புதன், 14 பிப்ரவரி, 2024

எங்கள் ஊர் நூலகத்துக்கான இரஷ்ய சிறுவர் இலக்கிய அன்பளிப்புகள்

 வணக்கங்கள் அன்பு வாசக இதயங்களே. உங்கள் அனைவருக்கும் வேலன்டைன்ஸ் டே வாழ்த்துக்கள்.. 

சிறுவர் இலக்கியத்தில் இரஷ்ய படைப்புகள் மிகவும் சிறப்பானவை. அவற்றை மணலூர்ப்பேட்டையில் சிறப்பான நூலகர் திரு.பாரதி மணாளன் அவர்களின் தலைமையில் இயங்கி வரும்  முன்னோடி நூலகமான அரசு நூலகத்தின் உபயோகத்துக்காக ஆசிரியர் திரு.நீதிதாஸ் @ அஜ்ஜி ராஜ் அவர்கள் அன்பாக அளித்திருந்த நூல்களை கொண்டு சென்று வழங்கிட உடன் வந்திருந்த நண்பர்கள் திரு.லூர்து ராஜ், திரு. கோவிந்தன் மற்றும் மாந்திரீக ஆசான் திரு.மலையப்பன் அவர்களுடன் மணலூர்ப்பேட்டை வாசகர் வட்டத்தின் தலைவராக செயல்பட்டு வரும் கற்பக விலாஸ் பாத்திரக்கடை உரிமையாளர் திரு.சந்திரமோகன் ஆகியோர் முன்னிலையில் வழங்கி வந்தோம்.. அது தொடர்பான புகைப்படம் இதோ.. 

திரு.நீதிதாஸ் அவர்களுடைய அன்பளிப்பால் எங்கள் நூலக வாசக வாசகியர்களின் மழலைகள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி. முன்னொரு காலத்தில் யுனெஸ்கோ பதிப்பகத்தின் தமிழ் நூல்கள் ஏகப்பட்டவை இந்த நூலகத்தில் நிறைந்து வழிந்தன.. நிறைய அறிவியல் நூல்களும் ராதுகா பதிப்பகத்தில் இருந்து எங்கள் நூலகத்துக்கு அணி சேர்த்தன.. அவை இன்று இல்லாமல் போனாலும் இரஷ்ய சிறுவர் இலக்கியங்களை இங்கே கொண்டு வந்து சேர்த்ததில் நிச்சயம் ஒரு சந்தோஷம் உள்ளுக்குள் நிறைவது உணர முடிகிறது. உதவிய அனைவருக்கும் நன்றிகள். 

என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பகைவருக்குப் பஞ்சமேது?_Tex willer April 2024

 வணக்கம் தோழமை உள்ளங்களே.. லயன் காமிக்ஸ் ஏப்ரல் மாத வெளியீடுகள்... பகைவருக்குப் பஞ்சமேது? டெக்ஸின் லேட்டஸ்ட்..இதைப்பற்றி தோழர் சுரேஷ் தனபால்...