சனி, 10 அக்டோபர், 2026

தமிழில் டெக்ஸ் வில்லர்-குறிப்பு-STV

ஹாய் ஆல்..

சேலம் புகழ் தோழர் விஜயராகவன் தொகுப்பிது. 

மொத்த கிரெடிட்டும் அவருக்கே..

 *டெக்ஸ்  41° ஆண்டுகள்---"""200"""- இதழ்கள்......*


சரியாக 41ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் காமிக்ஸ் வானில் ஒரு புதிய நட்சத்திரம் உதயம் ஆனது...


இன்றைய தமிழ் காமிக்ஸ் உலகில் அந்த நட்சத்திரம் தான் மெகா ஸ்டார் அந்தஸ்தில் ஜொலித்து கொண்டுள்ளது...


இன்று மாதா மாதம் அந்த நட்சத்திரம் இல்லைனா தமிழ் காமிக்ஸ் உலகம் இயங்காது.

அது சாட்சாத் நம்ம *டெக்ஸ் வில்லரே*


*டெக்ஸ் 200 Facts 1...*


முதல் இதழாக அக்டோபர் 1985ல தீபாவளிமலராக வெளியானது *தலை வாங்கி குரங்கு*,  41வது ஆண்டில் 200வது தமிழ் டெக்ஸ் இதழாகவும் வெளியாகியுள்ளதும் தீபாவளி மலரே.  *"அசுரர்கள் அடங்குவதில்லை"---டெக்ஸ் தீபாவளி மலர்2026.*


ஆண்டு.....இதழ்கள்


1985-----1

1986-----1

1987-----2

1988-----2

1989-----3

1990-----1

1991------2

1992-----2

1993-----1

1994-----1

1995------1

1996-----2

1997-----4

1998-----1

1999-----2

2000----3

2001-----1

2002-----5

2003-----5

2004-----3

2005-----3

2006-----1

2007-----1

2008-----3

2012-----1

2013-----4

2014-----5

2015-----2

2016----12

2017----10

2018----17

2019----15

2020----11

2021----10

2022----12

2023----14

2024----13

2025----10

2026----13


ஆக மொத்தம் """" 200'""" நாட் அவுட்.


ஒரு ஆண்டில் அதிகப்படியான இதழ்கள் வெளியானது 2018ல்---17இதழ்கள்.

டெக்ஸ் இதழ்களின் பெஸ்ட் ஆண்டுகள் என 2016முதல் 2026யிலான 11ஆண்டுகளை குறிப்பிடலாம், ஆண்டுக்கு  10இதழ்களுக்கு மேலாக தொடர்ந்து வெளியாகி அசத்தி வரும் கோல்டன் பீரியட் இது....

1980களை ஸ்பைடர் எரா, 1990களை டைகர் எரா என குறிப்பிட்டால், தற்போதைய காலத்தை

*டெக்ஸ் ஏரோ* என சொல்லலாம்.




*டெக்ஸ் 200 Facts 2...*


*41ஆண்டுகளில் வெளியான டெக்ஸ் இதழ்கள்=200*


கறுப்பு வெள்ளை இதழ்கள் 137


வண்ண இதழ்கள் 58


கறுப்பு வெள்ளை & வண்ணம் இணைந்த ஹைபிரீட் இதழ்கள் 5



*டெக்ஸ் 200 Facts 3...*


டெக்ஸின் தனி இதழ்கள் 180


மற்ற நாயகர்களுடன் கூட்டணியில் 20 இதழ்கள்



*டெக்ஸ் 200 Facts 4...*


ரெகுலர் புதிய இதழ்கள் 172


மறுபதிப்புகள் 28



*டெக்ஸ் 200 Facts 5...*



மிக நீளமான கதை: புயலுக்கொரு பிரளயம்-507பக்கங்கள்---டைனமைட் ஸ்பெசல்-2018,


மிகச்சிறிய கதை: தகிக்கும் நியூ மெக்ஸிகோ-16பக்கங்கள்



பாக்கெட் சைசில் நீளமான கதை: மரண தூதர்கள்-296 பக்கங்கள்.

மிகச்சிறிய கதை-மாய எதிரி-25பக்கங்கள்


*டெக்ஸ் 200 Facts 6...*



மிக நீளமான டெக்ஸ் பிரத்யேக இதழ்கள்,.....


