செவ்வாய், 13 செப்டம்பர், 2022

ஜீன் ஆட்ரீ_அறிமுக நாயகன்_ரங்லீ காமிக்ஸ்

வணக்கங்கள் தோழமை உள்ளங்களே.. புத்தம்புது வெளியீடான ரங்லீ பதிப்பகத்தின் ஜீன் ஆட்ரீ.. 
 
மேற்கத்திய அத்துவானக் காட்டுக் கதைகள் என்கிற வரிசையில் இந்த நாயகர் களமிறங்கி இருக்கிறார். 
ரங்லீ காமிக்ஸில் வரக்கூடிய ஒலி வார்த்தைகளுக்காக இயல்பொலி சொற்களை கேட்டு வாங்கி பதிப்பித்ததுடன் அதனை யாரெல்லாம் கூறினார்களோ அந்த பட்டியலைக் கொடுத்து மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள் ரங்லீ பதிப்பகத்தார்...  



அத்துவானக் காட்டுக் கதைகள் தலைப்புக்கான விளக்கம்.. 

முதல் கதையான மோதும் பகரூ.. ஜீன் ஆட்ரீ மெஸ்கைட்டுக்கு விரைந்து கொண்டிருக்கும்போது வழிப்பறி கொள்ளை, கொலை நடந்திருக்கும் இடத்தினை கடக்க நேரிடுகிறது. 
சாதாரணமான ஒரு எளிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனம் ஏன் தாக்கப்பட்டிருக்கிறது என்று குழம்பியபடி பயணத்தைத் தொடரும்  நாயகர் ஜீன் ஆட்ரீயை நோக்கி எதிர்பாராமல் ஒரு தோட்டா  பாய்ந்து வருகிறது. ஏன் 
எதற்கு என ஆராயப் புகும் நாயகருக்குக் கிடைத்திருப்பது ஒற்றை சிறகு.. அதுவும் ஒரு பச்சைக் கிளியுடையது. அந்த ஒரு தடயத்தை வைத்தே எதிரியை எவ்வாறு அவர் கண்டு பிடிக்கிறார் நடந்த கொள்ளை, கொலைகளுக்கு யார் காரணம் என்கிற அதிரவைக்கும் திருப்பங்கள் வாசகரை தொடர்ந்து வாசிக்க வைத்து விடும்.    

தமிழில் நடைமுறையில் இல்லாத ஏன் இலக்கண, இலக்கியங்களில் கூட அவ்வளவாக தென்பட்டிருக்காத வார்த்தைகளைக் கண்டுபிடித்து இரசிகர்களிடம் கொண்டு சேர்த்து பெருமுயற்சி எடுத்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர் திரு. கதிரவன். ஆனாலும் இத்தனை அதிக வார்த்தைப் பிரயோகங்கள் தேவையா, சற்றே குறைத்திருக்கலாம் என்கிற குரல்கள் ஆங்காங்கே கேட்கப்படுகிறது. ஆசிரியர் கவனிப்பார் என்று நம்புகிறோம். 
பச்சைக் கிளி எல் லோரா எல்லோரையும் ஈர்ப்பது உறுதி.. நல்ல நாயகர்.. தொடர வாழ்த்துவோம்.. 


இரண்டாம் கதையாக பரிமளிப்பது.. சரி சரி.. பழக்க தோஷம்..

இரண்டாம் கதையாக வந்திருப்பது ஏதச் சுவடுகள்..  குற்ற சுவடுகள் என்றும் பொருள் கொள்ளலாம். இந்த சித்திரக்கதையும் முழுவண்ணத்தில் கவனம் ஈர்க்கும் ஒரு சித்திர விருந்தாகவே மலர்ந்துள்ளது. நாயகர் ஜீன் மாடுகளுக்குக் காவலனாக வெப்ஸ்டர் பண்ணைக்குப் போகும் வழியில் ஒரு திருடியை சந்திக்க நேர்கிறது. அதன் பின்னர் மாட்டுக் கொள்ளைக்காரர்களை மடக்கும்போது அதில் நீடா என்கிற சுழல் காற்றுப் பெண் அறிமுகமாகிறாள். வசனங்கள் கவியுருக் கொண்டு சற்றே இன்பமான வாசிப்பை நல்குகின்றன.. தொடரும் நீடாவின் தாக்குதல்கள் அவள் தரப்பில் உள்ள நியாயத்தை முன்னே நிறுத்துகின்றன.. ஜீன் அவளுக்கான நியாயத்தை பெற்றுத்தரும் முயற்சியில் வெற்றி பெற்றாரா? என்கிற கேள்விக்கான விடையை இந்த நூலை வண்ண வண்ண சித்திரங்களுடன் வாசித்துத் தெரிந்து கொள்ளலாமே தோழமைகளே.. 

 


நூறு ரூபாயில் அட்டகாசமான பதிப்பாக வெளியாகியிருக்கும் இந்த நூலை வாங்க தொடர்புக்கு: 
ரங்லீ பதிப்பகம்: 
9043045312  

உதவிக்கு: திரு.k. v. கணேஷ்-8838272995  



என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன்

 

2 கருத்துகள்:

  1. நான் கருப்பு கிழவியின் ரசிகன், எனவே நீங்கள் வெளியிட்ட ஆரம்பகால கதைகளில் சுவாரஸ் மாக இருந்தது. கடைசியாகப் வந்த (hollywood )2 கதைகள் மரண மொக்கை என்பதைப் சொல்லித்தான் ஆகவேண்டும்.
    அதிலும் கௌபாய் என்று சொல்லி வெளிவந்த கதை wrost , pls avoid. Long time survival பண்ண, இந்த மாதிரி கதைகளைப் தவிர்க்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  2. தங்கள்கருத்தை ரங்லீ பதிப்பகத்துக்கு தெரிவிக்கிறேன் தோழர். நன்றி.

    பதிலளிநீக்கு

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...