வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

No.1048_The Ghost on flight 302 _ The Phantom_கதை சுருக்கம்

 

நாம் இந்தப் பதிவில் பார்க்கப் போவது வேதாளரின் கதையான விமானத்தில் ஒரு பேய் என்கிற சித்திரக்கதை.. அதன் வெளியீட்டு விவரங்கள் கீழே.. 

கதை_நார்மன் வொர்க்கர்
 யார்இந்த நார்மன் வொர்க்கர்? இதோ அவரது புகைப்படம்.. 

இந்த வேதாளர் கதையை எழுதிய நார்மன் வொர்க்கர் யாரென தெரியுமா? இவர் இந்தியாவில் இராணுவ வீரராக திகழ்ந்தவர்.. இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த சமயம் இந்தியாவில் போராடிய வீரர் இவர். 
இதோ அவரைப்பற்றிய குறிப்புகள்.. 

நார்மன் வொர்க்கர் (1927 - 5 பிப்ரவரி 2005) ஒரு பிரிட்டிஷ் காமிக் புத்தக எழுத்தாளர் ஆவார், லீ பால்க்கின் தி பாண்டம் இடம்பெறும் காமிக் புத்தகங்களில் அவர் செய்த பணிக்காக மிகவும் பிரபலமானவர் .

நார்மன் 1927 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் கென்ட்டில் பிறந்தார். அவருக்கு 17 வயதாக இருந்தபோது, ​​அவர் இரண்டாம் உலகப் போரில் இந்தியாவில் போராடினார். அதன் பிறகு, 1950 களில் அது திவாலாகும் வரை தனது தந்தையின் தளபாடங்கள் தொழிற்சாலையில் பணியாற்றினார்.

நார்மன் ஒரு காமிக் புத்தக எழுத்தாளராக முடியும் என்று பரிந்துரைத்தவர் அவரது உறவினர், மாடஸ்டி பிளேஸ் - படைப்பாளர் பீட்டர் ஓ'டோனல் ஆவார். இது ஸ்வீடிஷ் காமிக் புத்தக நிறுவனமான செமிக்கிற்காக தி செயிண்ட் மற்றும் பஃபலோ பில் இடம்பெறும் கதைகளை நார்மன் எழுத வழிவகுத்தது .

செமிக் பத்திரிகையில் தான் நார்மன் தி பாண்டம் என்ற புனைப்பெயருடன் கதைகள் எழுதத் தொடங்கினார் . முதலில், அவர் "ஜே. புல்" என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தினார், ஆனால் அவர் விரைவாக தனது உண்மையான பெயருடன் கதைகளில் கையெழுத்திடத் தொடங்கினார்.

ஸ்காண்டிநேவிய பாண்டம் தயாரிப்பின் மிகவும் பிரபலமான எழுத்தாளர் நார்மன் என்று வாதிடலாம்; அவர் 2004 இல் ஓய்வு பெறுவதற்கு முன்பு 127 கதைகளை எழுதி முடித்தார். வரலாற்று மீதான அவரது அன்பின் விளைவாக, பிற நூற்றாண்டுகளின் முந்தைய பாண்டம்கள் பலவற்றிற்கு பின்னணிக் கதைகளை வழங்குவதற்கு நார்மன் பொறுப்பேற்றுள்ளார்.

இவர் வேதாளர் கதை மாத்திரமல்லாது வார் பிக்சர் லைப்ரரி போன்ற அதிரடிக்கதைகளையும் இறங்கி அடித்திருக்கிறார். மிகவும் சிறந்த கதைகளை வாசகர்களுக்கு கொடுத்து அசத்தியவர். 

இது தவிர fantomen, FREW பதிப்பகத்தின் பிற கதைகளிலும் தன் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தவர் இவராவார். 
சரி ஓவியங்களைத் தீட்டியவரைக் கவனிப்போமா? ஓவியங்கள் ஜோஸ் கேசனோவாஸ் சீனியரின் கைவண்ணம். இவரும் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற வீரரேயாவார்.  
அவரைப் பற்றிய குறிப்புகள் இதோ. 
1934 இல் பார்சிலோனாவில் பிறந்த ஜோஸ் மரியா காஸநோவாஸ் மாக்ரி, இராணுவத்தில் பணியாற்றிய பிறகு 1957 இல் ஸ்பானிஷ் காமிக்ஸிற்காக வரையத் தொடங்கினார். அவரது ஆரம்பகால படைப்புகளில் ஃபியூச்சுரோவிற்கான "எல் பெக்வெனோ முண்டோ" (1957) மற்றும் சூப்பர்-ஸ்ட்ராங்கிற்கான "சூப்பர்ஃபுர்டே" (1958) ஆகியவை அடங்கும், இவை இரண்டும் ஃபெர்மாவால் வெளியிடப்பட்டன. 1961 ஆம் ஆண்டு ஆர். மார்ட்டின் (விக்டர் மோரா) எழுதிய "எல் ஜபாடோ"வின் சாகசங்களை அவர் 1962 ஆம் ஆண்டு முழுமையாகப் பொறுப்பேற்கத் தொடங்கினார்.

