ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

ஏய்..மானிடா..ஜானி




பெற்ற தாயாய் 
உனைத் தாங்கும்
பூவுலகை 
வெற்றி கொண்ட 
கர்வம் கொண்டு 
நடைபயின்ற மானிடா...
அகிலம் அளக்க 
கடலைக் கடக்க 
யுத்தம் நூறு செய்திட்டாய்.. 
பல தலைகள்..
பல உயிர்கள்..
காவுகூட வாங்கினாய்..
ஒற்றை கிருமி 
உந்தன் தேகம் 
துரத்தக் கண்டு 
ஓடினாய்..
அடக்கியாளும் 
மனதை மாற்று.. 
சேவை செய்யும் 
இதயம் கைக்கொள்..
மீண்டும் வாழ 
வாய்ப்பிருந்தால்..
மீண்டு வா..வா..
மனிதனாய்..
-ஜானி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பாங்காக் பயங்கரம்

​பாங்காக் பயங்கரம்: கமாண்டர் ஜான் சின்னப்பனின் சாகசம் ​ஆண்டு 1944. இரண்டாம் உலகப் போர் ஆசியக் கண்டத்தில் உச்சகட்டத்தை எட்டியிருந்தது. போலந்த...