வெள்ளி, 24 நவம்பர், 2023

தி வில்லேஜ்_திகில் கிராமம் _அமேசான் ப்ரைம்

 இனியவர்களுக்கு வணக்கங்கள்..

அமேசானில் இன்று ரிலீஸ் ஆகியுள்ள 

திகில் கிராமம்..தி வில்லேஜ்..

யாளி ட்ரீம் கிரியேஷன் படைப்பு..

ஏற்கனவே எதிர்பார்த்ததைப் போன்று லோன் உல்ப் பப்ளிகேஷன் ஒரிஜினல் கதையில் சில திருத்தங்களையும், ஜாதிப் பெயர்களையும் நீக்கிவெளியிட்டதை அடியொற்றியே கதை தூத்துக்குடியினை நோக்கி அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரிஜினல் வெர்ஷனில் பெங்களூர் என துவங்கும். இடையே சுனாமி வரும். கடலே இல்லாத இடத்தில் எப்படி சுனாமி என கதையில் நிகழ்ந்திருக்கும் சிறு பிரச்சினையை அவசியம் கருதி மாற்றி அமைத்ததுடன் லோன் உல்பின் திடமான நம்பிக்கையால் 700/- விலைக்கு விற்பனையாகிக் கொண்டிருந்த வெற்றிப்படைப்பு தி வில்லேஜ் தமிழுக்கு 399/- மட்டுமே என்று விலைக்குறைப்பு செய்யப்பட்டது. இதுதான் லோன்உல்பின் சாதனையென நான் கருதுகிறேன். தோழர் பழனி வேல் குடும்பத்துக்கான உதவிப்பணியும் இந்த படைப்பினைமுன் வைத்தே மேற்கொள்ளப்பட்டதையும் நன்றியோடு பார்ப்போம். இதன் வீற்பனை மற்றும் கண்காட்சி வகம் மற்றும்  ரங்லீ ஸ்டால்கள் மூலமே வரும் புத்தகத் திருவிழாவிலும் தொடர்கிறது. வாசிக்காத வாசகர்கள் வாங்கி ஆதவளிக்க கேட்டுக் கொள்கிறேன். எனது மொழிபெயர்ப்பினை முதல் இதழாகக் கொண்டு வந்து கௌரப்படுத்தியமைக்கு லோன் உல்ப் பதிப்பகத்துக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🏻🙏🏻🙏🏻

ஹைலைட்ஸ்.

*கதையே முற்றிலும் அலசி ஆராயப்பட்டு தகுந்த மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளனர். ஆகவே கதை உங்களை கூடுதலாக இரசிக்க வைக்கும் என்பது உறுதி. 

முடிந்தவரை தங்கள் வட்டாரத்திற்கு தெரிவித்து ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...