ஞாயிறு, 11 அக்டோபர், 2026

தி கிங் ஸ்பெஷல் -4 அறிவிப்பு

 வணக்கங்கள் வாசக, வாசகியரே.. 

*துவக்க நாட்களின் Smashing 70s பாணியில் Maxi size-ல் hard cover-ல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இந்த இதழ் மேக்சி சைஸ் என்பதாலும், தீபாவளி மலர்கள் சகலமும் ஏகமாய் டெக்ஸ் சைஸில் இருப்பதாலும் கொரியரில் அனுப்புவது சார்ந்த சிக்கல் மட்டும் தலைதூக்குகின்றது. ஏற்கனவே டெக்ஸ் தீபாவளி மலர், ZAGOR, மார்ட்டின் என்ற கூட்டணி ஒரு கிலோவிற்கு மேற்பட்ட எடையில்  உள்ளது. அந்த பார்சலில் கிங் ஸ்பெஷலையும் நுழைக்கும் பட்சத்தில், சர்வநிச்சயமாய்  2 கிலோவிற்கான கொரியர் ரேட்டே போட்டுச்  சாத்துவார்கள். தவிர, கொரியர் டப்பிக்குள்ளும் ஒரு மேக்சி சைஸ் புக் + மூன்று சின்ன சைஸ் புக்ஸ் எனும்போது பெட்டிகளை ரொம்ப ரொம்ப திக்காக செய்து வாங்குவது அவசியமாகிவிடும். எத்தனை பேருக்கு இது தெரியுமோ - தெரியாது, but சமீப மாதங்களில் பேக்கிங் மெட்டீரியலின் விலைகள் எக்குத்தப்பாய் ஏறியுள்ளன. மாதம்தோறும் அட்டைகள் உற்பத்தி செய்யும் மில்கள் விலைகளை மானாவாரியாய் ஏற்றிச் செல்வதால், இப்போதெல்லாம் அந்த பிரவுன் பெட்டிகள் கொள்முதல் செய்வது என்பது எங்காச்சும் கொள்ளை அடிக்கலாமா ? என்ற கேள்வியை முன்னிறுத்தும் வகையிலேயே இருந்துவருகின்றன. So, எக்ஸ்ட்ரா திக் பெட்டியை செய்து வாங்கி 2 கிலோவிற்கான கொரியர் கட்டணங்களை செலுத்துவதற்குப்  பதிலாக ரெகுலர் தளத்து தீபாவளி புக்ஸை வழக்கம் போல கொரியரில் அனுப்பிவிட்டு, இந்த கிங் ஸ்பெஷல்-4 வாங்கிட எண்ணும்  நண்பர்களிடம் மட்டும் தனியாக கொரியர் சார்ஜஸ் வசூலிக்க வேண்டிவரும். So, எப்போதும் போலவே புக்கின் விலை ரூபாய் 450 + கொரியர் கட்டணமாய் ரூபாய் 50 ஆக ரூபாய் 500 அனுப்பினால்  இம்மாத இறுதியில் வேதாளரும் வீடு தேடி வருவார் - அதிரசங்களை ருசிக்க. And முன்போல எக்கச்சக்கமாய் புத்தக விழாக்கள் இனி இருக்கப்போவதில்லை என்றானதொரு சூழலில் பிரிண்ட் ரன்னை முன்போலவே அமைக்கும் சாத்தியங்கள் 'பச்சக்'கென குறைந்துவிட்டன. So, கிங் ஸ்பெஷல் 4 குறைவான பிரிண்ட் ரன் சகிதமே களம் காண உள்ளது. ஆகையால், கிளாசிக் நாயகர்களை ரசிக்க விரும்பும் நண்பர்கள் ப்ளீஸ் do rush !!

ஆர்டர் போடுறவங்க கொஞ்சம் சீக்கிரமா ஆர்டர் போடுங்க. இந்த புத்தகம் தனியாத்தான் வருது.. சந்தாக்களில் ஸ்பெஷல் FAB களில் இல்லை. தனித்தது.. கவனம் வாசகர்களே.. என்றும் அதே அன்புடன் உங்கள் நண்பன் ஜானி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தி கிங் ஸ்பெஷல் -4 அறிவிப்பு

 வணக்கங்கள் வாசக, வாசகியரே..  * துவக்க நாட்களின் Smashing 70s பாணியில் Maxi size-ல் hard cover-ல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த இதழ் மேக்சி...