவிய குடிமக்கள் பேசி வந்ததொரு மொழி.. அதில் இந்த VARGRக்கு அர்த்தம் ஓநாய், தீய நடத்தையுள்ளவன் அல்லது அழிப்பவன். ஆறு மாத காலத்தில் இந்தத் தொடர் நிறைவுற்றது. ஒவ்வொன்றும் இருபத்தைந்து ப்ளஸ் பக்கங்களுடன் நிறைவை எட்டும். இதனை தற்போது லயன் காமிக்ஸ் தமிழில் கொண்டு வரவிருக்கிறார்கள். 

கதை சுருக்கம்..ஐரோப்பிய போதைக் கடத்தலைக் கண்டுபிடிக்க சென்ற ஏஜெண்ட் உடல்நலம் குன்றியதால் அந்த இடத்துக்கு ஜேம்ஸ்பாண்ட் அவரது பாஸ் M ஆல் அனுப்பி வைக்கப்படுகிறார். ஒரு துப்பு கிடைத்து பெர்லின் பறக்கும் அவர் அங்கே தர்மா ரீச்சை சந்திக்கிறார். அவள் தான் ஒரு சி ஐ ஏ ஏஜென்ட் என்று காண்பித்துக் கொண்டு ஜேம்ஸ்பாண்டை கொல்ல முயற்சிக்கிறாள். அங்கிருந்து தப்பும் ஜேம்ஸ் செர்பிய விஞ்ஞானி ஸ்லேவன் குர்ஜாக்கை சந்திக்கிறார். அவர் செயற்கை மனித உடலுறுப்புகள் ஆய்வில் ஈடுபட்டு வருபவர். 
அவரிடமிருந்து சந்தேகத்திற்குரிய ஆய்வுக்கூடம் ஒன்றினைப்பற்றிய தகவலை அறிந்து அங்கு செல்கிறார் ஜேம்ஸ். இந்த குர்ஜாக்தான் தர்மாவை அனுப்பி ஜேம்ஸை கொல்ல முயன்றவர் என்பது ஜேம்ஸ் பாண்டுக்குத் தெரியாது.. அந்த சந்தேகத்திற்குரிய ஆய்வுக்கூடத்தில் குர்ஜாக்கால் திசை திருப்பப்பட்டு வந்தடையும் லெபனான் நாட்டு குற்றப்பரம்பரையை சேர்ந்த ஆசாமியுடன் ஜேம்ஸ் மோத நேர்கிறது. மோதல் முடிந்ததும் ஜேம்ஸ் பாண்ட் அந்த ஆசாமிக்கும் போதைக் கடத்தலுக்கும் தொடர்பில்லை என்பதை அறிந்து கொள்கிறார்... 

குர்ஜாக் அடுத்து அனுப்பும் பிரையன் மாஸ்டர்ஸ் (ஓவியர் பெயர் நைசாக செருகப்பட்டிருக்கிறது) என்கிற ஆசாமி முதலில் ஜெர்மனியில் உள்ள MI 6 ஒளிவிடத்தைத் தாக்கி அங்குள்ளோரை அழித்து அங்கே காத்திருந்து அங்கு வரும் ஜேம்ஸை ஏமாற்றி குர்ஜாக்கின் இரகசிய இடம் ஒன்றுக்குக் கொண்டு செல்கிறார். அங்கே சோதனைகள் பல VARGR போதை மருந்தின் உதவியுடன் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.. ஜேம்ஸையும் அந்த ஊசியால் தாக்கி விடுகிறான் மாஸ்டர்ஸ். குர்ஜாக் தன்னை வெளிப்படுத்திக் கொல்கிறான். அவன் கொசாவோ யுத்தத்தின்போது மனிதர்களை அடைத்து சித்திரவதை செய்யும் கூடங்களில் இதனைப் பரிசோதனை செய்திருக்கிறான். அவனது வாழ்நாள் சாதனை என்றும் கூறிக் கொள்கிறான்.
அந்த மருந்து புற்று நோயை குணப்படுத்தும் அதே சமயம் கொல்லவும் செய்கிறது. அந்த மருந்தை வைத்து உலகை ஆட்டிப்படைக்கும் திட்டத்துடன் இருக்கிறான் குர்ஜாக். அங்கிருந்து தப்பும் ஜேம்ஸ் பின்னர் ஒரு நார்வேஜிய யுத்தக் கப்பலை மையமாகக் கொண்டு இயங்கி வரும் குர்ஜாக்கை வேரறுப்பதோடு நிறைவை எட்டுகிறது கதை..
அடுத்த ஏழாவது புதிய கதை ஐடோலோன்..இல் தொடர்கிறது...




VARGR மொத்த கதையையும் சேர்த்து அச்சுக்குக் கொண்டு செல்வதாகவே தெரிகிறது.. 132 பக்கங்களில் வரவிருக்கும் கதைத் தொகுப்பு பரபரப்பைக் கிளப்பி விட்டிருக்கிறது.. தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் சார்பில் உங்கள் இனிய நிருபர் ஜானி சின்னப்பன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கிளாசிக் ஸ்பெஷல் -2-வகம் காமிக்ஸ் மார்ச் வெளியீடு

  இனிய வணக்கங்கள் தோழர்களே.. இந்த மார்ச் மாதம் வெளியாகியுள்ள காமிக்ஸ்களின் வரிசையில் வகம் லேட்டஸ்டாக இறக்கி இருப்பதுதான் இந்த கிளாசிக் ஸ்ப...