சனி, 10 பிப்ரவரி, 2024

காட்டேறியின் சாம்ராஜ்யத்தில்..!_டெக்ஸ் வில்லர் சாகசம் பிப்ரவரி 2024

 ப்ரிய வணக்கங்கள் வாசக நெஞ்சங்களே.. 

இந்த மாதத்தில் வெளியான காட்டேரியின் சாம்ராஜ்யத்தில் என்கிற சித்திரக்கதையை இப்போது பார்ப்போம்..   ஏற்கனவே காட்டேரி கானகம் போன்ற எதுகை மோனைகளில் பெயர் வந்திருப்பதால் இந்த முறை காட்டேரியின் சாம்ராஜ்யத்தில் அதனை சந்திப்போம்..

சித்திரக்கதை பெயர்: காட்டேரியின் சாம்ராஜ்யத்தில்..!

வெளியீட்டு எண்: 444 

நாயகர்: டெக்ஸ் வில்லர்

தமிழில்: லயன் காமிக்ஸ்

விலை: 160






கதை சுருக்கம்: நம் ஆதர்ச நாயகர் டெக்ஸ் வில்லர் அண்ட் கோவின் நண்பர் மொரிஸ்கோ. ஒரு சமகால ஆராய்ச்சியாளர். அவரது ஆராய்ச்சிகளில் அமானுஷ்ய, அறிவியல், இரசவாதம், விண்வெளி ஜந்துக்கள் என்பவையும் உள்ளடக்கம். அவருக்கு புதிரான மரணங்கள் பற்றி செய்தி வருகிறது. கிடைக்கும் சடலங்கள் முழுவதுமாக இரத்தம் உறிஞ்சப்பட்டு கிடப்பது தெரியவருகிறது. அது எதனால் என்று ஆராயப்புறப்படுகிறார். அதே வேளையில் இந்த சிக்கல் நிறைந்த பிரச்சினையின் மறு நுனியில் தங்கள் தகப்பனைத் தேடித் திரியும் ஒரு அண்ணன், தங்கை இருக்கிறார்கள். அவர்களைக் கொள்ளையடிக்க வரும் கூட்டம் பற்றிய செய்தியைத் தொடர்ந்து டெக்ஸ் வில்லர் நால்வர் அணி கிளம்புகிறது. அப்படி புறப்படும் அணி எப்படி அந்த இனந்தெரியா எதிரிகளை சந்தித்தது என்று பதைபதைக்கும் பக்கங்கள் நமக்கு மிரள வைத்து சொல்லி முடிக்கின்றன.. இதில் வரும் ஜந்துக்கள் பலிகேட்ட புலிகள் கதையினை நமக்கு மீண்டும் நினைவூட்டுவதாக இருந்தாலும் பரபரப்பான கதையின் நெய்தலை இரசித்து மகிழும் வண்ணமே கதை உருவாகியுள்ளது.. வாங்கி வாசித்து மகிழுங்கள். 
என்றும் அன்புடன் உங்கள் நண்பன் ஜானி.      



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...