அவரது தொழில் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் கூட அவரது மிகவும் விரிவான, சிக்கலான பாணி வெளிப்பட்டு வந்தது. மேலும் ஹிஸ்டோரியாஸ் செலேசியன் (ஜூல்ஸ் வெர்னின் "லாஸ் இந்தியாஸ் நெக்ராஸ்", 1966) மற்றும் ஜோயாஸ் லிட்டராரியாஸ் ஜூவனைல்ஸ் ("அன் டெஸ்குப்ரிமியென்டோ ப்ரோடிகியோசோ" (1978) மற்றும் "எல் பெரோ டி லாஸ் பாஸ்கர்வில்ஸ்" (1982) உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள்) பக்கங்களில் உள்ள கிளாசிக் கதைகளின் தழுவல்களில் இது சிறப்பாகக் காணப்பட்டது. இந்தப் படைப்புகளில் சில ஸ்பெயினுக்கு வெளியே உள்ள சந்தைகளுக்காக உருவாக்கப்பட்டன, மேலும் காஸநோவாஸ் ஸ்பெயினின் மிகவும் பிரபலமான கதாபாத்திரங்களில் ஒன்றான "எல் கேபிடன் ட்ரூனோ"வை ஜெர்மன் வெளியீட்டிற்காக வரைந்தார். இதனால், காஸநோவாஸ் உண்மையில் தனக்குக் கிடைக்கக்கூடிய நற்பெயரைப் பெறவில்லை, ஏனெனில் அவரது படைப்புகள் பல நாடுகளில் காணப்பட்டன, ஆனால் பெரும்பாலும் குறுகிய காலத்திற்கு மட்டுமே. அவரது துண்டுகளைத் தேடும் ரசிகர்கள் ஸ்பெயின், இங்கிலாந்து, இத்தாலி, பின்லாந்து, ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் ஹாலந்து ஆகிய நாடுகளில் தேட வேண்டும். டச்சு வார இதழான டினாவிற்காக அவர் 1960களின் பிற்பகுதியில் "பொலியானா"வின் சாகசங்களை வரைந்தார்.

 இங்கிலாந்தில், 1970களின் பிற்பகுதியில் கிரெடிட்கள் வெளிவரத் தொடங்கியபோது, ​​2000AD மற்றும் ஸ்டார்லார்டின் பக்கங்கள் மூலம் அவரது பெயர் அறியப்பட்டது. அவர் உண்மையில் 1962 ஆம் ஆண்டிலேயே அநாமதேயமாக பங்களிக்கத் தொடங்கினார், ட்ரூ லைஃப் , லவ் ஸ்டோரி மற்றும் பல்வேறு காதல் நூலகங்களுக்கான கலைப்படைப்புகளை உருவாக்கினார்.தசாப்தத்தின் இறுதி வரை ஸ்டார் லவ் . 1970கள் மற்றும் 1980களின் முற்பகுதி முழுவதும் அவரது படைப்புகள் ஜூன் & ஸ்கூல்ஃப்ரெண்ட் , டாமி , சாண்டி , ஜின்டி , லிண்டி , பென்னி , எம்மா மற்றும் மாண்டி ஆகியவற்றில் வெளிவந்தன . அவர் எப்போதாவது மட்டுமே ஜட்ஜ் ட்ரெட்டை வரைந்தாலும், 1980களின் முற்பகுதியில் ஜட்ஜ் ட்ரெட் வருடாந்திரத்தின் பல்வேறு பதிப்புகளுக்காக அவர் வரைந்த மெகா-சிட்டி ஒன்னின் மற்றொரு குடிமகனான மேக்ஸ் நார்மலுடன் அவர் தொடர்புடையார் . ஐரோப்பாவின் பிற இடங்களில் பரபரப்பாக இருந்ததால், இங்கு அவரது பெரும்பாலான படைப்புகள் ஒற்றை துண்டுகளாக இருந்தன, பெரும்பாலும் 2000AD ("தார்க்ஸ் ஃபியூச்சர் ஷாக்ஸ்" மற்றும் "டைம் ட்விஸ்டர்ஸ்", சிலவற்றை ஆலன் மூர் மற்றும் பீட் மில்லிகன் எழுதியது), ஸ்க்ரீம்!! மற்றும் ஈகிள் . அவர் ஸ்டார்ப்ளேசருக்காக அரை டஜன் நீண்ட கதைகளை வரைந்தார் , அவற்றில் மிகல் கெய்ன் சாகசமான "சூப்பர்காப்" (1988). தனது மகனுடன் (ஜோஸ் காஸநோவாஸ் என்றும் அழைக்கப்படுகிறார்), அவர் 1991 இல் "சாம் ஸ்லேட் ரிட்டர்ன்ஸ்" வரைந்தார், மேலும் 1993 வரை வழக்கமான ரோபோ-ஹண்டர் கலைஞர்களில் ஒருவராக இருந்தார். 2004-05 ஆம் ஆண்டில் அவரது படைப்புகள் ஒரு பேய் வேட்டைக்காரனைப் பற்றிய ஜெர்மன் தொடரான ​​கீஸ்டர்ஜாகர் ஜான் சின்க்ளேரில் காணப்படுகின்றன மேலே கண்ட எழுத்தாளர் வொர்க்கருடன் இணைந்து இந்த ஒரு கதையில்தான் இயங்கி உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.. 
ஒகே கதைக்கு வருவோமா? 


