செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

Feb 2025 issues_பிப்ரவரி மாத காமிக்ஸ் இதழ்கள் விவரம்

 வணக்கங்கள் அன்பு வாசகர்களே.. 

இந்த பிப்ரவரி மாத வெளியீடுகள் 

ரங் லீ காமிக்ஸ் 

ஆந்தை இளவரசி 

_சித்திரக்கதை மற்றும் வாசிப்புகேற்ப வரிகள் என்று வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த நூலமைப்பு எல்லா வாசகர்களையும் சென்றடையும் வாய்ப்பிருக்கிறது.. 

ஆபத்தே, போ! போ!

_பேமஸ் பைவ் துப்பறியும் இந்த கதை வண்ணத்தில் நன்றாக இருக்கிறது. 

லயன் காமிக்ஸ்

_வழக்கமாக குறைந்தது மூன்று இதழ்களை வைத்து நம்மைக் கட்டிப் போட்டுவிடும் லயன் இம்முறையும் குறை வைக்கவில்லை. 

குத்துங்க எசமான் குத்துங்க_ ஸ்பூன் அண்ட் வொயிட் சாகசம் 



           சைனா டவுனில் நிழல் உலக தாதாவின் மைந்தன் ச்சீ தூ போ..ஹி ஹி  நமது நாயகர்களின் கனவுக்கன்னி நிருபர் பால்கனியை கைவசப்படுத்திக் கொள்வதை கொலைவெறியோடு தடுத்து நிறுத்தும் முயற்சியில் இறங்குகிறார்கள் நம்மவர்கள் ஸ்பூன் அண்ட் ஒயிட்.. என்னப்பா நடக்குது இங்கே என்று கேட்கும் முன்னரே அடுத்தடுத்த சம்பவங்கள் திணறத் திணற வாசகர்களை மொய்த்துக் கொண்டுவிடும் இது நகைச்சுவை மாத்திரமே என்றில்லாத பெரியவர்களுக்கான கதையும் கூட.. இதில் விக்ரம், கைதி நரேன் கதையின் ரெபரன்ஸ் உண்டு.. 

தலைநகரின் தலைமகன் _டெக்ஸ் வில்லர். 



டெக்ஸ் கார்சன் ஜோடி இரயிலில் ஏறி விட்டாலே எப்போதும் அதகளம்தான்.. இதோ இன்னொரு அதிரடிக் களம்.. 

சிரிக்கும் விசித்திரம்_ஸாகோர் 



ஸாகோர் தன் மிரட்டல் சாகசத்தில் இம்முறை மோதுவது சிரிக்கும் வில்லன்களுடன்.. சிறப்பான வடிவமைப்பும் கௌபாய் பின்னணியும் முகமூடிக் கும்பலும் என்று அமர்க்களப்படுத்தக் காத்திருக்கிறது.. 



லயன் எலக்ட்ரிக் ௮௦ என்னும் தனித்தடத்தில் கொண்டு வந்துள்ள புத்தகங்கள் குறித்து விளம்பரம்.. 


இந்த மாதத்தில் வகம் காமிக்ஸ் எந்த வெளியீடுகளும் இல்லை என்பது சற்றே வருத்தம்தான்.. ஆனால் சரித்திர நாவல் ஒன்றைக் கொண்டு வந்து ஜனவரியிலேயே நாங்கள் சித்திரக்கதைகள் மாத்திரமல்ல சரித்திரக்கதைகளையும் வெளியிடுவோம் என்று கூடுதல் நாவல் வாசகர்களுக்கும்  இன்னும் நெருக்கம் காண்பித்து வருகிறது. ஆகவே அடுத்தடுத்து வகம் இன்னும் பல சாதனைகளை படைக்கும் என்று வரும்போது இந்த பிப்ரவரியின் சிறியதொரு இடைவெளியை நாம் ஸ்கிப் செய்து விடலாம். 

அடிக்கடி வலைப்பூவில் சந்திக்க இயலாவிட்டாலும் கிடைத்த நேரத்தில் பதிகிறேன். நன்றி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Feb 2025 issues_பிப்ரவரி மாத காமிக்ஸ் இதழ்கள் விவரம்

 வணக்கங்கள் அன்பு வாசகர்களே..  இந்த பிப்ரவரி மாத வெளியீடுகள்  ரங் லீ காமிக்ஸ்  ஆந்தை இளவரசி  _சித்திரக்கதை மற்றும் வாசிப்புகேற்ப வரிகள் என்ற...