ஞாயிறு, 21 செப்டம்பர், 2025

RC 001 அழகியை தேடி... 007 சாகசம் -சிறு விமர்சனம்

 அழகியை தேடி.. 007 ராணி காமிக்ஸ்சில்  வந்த முதல் ஜேம்ஸ்பாண்ட் கதை.

 கதையின் பெரும் பகுதி  ஐவரி கோஸ்ட் எனப்படும் கானா நாட்டில்தான் நடைபெறுகிறது. ஆப்பிரிக்க கண்டத்தின் ஜனாதிபதிகள் ஒருவரை கொலை செய்ய முயற்சிக்கும் ஒரு கும்பல் ஸ்மெரிஷ் அமைப்புடன் இணைந்து சிற்பி ஒருவர் வடிவமைக்கும் சிலையின் அடியில் வெடிகுண்டு ஒன்றை பொருத்துகின்றனர். அதனை விழா நடக்கும்போது அதிபரிடம் தருவதுதான் இலக்கு. வெடிகுண்டு வெடித்தால் அதிபர் சாவார் நாட்டை புரட்சியாளர்கள் மூலம் பிடித்து விடலாம் என்பது அவர்களுடைய எண்ணம் அதனை முறியடிக்க முதலில் ஒரு அழகியை தேடிப் போகிறார் ஜேம்ஸ் பாண்ட். அந்த அழகியை மடக்கி   தங்கள் கட்டுக்குப்பாட்டுக்குள் கொண்டுவர ஜேம்ஸ் பாண்ட் உடன் இணைத்து சில புகைப்படங்களை எடுத்து விடுகிறார்கள் அந்த புகைப்படங்களை வைத்து அவளை மிரட்டி அவளுடைய காதலன் ரூபி என்பவரை மடக்கிறார்கள் அவர்தான் நீக்ரோ புரட்சிக்காரர்களின் மூளை. இந்த அழகை வைத்து ரூபின் மூவ்களை அறிந்து கொள்ளும் ஜேம்ஸ் பாண்ட். சம்பவத்தின்  நூல் பிடித்து சென்று சேரும் இடம் தான் கானா நாட்டின் தலைநகரான அக்கரா. (தற்போது என் மைத்துனர் அங்கே பணி புரிந்து வருவதால் எனக்கு இந்த கதை ரொம்பவே ஸ்பெஷல் ) அக்ராவில் உள்ள சிற்பியின் மகளான நீக்ரோ மாடலிங் அழகி ஒருத்தியை தன்னுடன்  அழைத்துக்கொண்டு அக்கரா சென்றடைகிறார். சிலை மர்மம் அறிந்து வெடி குண்டினை செயலிழக்க வைக்கிறார். மிஸ்டர்.ரூபியை இரும்புக் குழம்பை மேலே ஊற்றி அழிக்கிறார்.  குர்த் உட்பட சில பாத்திரங்கள் ஜேம்ஸ்சுடன் மோதி மண்ணைக் கவ்வுகிறார்கள்

சுட்டு வீழ்த்தப்படுகிறார்கள். வாயில் பாட்டிலை ஊற்றி குடித்து விட்டுத் தூங்குவது போல ஒருவனை செட் அப் செய்து விட்டுப் போகிறார் ஜேம்ஸ். 🤣. அவருடன் மோதும் குண்டு மங்கை ஒரு அதிரடிப் பெண் என்றாலும் தப்பானவர்கள் பக்கம் இருந்து தோற்றுப் போகிறார்.. இந்த கதையில் மதிலைத் தாண்டும் வாக்கிங் ஸ்டிக் கருவி ஒரு ஸ்பெஷல் கேட்ஜெட். பிஸ்டல்கள் அதிகம் உபயோகிக்கப்பட்டிருக்கின்றன.. இந்த புத்தகம் குறித்த கூடுதல் தகவல்கள் அல்லது தங்கள் அனுபவங்களை அல்லது வேறு தளத்தில் இந்த கதை குறித்து இதுவரை வெளியாகியுள்ள செய்திகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால் தாராளமாக பகிரலாம். நன்றி.

தொடர்புடைய இடுகை 

1. https://johny-johnsimon.blogspot.com/2019/11/rc-001-007.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

RC 001 அழகியை தேடி... 007 சாகசம் -சிறு விமர்சனம்

 அழகியை தேடி.. 007 ராணி காமிக்ஸ்சில்  வந்த முதல் ஜேம்ஸ்பாண்ட் கதை.  கதையின் பெரும் பகுதி  ஐவரி கோஸ்ட் எனப்படும் கானா நாட்டில்தான் நடைபெறுகிற...