செவ்வாய், 3 மே, 2022

மந்திரபானம்_சிறார் சித்திரக்கதை வரிசை#2-01_ரங் லீ காமிக்ஸ்

 இனிய வணக்கங்கள் பிரியமானவர்களே.. 

ரம்ஜான் பெருவிழா கொண்டாடும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் என் நலவாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.. 

நம் இல்லத்தின் செல்வங்களுக்கு நல்ல பொழுது போக்கினை உருவாக்கித்தர வேண்டியது நமது கடமையாகும். இப்போதைய விஷுவல் உலகினில் புத்தகங்கள் தம் பொறுப்பினை எப்போதும் உணர்ந்தே உள்ளன. அமைதியுடன் குறிப்பிட்ட தலைப்பில் நம் கவனத்தை விளம்பர இடையூறுகள் இன்றி நிலைநிறுத்தி வாசிக்க புத்தகங்களே இன்றுவரை சிறந்த கருவியாக இருந்து வருகின்றன.. அதனை நாமும் உணர்ந்து கொண்டால் நமது பிள்ளைகளுக்கு தங்கள் பாடங்கள் தவிர மற்ற பொழுது போக்குகளையும் நூல் வடிவில் கொடுப்பது சுலபமாக இருக்கும். இப்போது வரும் சித்திரக்கதைகள் பெரும்பாலும் பெரியவர்களுக்கான கதைகளாகவே அமைந்து விட்ட தருணத்தில் ரங் லீ காமிக்ஸ் தனது பறக்கும் பானம் என்கிற புதிய காமிக்ஸினை சிறார்களை கவனத்தில் கொண்டு முழுமையாக சிறார்களுக்காகவே கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்களின் இந்த தைரியமான முயற்சியினைப் பாராட்ட வேண்டும். அவர்களை ஆதரித்தால் மற்ற சித்திரக்கதை நிறுவனங்களுக்கும் அது ஒரு ஊக்க சக்தியாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. 



இந்த பறக்கும் பானம் சித்திரக்கதை எளிதில் வாசிக்க ஏதுவாக சிறு சிறு கதைகளாக அமைந்திருக்கிறது. அதில் உள்ள மற்ற கதைகளின் தலைப்புகள்.. 

1. பறக்கும் பானம் 

2. ரகசிய கலவை 

3. மேதாவி கிளாரா 

4. மந்திரபான போட்டி 

5. கனவில் கொண்டாட்டம் 

டேவிட் ரீவாய் படைப்பினை தமிழில் மொழிபெயர்த்து நமக்கு வழங்குபவர் ஸஹானா இளங்குமரன். படைப்பினை சென்னை போரூரில் இயங்கி வரும் ரங்லீ பதிப்பகம் மே வெளியீடாக வெளியிட்டிருக்கிறது.    

சின்னஞ்சிறு கதைகளில் விரிகிறது நாம் கண்டிராத ஆச்சரியங்கள் மிகுந்த உலகம். அங்கே வண்ணங்கள் கண்ணைப்பறிக்கும்.. புதுமைகள் என்றும் தொடரும்.. குட்டிப் பெண் தாரா அவளது சுட்டிப் பூனை கிளாரா இருவரும் ஒன்றாக செய்யும் சாகசங்களை மேஜிக் உலகின் பின்னணியில் அருமையாக கொண்டு சென்றிருக்கிறார் டேவிட் ரீவாய்.. அவளின் மேஜிக் சக்தியினால் உருவாக்கும் பானங்களும் அதனால் உருவாகும் நன்மைகளும் சுற்றிலும் உள்ளவர்களுக்கு சிறுமி தாரா எப்படி உதவுகிறாள் என்பதைக் குறித்தெல்லாம் தானியா, குங்குமி, லவங்கி போன்றோரின் வண்ணமயமான மேஜிக் உலகில்    திறம்பட சிறுவர்களை கவரும் விதத்தில் ஓவிய ஜாலம் செய்து காண்பித்திருக்கிறார்கள்.  

இந்த கதைகள் தவிர இலவச விளம்பரங்கள் செய்து கொள்ள ஒரு வாய்ப்பினையும் ரங் லீ வழங்குகிறது. பள்ளிகளில் நடைபெறும் ஓவியப் போட்டிகளில் பங்கேற்ற சிறார்களின் ஓவியங்களை காட்சிப் படுத்தியிருப்பது சிறப்பு.. 

நூறு ரூபாய் விலையில் அருமையான ஒரு ஓவிய, சித்திரக்கதை அனுபவத்தை தங்கள் குழந்தைகளுக்கு வாங்கித் தந்து உங்கள் மழலைகளின் உலகினை இன்னும் இன்பமயமாக்கிட இந்த பறக்கும் பயணம் உதவட்டும். எனது வாழ்த்துக்களுடன்.. 

உங்கள் நண்பன் ஜானி வி சின்னப்பன் 

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...