புதன், 2 டிசம்பர், 2020

காணாமல் போன கண்கள் _மலர் காமிக்ஸ்_திருப்பூர் குமார்

ஆத்தா... மகமாயி.. தேவி துர்க்கே.. இந்த மலர் காமிக்ஸால் உன் புகழ் பாடுகிறோம்.. காமிக்ஸ் காட்டாற்றில் நீந்தும் மானிடருக்கு ஆசிகள் பல அருளம்மா... உலக சித்திரக்கதைகளின் வரலாற்றில் மீண்டும் ஒருமுறை அருள்பாலிக்க எழுந்தருளும் தேவி துர்க்காவின் அதிசய கண்களின் மகிமையைக் கண்டு களித்திட...வாசித்து மகிழ்ந்திட கமெண்டுகளில் கானம்பாடிட.. சக்தி..சக்தி..சக்தியென கூவி அழைத்திட..ஆத்தாவின் அருளை நினைந்திட உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.. First on net..முதன்முறையாக வாசகர்களை ஆசீர்வதித்திட ஆன்லைனில் எழுந்தருள்கிறாள் தேவி துர்க்கா... வாருங்கள் கொண்டாடித் தீர்ப்போம்.. திருப்பூரின் சொத்து..காமிக்ஸ் உலகின் நட்பூ...எங்கள் இதயத்தில் ஆசனமிட்டு அமர்ந்திருக்கும் தோழர் திருப்பூர் குமாருக்கு என்றென்றும் நன்றியுடன் இன்று இப்புத்தகம் உலகுக்கே சொந்தமாகிறது.. ஆசீர் கிட்ட வாழ்த்துவோம்.... 

அது ஆழியூர்...அங்கே நூறு ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் துர்க்கை அம்மன் கோவில்..மாயாண்டி தலைமையில் பரட்டை, கந்தன், அப்துல்லா ஆகியோர் அந்த கோவிலை கொள்ளையடிக்க வருகின்றனர். காவலாளியை கொன்றுவிட்டு சிலையின் கண்களைக் கொள்ளையடித்து செல்கின்றனர். ஆலய குருக்களும், தர்மகர்த்தாவும் அந்த கண்கள் வைரக்கண்கள் என்கிறார்கள். அந்த கண்களுக்கென்று தனியே சாபமிருக்கிறது. அதை எடுத்தால் மரணம் நிச்சயம் என்கிறார்கள்.. வைர கண்களை திருடிப்போன நால்வரின் கதியென்ன? அறிந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் மட்டும் தெரிவியுங்கள். விரைவில் சித்திரக்கதையாக இந்த மலர் உங்களை வந்தடையும்.. 

மதுரை மண்ணின் தெற்கு மாசி  வீதியில் அமைந்திருந்த கலைப்பொன்னி நிறுவனத்துக்காக திரு.கே.பாண்டிமணி அவர்களது ஆர்டரில் சிவகாசியை சேர்ந்த திரு ஐ.குருசாமி அவர்கள் தனது ஸ்ரீ.சங்கரேஸ்வரி ப்ராசஸ் பதிப்பகம் 1983 ஆம் ஆண்டில் வெளியிட்ட கதை இது.. ஒரு நிமிடம்..உங்களில் எத்தனை பேர் இந்த புத்தகத்தை வாசித்திருக்கிறீர்கள்..நினைவிருக்கிறதா? எங்காவது பார்த்தாவது இருப்பீர்களா? பதில் ப்ளீஸ்..

தரவிறக்க சுட்டி: https://www.mediafire.com/download/1w6omyzr22cgbc8


















 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...