திங்கள், 6 ஏப்ரல், 2020

ஓடு..கொரோனா..ஓடு..


கொன்று தீர்க்கும்
கோரப் பசியை
கொண்டுதித்த 
கொரோனாவே..

கபத்தை
சுரத்தை
வெல்லும்
வரத்தை
சித்தர் முன்பே
எழுதி வைத்தார்..

அறிவும்
ஆற்றலும்
கொண்டுனை
வதைத்து
விலக்கி
கொல்வோமே..

தனித்து
விலகி
தவமே
செய்த
மூத்ததெம்
தமிழ்க்குடியே..

தனித்திருத்தல்
புதிதல்ல
புதிருமல்ல
எம்மோர்க்கு

விரட்டியடிப்போம்..
விலகியே..
வீழவைப்போம்
உன்னையே..
தொட நினைக்காதே
எம் மண்ணையே..
கொன்றொழிப்போம்
உன்னையே..

-ஜானி சின்னப்பன்

3 கருத்துகள்:

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...