தி கோஸ்ட் ஆன் ப்ளைட் ௩௦௨(302) 
வேதாளர் பற்றிய குறிப்புகளுடன் கதை துவக்கம் பெறுகிறது.. வேதாளர் முதியவர் மோஸ் சந்திப்பு நிகழ்கிறது.   
 நாம் நடக்கும் சிலை மர்மம் வாசித்திருக்கிறோம் இல்லையா? ஆளரவமற்ற தீவில் எங்கோ பார்த்துக் கொண்டு நிற்கும் சில சிலைகள்.. கற்பனை சிறகுகளில் ஏறி இந்த கதைக்குள் பறந்து வந்து அவை அமைதியாக அமர்ந்திருப்பது பெங்கல்லா வனப்பகுதி மலையில்.. பார்வையாளர்கள், கவனிப்பவர்கள்  என்று மோஸ் அழைக்கிறார் அவர்களை.  வேதாளர் அவர்களை வெறும் கற்சிலைகளாக இருக்கலாம் என்று எண்ணுகிறார். ஒரு எரிமலை தன் சாம்பலை அந்த பகுதி எங்கிலும் வீசி வானைக் கருமையாக மாற்றிக் கொண்டிருக்கிறது. அது எந்நேரமும் வெடித்து விடும் என்று ஒரு சந்தேகம். அந்த மலையை ஆராய ஏறிப் போகிறார் வேதாளர். உடன் ஹீரோ, டெவில் வர டெவிலை மட்டும் மலையில் அழைத்துக் கொண்டு ஏறி சிலைகள் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்கிறார் வேதாளர். 
வானில் பறந்து கொண்டிருக்கும் ஒரு விமானம் அதே நேரத்தில் செயலிழந்து கீழே விழுவது போன்று வந்து கடைசி வினாடியில் மேலே ஏறிப் பறக்க அந்த அதிர்வில் தரையில் உருள்கிறார் வேதாளர். அப்போது அவருக்கு கனவா நிஜமா என்கிற நிலையில் ஒரு உருவம் ஐன்ஸ்டீன் போன்ற தோற்றத்தில் வந்து பெங்காலி முழுவதுமே அழிந்து போய்விட்டது அதற்கு தான் கொண்டு வந்த ஒரு கிருமிதான் காரணம் என்று கூறுகிறது. வேதாளர் மயக்கத்தில் இருக்கும்போதே ஆட்கள், செடி கொடிகள், பல்லுயிர்கள் அனைத்துக்கும் பேராபத்து நேர்ந்து விட்டிருக்கிறது.. 
அதற்குக் காரணமான நச்சு தான் சுமந்து வந்த விமானத்தில் ஒரு கைப்பெட்டியில் வைத்திருந்ததாகவும், விமானக்கடத்தல் ஒன்று இரண்டு கன்னியாஸ்திரிகள் வேடத்தில் வந்த கயவர்களால் நிகழ்ந்ததாகவும் அவர் வேதாளரிடம் தெரிவித்து மறைகிறார். வேதாளர் மண்டை ஓட்டுக் குகைக்கு விரைகிறார். வழியெங்கிலும் மரணம் தன் முத்திரையைப் பதித்திருப்பதைக் காண்கிறார். அங்கே குரான் தான் இறக்கும் முன் ஆக்சல் நடத்தி வரும் மருத்துவமனைக்கு சென்று அவரது மனைவி டயானாவை சந்திக்கக் கூறுகிறார். பின்னர் டாக்டர் ஆக்சலின் மருத்துவமனையிலேயே மயங்கி விழுகிறார் வேதாளர். கண்விழித்தால் தான் காண்பது அனைத்தும் பொய் என்பதும் விமானம் புறப்படும் தினத்துக்கு இரு தினங்கள் முன்னால் தான் இருப்பதையும் காண்கிறார். அவரை நம்ப மறுக்கும் டயானா, டாக்டர் ஆக்சல் வேதாளருக்கு மயக்கஊசி போட்டு படுக்க வைத்து விடுகிறார்கள்.. சும்மா விடுவாரா வேதாளர்..? 


