அன்பு வாசகர்களுக்கு வணக்கம்..
சேலம் டெக்ஸ் விஜயராகவன் அவர்களின் தொகுப்பினை இங்கே தருகிறேன். எல்லா புகழும் அவருக்கே..
டெக்ஸ் வில்லர் என்றாலே சும்மா அதிருமில்லை. ஏனெனில் இதுவரை தமிழில் வந்துள்ள சர்வதேச சித்திரக்கதைகளில் எப்போதுமே உச்சத்தில் இருப்பது டெக்ஸ் வில்லரே.. ஒரு டெக்சாஸ் ரேஞ்சராகவும் செவ்விந்திய தலைவர் இரவுக் கழுகாவாகவும் நம்மை அசத்தி வரும் எவர் கிரீன் நாயகர் டெக்ஸ் வில்லர். இதோ அந்த தொகுப்புகள்..
டெக்ஸ் 42° ஆண்டுகள்---"""200"""- இதழ்கள்......*
டெக்ஸ் 200 உண்மைகள் 1...
முதல் இதழாக அக்டோபர் 1985ல தீபாவளிமலராக வெளியானது தலை வாங்கி குரங்கு, 41வது ஆண்டில் 200வது தமிழ் டெக்ஸ் இதழாகவும் வெளியாகியுள்ளது தீபாவளி மலரே. "அசுரர்கள் அடங்குவதில்லை"---டெக்ஸ் தீபாவளி மலர்2026.
ஆண்டு.....இதழ்கள்
1985-----1
1986-----1
1987-----2
1988-----2
1989-----3
1990-----1
1991------2
1992-----2
1993-----1
1994-----1
1995------1
1996-----2
1997-----4
1998-----1
1999-----2
2000----3
2001-----1
2002-----5
2003-----5
2004-----3
2005-----3
2006-----1
2007-----1
2008-----3
2012-----1
2013-----4
2014-----5
2015-----2
2016----12
2017----10
2018----17
2019----15
2020----11
2021----10
2022----12
2023----14
2024----13
2025----10
2026----13
ஆக மொத்தம் """" 200'""" நாட் அவுட்.
ஒரு ஆண்டில் கூடுதல் இதழ்கள் வெளியானது 2018ல்---17இதழ்கள்.
டெக்ஸ் இதழ்களின் பெஸ்ட் ஆண்டுகள் என 2016முதல் 2026 வரையிலான 11ஆண்டுகளை குறிப்பிடலாம், ஆண்டுக்கு 10இதழ்களுக்கு மேலாக தொடர்ந்து வெளியாகி அசத்தி வரும் கோல்டன் பீரியட் இது....
1980களை ஸ்பைடர் எரா, 1990களை டைகர் எரா என குறிப்பிட்டால், தற்போதைய காலத்தை
டெக்ஸ் ஏரா என சொல்லலாம்.
டெக்ஸ் 200 உண்மைகள் 2...
41ஆண்டுகளில் வெளியான டெக்ஸ் இதழ்கள்=200
கறுப்பு வெள்ளை இதழ்கள் 137
வண்ண இதழ்கள் 58
கறுப்பு வெள்ளை & வண்ணம் இணைந்த ஹைபிரீட் இதழ்கள் 5
டெக்ஸ் 200 உண்மைகள் 3...
டெக்ஸின் தனி இதழ்கள் 180
மற்ற நாயகர்களுடன் கூட்டணியில் 20 இதழ்கள்
டெக்ஸ் 200 உண்மைகள் 4...
ரெகுலர் புதிய இதழ்கள் 172
மறுபதிப்புகள் 28
டெக்ஸ் 200 உண்மைகள் 5...
மிக நீளமான கதை: புயலுக்கொரு பிரளயம்-507பக்கங்கள்---டைனமைட் ஸ்பெசல்-2018,
மிகச்சிறிய கதை: தகிக்கும் நியூ மெக்ஸிகோ-16பக்கங்கள்
பாக்கெட் சைசில் நீளமான கதை: மரண தூதர்கள்-296 பக்கங்கள்.
மிகச்சிறிய கதை-மாய எதிரி-25பக்கங்கள்
டெக்ஸ் 200 உண்மைகள் 6...
மிக நீளமான டெக்ஸ் பிரத்யேக இதழ்கள்,.....
1.டைனமைட் ஸ்பெசல்- 792பக்கங்கள்-2018---2கதைகள்
2.சுப்ரீமோ ஸ்பெசல் -728பக்கங்கள்-2023---4கதைகள்
3.தி லயன் 250- 680பக்கங்கள்-2015---3கதைகள்
4.தீபாவளிமலர்2020-648பக்கங்கள்-3கதைகள்
டெக்ஸ் 200 உண்மைகள் 7...
நீண்ட இடைவெளியில் வண்ண மறுபதிப்பு...
தலை வாங்கிக் குரங்கு-35ஆண்டுகள்
முதல் பதிப்பு 1985; வண்ண மறுபதிப்பு 2020
குறுகிய கால மறுபதிப்பு....
ரெளத்திரம் மற- 1 மாதம்
முதல் பதிப்பு டிசம்பர்2019; மறுபதிப்பு ஜனவரி 2020
டெக்ஸ் 200 உண்மைகள் 8...
