திங்கள், 6 ஏப்ரல், 2020

ஓடு..கொரோனா..ஓடு..


கொன்று தீர்க்கும்
கோரப் பசியை
கொண்டுதித்த 
கொரோனாவே..

கபத்தை
சுரத்தை
வெல்லும்
வரத்தை
சித்தர் முன்பே
எழுதி வைத்தார்..

அறிவும்
ஆற்றலும்
கொண்டுனை
வதைத்து
விலக்கி
கொல்வோமே..

தனித்து
விலகி
தவமே
செய்த
மூத்ததெம்
தமிழ்க்குடியே..

தனித்திருத்தல்
புதிதல்ல
புதிருமல்ல
எம்மோர்க்கு

விரட்டியடிப்போம்..
விலகியே..
வீழவைப்போம்
உன்னையே..
தொட நினைக்காதே
எம் மண்ணையே..
கொன்றொழிப்போம்
உன்னையே..

-ஜானி சின்னப்பன்

3 கருத்துகள்:

ராபின்சன் குரூசோ_விமானப்படை கதை

வணக்கங்கள் அன்புள்ளங்களே..  நமது பிரியத்துக்குரிய அன்பு மொழிபெயர்ப்பாளர் திரு.ராஜேஷ் ராமன் அவர்களது இனிய பிறந்த தினத்தில் நாம் இன்று அவருக்க...