சனி, 16 மே, 2020

பழிவாங்கும் பாட்சா..

ஸ்பைடர் படை வாட்ஸ் அப் குரூப்பில் நடந்த இன்ட்ரஸ்டிங்கான போட்டியொன்றில்
ராணி காமிக்ஸின் சூப்பர் ஹீரோ டைகர் அண்ட் ஹென்றி..உலக பயங்கரவாதிகள் இயக்கத் தலைவர் பாட்சாவுடன் மோதிசிறையில் அடைத்தபின்னர் என்னாயிற்று..?!?
என போட்டி வைத்திருந்தனர்.. அதில் இடம்பெற்ற எனது கதை..இதோ உங்கள் பார்வைக்கு...


*************************
பரபரப்புடன் சிறையிலிருந்த பாட்சாவை சிறையிலிருந்து மீட்டுப்போனது சின்னதொரு குழு... 
வேகவேகமாக வெவ்வேறு வாகனங்களை மாற்றி தடங்களை மாற்றி தனது பதுங்குதளத்துக்குப் பாய்ந்து போய் பதுங்கினான் பாட்சா.. விடுப்பிலிருந்த ஹென்றியின் கைக்கடிகாரத்தில் அழைப்பு.. தலைவர் தொடர்புகொண்டு விவரம் சொன்னார்.. டைகரைத்தான் தொடர்புஎல்லைக்குள்ளேயே காணோம்.. விரைந்து போய் மெழுகு மியூசிய இரகசியக் கதவுகளைத் தாண்டி தலைவரை சந்தித்தார் ஹென்றி.. 
பாட்சாவைத் தேடும் படம் அசுர வேகத்தில் தொடங்கியது.. தனது பதுங்குதளத்தில் அதே நேரம் பாட்சா எக்காளமிட்டு சிரித்துக் கொண்டிருந்தான்.. மிக அழகாக அனைவர் கண்ணிலும் மண்ணைத் தூவி என்னை கொண்டு வந்து விட்டீர்கள்.. அனைவரையும் பாராட்டுகிறேன்.. உங்களுக்கொரு சூப்பரான செய்தி...
நான் சிறையில் சும்மா கம்பி எண்ணிக் கொண்டிருக்கவில்லை..நான் சிறையிலிருந்தபடியே உலகைக் கலக்கும் ஆயுதமான கிருமி ஆராய்ச்சிக் கூடம் ஒன்றினை ஆராய்ச்சியாளர்களை மிரட்டி  வடிவமைத்து அதன் இறுதிக்கட்டமாக வெற்றிகரமாக படு ஆபத்தான கிருமியொன்றினை உருவாக்கி வைத்திருக்கிறேன். ஆராய்ச்சியின் முடிவில் அந்த ஆராய்ச்சியாளர்களையும் கூண்டோடடு கைலாசம் அனுப்பி வைத்து விட்டாயிற்று.. சற்றே விட்டிருந்தீர்களானால் நமது அந்தக் குழுவே என்னை மீட்டிருக்கும்.. பல்வேறு நாடுகளிலும் அமைப்பை நிறுவியிருந்ததால் ஒவ்வொன்றும் தனித்தனியே என்னை மீட்க முயற்சி செய்திருக்கிறார்கள் போலும். நீங்கள் முந்திக் கொண்டு விட்டீர்கள்.. அந்த கிருமிகள் அடங்கிய பெட்டி ஏற்கனவே திட்டமிட்டவாறு வானில் நிலைகொண்டுள்ள நமது ட்ரோன்களில் ஒன்றில் பொருத்தி வைத்திருக்கிறேன்.. அதனை ஐக்கியநாடுகள் சபையில் போய் மோதச் செய்யப் போகிறேன்.. உலகமெங்கும் குழப்பம் விளைவிக்கவும் மீண்டும் இந்த பாட்சாவை உலகமே திரும்பிப் பார்க்கவும் என்னைக் கண்டு நடுநடுங்கவும் செய்யப் போகிற ஆயுதம் அது.. அதன் கட்டுப்பாட்டு தூரவிசைக் கருவி இதோ என் காலடியிலுள்ள பொத்தானை அழுத்தினால் தானாகவே செயல்படத் தொடங்கிவிடும்.. ஹாஹாஹா என்றவாறே தனது இருக்கையின் எதிரிலிருந்த குமிழ் போன்ற அமைப்பை மிதிக்கக் காலைக் கொண்டு போனான்.. காலின் மீது சின்னஞ்சிறு ராக்கெட் ஒன்று சூழ்ந்து நின்ற கும்பலில் ஒருவனது பேனா முனையிலிருந்து புறப்பட்டு  முன்னேறிப் பாய்ந்தது.. நரம்பை முடக்கும் நச்சு ஒன்று பாட்சாவின் காலில் பாய லேசாக இரண்டு இரத்தத் துளிகள் எட்டிப் பார்த்தன.. காலை நீட்டமுடியாமல் சுருண்டான் பாட்சா.. கூட்டத்திலிருந்து 
"உன் ஆட்டம் முடிந்து விட்டது பாட்சா" என்றபடி சிரித்துக் கொண்டே வெளிப்பட்டார் டைகர்..
"உன் சதித் திட்டத்தை ஆரம்பத்திலிருந்தே கவனித்து வந்தோம்..அதனை எப்படி முடிக்கப் போகிறாய் என்பதில் குழப்பம் வர நேரே களத்தில் குதித்தது எங்கள் படை.. நாங்களே உன் கும்பலைப் போன்று வேடமிட்டு உன்னை காப்பாற்றி உன்னைக் கொண்டே இந்த இரகசிய இடம்வரை வந்து விட்டோம்.. அந்த தொலைஇயக்குவிசையை மாத்திரம் எப்படி இயக்கப் போகிறாய் என்பதைத்தான் எதிர்பார்த்து காத்திருந்தோம்.. தவளை தன் வாயாலேயே கெடும் என்பதைப் போல நீயே உளறித் தொலைத்து விட்டாய்..டொட்டடாங்.."
பாட்சா பல்லைக் கடித்து அரைத்து ஆத்திரமானான்..
ஐயகோ காலில் செலுத்தியிருந்த பாரிச வாயு விஷம் அவனை அசைய விடவில்லை..
பேனாவின் மறுபகுதியிலிருந்த காமிராவின்  நடப்பவை அத்தனையையும் வெவ்வேறிடங்களிலிருந்து லைவ்வாக இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஹென்றியும் தலைவரும் கூடவே சொன்னார்கள்..
*டொட்டடாங்*
-நிறைந்தது-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...