சனி, 10 பிப்ரவரி, 2024

வீரனுக்கு மரணமில்லை_வேதாளர்

 வணக்கங்கள் அன்பு உள்ளங்களே..

வீரன் என்ற சொல்லுக்கு இன்னொரு பெயர் வேதாளர்.. அத்தனை சிறப்பு மிக்க வேதாளரின் கதைகளை எப்படி எத்தனை முறை வாசித்தாலும் அலுப்பு தட்டிடாது செம்மையான ஒரு சித்திரமாக இந்திரஜால், ராணி காமிக்ஸ், குமுதம் ஆகிய பெரும் பத்திரிக்கைகள் ஏற்கனவே நமக்கு வழங்கி இருக்கிறார்கள்.. இம்முறை லயன் மூலமாக தமிழ் பேசி மயக்கி வரும் வேதாளர் வீரனுக்கு மரணமில்லை என்னும் கதை மூலமாக நம்மை சந்திக்கிறார். 

அடுத்த வெளியீடான மாடஸ்டியும் நம்மை ஆர்வப்படுத்துகிறார்.. 
வி காமிக்ஸ் ஆசிரியர் பக்கம்..
துவக்கப்பக்கம் உங்கள் பார்வைக்கு..
சீனப்பெரியவர் ஒருவரின் அழைப்பை ஏற்று நகருக்கு வரும் வேதாளர் எதிர்கொள்ளும் அமானுஷ்ய சம்பவம் என்ன? அதில் அவரது பங்களிப்பு எப்படி அமைகிறது. போலியாக நடித்து வரும் அதிகாரி ஒருவரின் முகத்திரை கிழிந்ததா? என்ற விவரங்களை புத்தகத்தை வாங்கி ஆதரித்து தெரிந்து கொள்ளுமாறு அழைக்கிறது லயன் காமிக்ஸ்.. 








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...