வியாழன், 23 நவம்பர், 2023

ஸ்கேனா, ஒரிஜினலா எது சிறந்தது?

 வணக்கங்கள் காமிக்ஸ் வட்ட நண்பர்களே.. 

ஒரு பழைய கிழிந்த புத்தகத்தின் விற்பனைக்கு முன்னதாக அதற்கொரு ஸ்கேன் அட்டையும் நாலைந்துகிழிந்து போன பக்கங்களுக்கு பதிலாக ஜெராக்ஸூம் இணைத்து விற்பது இப்போதெல்லாம் வாடிக்கையாகி விட்டது. 

அது தவறு, பழைய புத்தகங்களின் விலை குறைந்து போகிறது. அதற்குரிய நியாயமான விலையை பெற முடியவில்லை என்று ஒரு தரப்பும்,


நீங்க வேற எங்களுக்கு வாங்கக் கூடிய விலைகளில் இல்லாது வானமளவு விலை உயர்வுகள். ஆனால் இப்படி சிறிது பழுதடைந்த புத்தகங்களோ விலை குறைவாகவும் கொஞ்சம் வாங்கக்கூடிய வகையிலும் இருக்கிறது என்று ஒரு தரப்பும் கூறி வருகிறார்கள்.

நிற்க..

இதில் எனது பார்வையினை பதிவு செய்யும் முகமாக ஒரு சில வரிகள். தொந்தரவெனில் தாவி விடுக.. நன்றி..

ஒரு சித்திரக் கதைக்கு ஸ்கேன் அட்டை போட்டு விற்பனைக்கு காட்சிப்படுத்தல்  என்றாலும் அதற்குண்டான செலவுகளும் இருக்கும். அந்த செலவு ப்ளஸ் உழைப்புக்கும் பின்னே ஒரு Cost ஆகவே செய்யும். அதையும் கணக்கில் கொள்ள வேண்டும். விலைகள் விழுவது குறித்து கொஞ்சம் வருத்தங்கள் தொடரவே செய்யும். ஒரு புத்தகத்தினை முழுவதும் ஜெராக்ஸ் செய்து விட்டு அதனை அப்படியே ஒரு விலைக்குக் கொடுத்தல் என்பது ஜெராக்ஸ் அங்காடிகளில் அவ்வப்போது காணக்கிடைக்கிற காட்சியே. இதை காமிக்ஸ் வட்டாரத்தில் கூறினால் கோபமும், மனவருத்தங்களும் கொஞ்சம் பேருக்கு எழவே செய்கிறது. ஒரு அபூர்வப் படைப்பு மிக அரிதாகவே கிடைக்கிறது என்ற நிலையில் தேடிச் சோர்ந்து போனவர்களுக்கு ஒரு வசதியாக இந்த அட்டைகளைப் பார்க்க முடிகிறது. அதேசமயம் அவற்றின் ஒரிஜினல்கள் நல்லதொரு சேமிப்பினைக் கரைத்து வாங்கி வைத்திருந்தேன் அதனை விற்பதற்காக ஒரு சிரமமான சூழலின் காரணத்தில் விற்பனைக்குக் கொண்டு வந்தால்  விலைகள் இந்த ஸ்கேன் அட்டைகள், ஜெராக்ஸ் பக்கங்களால் குறைகிறதே என்கிற வேதனைகளும் நிஜம்தானே?! இப்போதைய காமிக்ஸ் உலகின் நிலவரத்தை நான் பார்த்த வரையில் புரிந்து கொண்டவரையில் எனக்கு என் சிற்றறிவுக்கு எட்டியதை எடுத்துரைத்தேன். ஏற்போர் ஏற்க. மறுப்போர் மறுக்க. தடையேதுமில்லை..

🫵🏻உங்கள் நண்பனாக முயலும் 🙏🏻ஜானி

 ஹக்குனா மட் டாடா👋🏻👋🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...