வியாழன், 15 செப்டம்பர், 2022

LC_423_சொர்க்கத்தில் சாத்தான்கள்_டெக்ஸ் வில்லர்_ஆகஸ்ட் 2022

 வணக்கங்கள் தோழமை உள்ளங்களே.. 

இந்த மாத லயன் காமிக்ஸ் வெளியீடாக மலர்ந்திருப்பது இளம் டெக்ஸ் வரிசையில் "சொர்க்கத்தில் சாத்தான்கள்" 




ஒவ்வொரு டெக்ஸ் வில்லர் சாகசத்திலும் ஏதாவது ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு சிறு உண்மை சம்பவங்களாவது இணைக்கப் பட்டிருக்கும். அப்படி இணைக்கப்பட்ட சம்பவங்களும் கதைக்கு நம்மை இன்னும் நெருக்கமாக்கும். 



இந்த கதையில் சம்பந்தப்பட்டவர்கள் மோர்மன்கள். நல்ல கொள்கையுடைய மோர்மன்கள் இடையில் தீவிர கொள்கை உள்ளவர்கள் இருப்பதால் ஏற்படும் விளைவுகளை இந்த கதையில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எப்போதுமே மனிதர்கள் கைக்கொள்ளும் மதங்கள் அவர்களை நல்ல முறையில் ஒரு ஒழுங்குக்குள் கொண்டு வந்து இறைவன் என்கிற ஒரு மேலான சக்தி இருக்கிறது அதற்கு பயந்து நடந்தால் வரப்போகும் நல்லது கெட்டதுகள் அனைத்தையும் தாங்கும் சமாளிக்கும் சக்தி நமக்குக் கிட்டும் என்பதே மத வாதிகளின் அடிப்படை அப்படி வணங்கும் தெய்வங்களின் அடிப்படையில் ஒரு கூட்டம் ஒன்றிணைவதும் அந்த ஒன்று சேர்தல் நன்மை பயப்பதும் கண்கூடு. நம் திருவிழாக்கள், நமது ஆலயங்கள், நமது ஒன்று கூடுகை என்று அமைதியாக ஒரு கூட்டம் இருக்கும் வரை எந்த பிரச்சினையும் இல்லை. அது எப்போது தன்னை சுற்றி இருப்பவர்களும் தம் குடைக்குக் கீழ் வர வேண்டும் என்கிற நினைப்பில் அவர்களை ஆளும் எண்ணத்தை விதைக்கும்போது வரும் தீமை எத்தனை கொடூரமாக இருக்கும் என்பதுதான் இந்தக் கதையின் அடிப்படை. 



நம் நாயகன் டெக்ஸ் அறிந்த ஒரு நல்ல மோர்மன் மதத்தைப் பின்பற்றும் இனத்தவர் ஒரு தேவாலயத்தை நகருக்குள் கட்டி எழுப்பி வழிபட எண்ணுகிறார்கள். தீவிர மோர்மன் என்று விலக்கி வைக்கப்பட்ட வில்லன் கூட்டத்தார் ஆங்காங்கே தாக்குதல் தொடுத்து அழிவை விதைப்பதுடன் சம்பந்தப்பட்ட அப்பாவிகளின் பெண் குழந்தைகளை கொண்டு சென்று விடுகிறார்கள். அவர்களின் நோக்கம் என்ன? அதில் டெக்ஸ் அறிந்த குடும்பத்து அப்பாவி இளைஞன் எவ்வாறு பாதிக்கப்படுகிறான்? 


ஏற்கனவே பிரச்சினையின் மீது சவாரி செய்து கொண்டிருக்கும் நம் இளம் டெக்ஸ் எவ்வாறு அதில் இருந்து அந்த அப்பாவியை மீட்க பிராயத்தனப்படுகிறார்? அந்த அப்பாவியை மீட்கப் புகும்போது அவர் கண்டு பிடித்த உண்மைகள் என்னென்ன? அந்த உண்மைக்கு அவர் எப்படி நீதி நியாயம் பக்கம் இருந்து போராடி தனது நண்பனைக் காக்கிறார்? என்ற அத்தனை சம்பவங்களையும் பரபரப்பாக இந்த நூலில் வாசிக்கவிருக்கிறீர்கள். 


எண்பதே ரூபாயில் இப்படி ஒரு பரபரப்பான கதையை நமக்காக தேர்வு செய்து கொடுத்த லயன் எடிட்டர் திரு விஜயன் அவர்களை பாராட்டியே தீர வேண்டும். இந்த அதிரடிப் பயணம் அடுத்தடுத்தும் தனித் தடத்தில் தொடர இருப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. வெளியீடு எண் 423  யாக வெளியாகி இருக்கும் இந்த நூல் கட்டாயம் உங்கள் லைப்ரரியில் இருக்க வேண்டிய நூல். நன்றி. 








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...