1.டைனமைட் ஸ்பெசல்- 792பக்கங்கள்-2018---2கதைகள்


2.சுப்ரீமோ ஸ்பெசல் -728பக்கங்கள்-2023---4கதைகள்


3.தி லயன் 250- 680பக்கங்கள்-2015---3கதைகள்


4.தீபாவளிமலர்2020-648பக்கங்கள்-3கதைகள்



*டெக்ஸ் 200 Facts 7...*


நீண்டகால இடைவெளியில்  வண்ண மறுபதிப்பு...


தலை வாங்கிக் குரங்கு-35ஆண்டுகள்

முதல் பதிப்பு 1985; வண்ண மறுபதிப்பு 2020


குறுகிய கால மறுபதிப்பு....


ரெளத்திரம் மற- 1 மாதம்


முதல் பதிப்பு டிசம்பர்2019; மறுபதிப்பு ஜனவரி 2020



*டெக்ஸ் 200 Facts 8...*


அதிகமுறை வெளியிடப்பட்ட இதழ்... 3- தலா 3முறைகள்


1.தலைவாங்கி குரங்கு


முதல்பதிப்பு:1985

2ம் பதிப்பு: 2012

3ம் பதிப்பு: 2020


2.பழிவாங்கும் பாவை

 

முதல்பதிப்பு:1987

2ம் பதிப்பு: 2000

3ம் பதிப்பு: 2019


3.கார்சனின் கடந்த காலம்


முதல்பதிப்பு:1997

2ம் பதிப்பு: 2014

3ம் பதிப்பு: 2023



*டெக்ஸ் 200 Facts 9...*


தனி இதழ்கள்: 177


தொடராக வெளியான இதழ்கள்: 23


23தொடர் இதழ்களில்,


3இதழ்கள் கொண்ட தொடர்கள்=3 (3x3=9)


2இதழ்கள் கோண்ட தொடர்கள்=7 (7x2=14)


*லைப்ரரி-200 Facts 10...*



டெக்ஸ் இதழ்கள் வெளியான ப்ரகாஷ் பப்ளிஷர்ஸ் ப்ராண்ட்களில்.....


1.லயன் காமிக்ஸ்-173

2.திகில் காமிக்ஸ்-1

3.காமிக்ஸ் க்ளாசிக்ஸ்-2

4.சன்ஷைன் லைப்ரரி-5

5.மேக்ஸி டெக்ஸ்-4

6.தி லயன் லைப்ரரி-10

7.ஜம்போ-2

8.V for We Comics-3


மொத்தம்=200இதழ்கள்


*டெக்ஸ் 200 Facts 11...*



டெக்ஸ் இதழ்கள் வெளியான ஸ்பெசல் இதழ் வகைகள்.....


1.லயன் பொங்கல் மலர்

2.லயன் கோடைமலர்

3.லயன் ஆண்டுமலர்

4.லயன் தீபாவளி மலர்

5.லயன்50வது, 100, 150, 200, 250, 300, 400...மைல்கல் ஸபெசல்ஸ்

6.லயன் டாப் 10ஸ்பெசல்

7.லயன் மில்லேனியம் ஸ்பெசல்

8.லயன் சம்மர் ஸ்பெசல்1, 2

9.Tex Classics

10.லயன் மெகா ட்ரீம் ஸ்பெசல்

11.லயன் ஜாலி ஸ்பெசல்

12.லயன் கெளபாய் ஸ்பெசல

13.Book Fair Special

14.கிங் ஸ்பெசல்

15.டெக்ஸ் மினிகள்

16.டெக்ஸ் மினி கலக்சன்

17.ஜம்போ

18.டைனமைட் ஸ்பெசல்

19.சுப்ரிமோ ஸ்பெசல்

20.விஜயன் 1000 ஸ்பெசல்


தொகுப்பு- STV

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தி கிங் ஸ்பெஷல் -4 அறிவிப்பு

 வணக்கங்கள் வாசக, வாசகியரே..  * துவக்க நாட்களின் Smashing 70s பாணியில் Maxi size-ல் hard cover-ல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த இதழ் மேக்சி...