தன் வனக்காவல் படை தலைமையை உஷாராக்குகிறார். ஆனாலும் சம்பவங்கள் தொடர்கின்றன... தானே முன் நின்று இதனை முடிக்க வேண்டிய நிலைமை என்பதைத் தெளிவாக உணரும் வேதாளர் டெவில் துணையுடன் மருத்துவமனையில் இருந்து தப்பி விட அவரை முடக்கிப் போட அவரது மனைவி டயானாவும், டாக்டர் ஆக்சலும் முயற்சிப்பதுதான் விதி.. ஆனால் நம்மவர் காட்டாறாயிற்றே.. எத்தனை தடைகள் எதிரே நின்றாலும் மோதித் தள்ளிக் கொண்டு சமுத்திரத்தை நோக்கிப் பாயும் நதி போன்று தன் பயணத்தை அதிரடியாகக் கொண்டு போகிறார் வேதாளர்.. விமானம் புறப்படுவதையும் அதில் விஞ்ஞானி ஏறுவதையும் அவரால் தடுத்து நிறுத்த முடியாமல் போனாலும் இராணுவ ஜெட் எடுத்துக் கொண்டு தானே பறந்து சென்று மிரட்டி கீழே எப்படியோ இறக்கி விடுகிறார் மாயாவி (எ) வேதாள மாயாத்மா... 




மாரடைப்பில் விஞ்ஞானி இறந்து விட, கடத்தல்காரர்கள் மடக்கப்பட, பேராபத்து ஏற்படுத்தும் பெட்டியுடன் ஜெட்டில் சென்று எரிமலைக்குள் கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பில் வீசி பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கிறார் மாயாத்மா.. ஆம் இதுவும் அவருக்கான சிறப்புப் பெயர்தான்.. ஜனாதிபதி லுவாகா எல்லாவற்றையும் மூடி மறைத்து விடுகிறார். ஜெட் மட்டுமே அவருக்கு நட்டம்.. எரிபொருள் இல்லாததால் கடலுக்குள் இறக்கி விடுகிறார் வேதாளர்.. 
                        முதியவர் மோஸ் கூறியவாறே நமக்கும் மேலே நம்மை அக்கறையாகக் காப்பாற்றுவதற்காக கவனித்துக் கொண்டே இருக்கிறவர்களும் உண்டு என்பது இந்த கதையின் மூலமாக மாயாவிக்கு தெரியவருகிறது.. 
                 இதுவும் கிங் பியூச்சர் சிண்டிகேட்டின் காப்பிரைட் பெற்று வெளியிடப்பட்ட கதைதான். ஆஸ்திரேலிய FREW வெளியீடு.. 30+ பக்கங்களில் அதிரடியும், பேன்டசியும்  கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள்.. வேதாளர் வாழ்க.. நிறைவு.. 
என்றும் அதே அன்புடன்.. உங்கள் நண்பன் ஜானி.. 

4 கருத்துகள்:

பான்சி பாட்டர்.. அறிமுகம்.

 தமிழ் வாழ்க.. தமிழ்ப் புத்தாண்டு மலர்க.. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..  மகா கவி பாரதியார்   " யாமறிந்த   மொழிக...