வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். அவரது பல்வேறு கட்டுரைகளையும் ஒரு தொகுப்பாக தொகுத்து ஏழு நூல்களாக நமக்குப் பரிமாறவிருக்கிறார். அதற்கான வெளியீட்டு விழா இன்று இன்னும் பதினைந்தே நிமிடங்களில் துவங்கவிருக்கிறது.. அவரை ஒரு இரசிகனாகவும், நண்பனாகவும், இப்போது பணிமாறுதலால் நூறு கிலோமீட்டருக்கு அப்பால் சற்றே தூரத்தில் இருந்தும் இரசித்து வாழ்த்திக் கொள்கிறேன்.. அவரது வலைப்பூ இணைப்பு இதோ..
https://tamilcomicsulagam.blogspot.com/
நாம் ஒரு கதையைப் படித்து விட்டு அப்படியே கடந்து சென்று விடுவோம். அதன் பின்னணி, அதில் சம்மந்தப்பட்ட ஓவியர்கள், கதாசிரியர்கள் பற்றிய குறிப்புகளை சுவாரசியம் கலந்து தருவது இவரது பாணி.. ஆன்லைனில் வாசித்த கட்டுரைகள் இப்போது சிறப்பாக எடிட் செய்யப்பட்டு ஓவியங்கள் இணைத்து புத்தகமாகக் கையில் ஏந்தும்படி வெளியாவது கணினி உலகுக்கு அப்பாற்பட்ட சராசரி வாசகர்கள் உலகத்துக்கு சிறந்த வழிகாட்டியாக அமைந்திடும் என்பதில் ஐயமில்லை.. ஆரவாரமான சென்னை புத்தக திருவிழாவில் இந்த நூல்களை வாங்கி மகிழலாம்.. கிடைக்கும் ஸ்டால்கள் குறித்த விவரங்களுக்கு ஸ்டே ட்யூன்ட்..
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன்.
Excellent work sir.
பதிலளிநீக்குthanks for the comment sir
நீக்கு