வெள்ளி, 23 மார்ச், 2018

நண்பர்கள் கவனத்திற்கு...Comixology-Amazon..

பேண்டம்.. முகமூடி வேதாளன். முகமூடி வீரர் மாயாவி..என்கிற பெயர்களில் விதவிதமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர்தான் 
கிறிஸ்டோபர் வாக்கர்..17, பிப்ரவரி 1936 அன்று லீ பால்க் the sing brotherhood என்கிற பெயரில் தானே கதை எழுதியும் ஓவியம் வரைந்தும் சில வாரங்களுக்குப் பின்னர் ரே மூர் அவர்களால் தொடர்ச்சியான ஓவியங்களை வரைந்து தள்ளியும் செய்தித்தாள்களில் வெளியான காமிக்ஸ் ஸ்ட்ரிப் இந்த பேண்டம்.. இவரை நாம் இந்திரஜால், முத்து மினி, முத்து, ராணி காமிக்ஸ், குமுதம் போன்ற பல்வேறு பத்திரிக்கைகளிலும் இதழ்களிலும் சந்தித்திருப்போம். இப்போது ஆன்லைன் வாசிப்பாளர்கள் அதிகரித்து வரும் சூழலில் வேதாளரின் கதைகள் அமேசான் நிறுவனத்தின் காமிக்சாலஜி கூட்டணியில் ஆன்லைன் வாசிப்புக்கென வெளியாகத் துவங்கியுள்ளன. அவர்கள் தமிழில் வெளிவந்த புத்தகங்களையும் தங்கள் வலைத்தளத்தில் கொண்டு வரும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஏன் தற்போது நடப்பிலுள்ள லயன் முத்து காமிக்ஸ் குழுமம் கூட சில சதவீத அடிப்படைகளில் கூட்டணி அமைக்கலாம். அதற்கான வாய்ப்பும் இருந்து கொண்டுதானிருக்கிறது. இந்நிலைமையில் நமது தமிழ் வாசகர்கள் பொழுதுபோக்காக சில வேதாளர் கதைகளை மொழிமாற்றம் செய்வதும் புது மொழிபெயர்ப்பில் என்கிற அடைமொழியோடு புது வசனங்களைக் கொண்டுவருவதுமாக இருக்கிறார்கள். நல்லதுதானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் சிக்கல் என்று வருகையில் சிக்கப்போவது அப்படி சிரமப்பட்டு கொண்டு வருபவர்களுக்குத்தான். ஆகவே பழைய இன்னும் வெளியே எடுக்கப்படாத நூல்களை மின்னூலாக்கம் செய்து வெளியிடுவது இதுவரை கேள்விக்குரியதாக இருந்ததில்லை. இனி இந்த நிலைமையில் சிக்கல் வரும் என்றே தெரிகிறது...தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் அவ்வப்போது தான் அறிந்த சேதிகளை உங்களோடு பகிர்ந்தே வந்திருக்கிறது. இதனையும்...என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன்...
No automatic alt text available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...