அதிகமுறை வெளியிடப்பட்ட இதழ்... 3- தலா 3முறைகள்
1.தலைவாங்கி குரங்கு
முதல்பதிப்பு:1985
2ம் பதிப்பு: 2012
3ம் பதிப்பு: 2020
2.பழிவாங்கும் பாவை
முதல்பதிப்பு:1987
2ம் பதிப்பு: 2000
3ம் பதிப்பு: 2019
3.கார்சனின் கடந்த காலம்
முதல்பதிப்பு:1997
2ம் பதிப்பு: 2014
3ம் பதிப்பு: 2023
டெக்ஸ் 200 உண்மைகள் 9...*
தனி இதழ்கள்: 177
தொடராக வெளியான இதழ்கள்: 23
23தொடர் இதழ்களில்,
3இதழ்கள் கொண்ட தொடர்கள்=3 (3x3=9)
2இதழ்கள் கொண்ட தொடர்கள்=7 (7x2=14)
லைப்ரரி-200 உண்மைகள் 10...
டெக்ஸ் இதழ்கள் வெளியான பிரகாஷ் பப்ளிஷர்ஸ் பிராண்ட்களில்.....
1.லயன் காமிக்ஸ்-173
2.திகில் காமிக்ஸ்-1
3.காமிக்ஸ் கிளாசிக்ஸ்-2
4.சன்ஷைன் லைப்ரரி-5
5.மேக்ஸி டெக்ஸ்-4
6.தி லயன் லைப்ரரி-10
7.ஜ அளவுகோல்-2
8.வி ஃபார் வீ காமிக்ஸ்-3
மொத்தம்=200இதழ்கள்
டெக்ஸ் 200 உண்மைகள் 11...
டெக்ஸ் இதழ்கள் வெளியான ஸ்பெசல் இதழ் வகைகள்.....
1.லயன் பொங்கல் மலர்
2.லயன் கோடைமலர்
3.லயன் ஆண்டுமலர்
4.லயன் தீபாவளி மலர்
5.லயன்50வது, 100, 150, 200, 250, 300, 400...மயில்கல் சபெசல்ஸ்
6.லயன் டாப் 10ஸ்பெசல்
7.லயன் மில்லேனியம் ஸ்பெசல்
8.லயன் சம்மர் ஸ்பெசல்1, 2
9.டெக்ஸ் கிளாசிக்ஸ்
10.லயன் மெகா ட்ரீம் ஸ்பெசல்
11.லயன் ஜாலி ஸ்பெசல்
12.லயன் கெளபாய் ஸ்பெசல
13. புத்தகக் கண்காட்சி சிறப்பு
14.கிங் ஸ்பெசல்
15.டெக்ஸ் மினிகள்
16.டெக்ஸ் மினி கலக்சன்
17.ஜப்
18.டைனமைட் ஸ்பெசல்
19.சுப்ரிமோ ஸ்பெசல்
20.விஜயன் 1000 ஸ்பெசல்
டெக்ஸ் 200 உண்மைகள் 12....
வாமன டெக்ஸ்கள்.....
ரொம்ப நாட்களாக சந்தாவில் உள்ள வாசகர்களுக்கு ஏதாவது தம் அன்பு பரிசாக செய்யணும் என்ற எடிட்டர் சாரின் எண்ணத்தில் விளைந்தவை இவை....
அவ்வப்போது சின்ன சின்ன கிஃப்ட்ஸ் தந்திருந்தார் எடிட்டர் சார்... 2017ஜனவரியில் லயன் காலண்டர் , தொடர்ந்த மாதங்களில் ஸ்டிக்கர்ஸ், போஸ்டர்ஸ், கலரிங் பக்ஸ், டைம்டேபிள், மேக்னட் ஸ்டிக்கர்னு விலையில்லாமல் கிடைத்தது. உச்சமாக இந்த வாமன டெக்ஸ்கள். மினி டெக்ஸ் புக்ஸ்..அதாவது பக்க அளவில் மிகவும் குறைவானது, ஆனா கதை அளவில் எப்போதும் போல அதில் புதிரி....
""கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது"""- என்ற உவமையை மெய்ப்பிக்கும் வகையில் இவை சக்கை போடு போட்டன...இந்த மினி டெக்ஸ்களின் அளவை குறிப்பிட இந்த "வாமன" என்ற பதத்திற்கு பொருத்தமாக சூட்டிய மருத்துவர் செல்வம் அபிராமி எ செனா அனாவுக்கு நன்றிகள்.🙏
2017ன் இறுதியில் அறிவிக்கப்பட்ட சந்தா2018ல் இவை நிறைய விவாதங்களை கிளப்பின...ஆனால் அவைகள் 2018ல ரீலீஸ் ஆனபோது சக்கை போடு போட்டன.....😍😍😍😍
2018ல 6கதைகள் இப்படி ஆல்டர்நெட் மாதங்களில் சந்தாதாரர்களுக்கு தரப்பட்டன....
கடைகளில் & முகவர்களிடம் வாங்கும் ரசிகர்களுக்கு இந்த மினி டெக்ஸ் இல்லையா என்ற கடுமையான யதார்த்தமான கேள்வி எழ, 3 கதைகள் வந்தபின் ஒரு தொகுப்பாக வெளிவரும் ரூ90 விலையில் என அறிவித்தார் எடிட்டர்....
அதன்படி முதலில் வந்தது
விரட்டும் விதி
கடைசிப்பலி
இரவுக்கழுகின் நிழலில்
---3ம்இணைந்த தொகுப்பு ஆகஸ்ட் 2018ல வெளியானது, ஈரோடு விழாவில்... சரியான சேல்ஸ்... இதுவும்...😍😍😍
4.மண்ணில் துயிலும் நட்சத்திரம்
5.புனிதப் பள்ளத்தாக்கு
6.யார் அந்த மரண தூதன்?
என 2018ல 2வது பாதியில் இலவசமாக தரப்பட்டு,
டெக்ஸ் மினி3in1-புனிதப் பள்ளத்தாக்கு-ஏப்ரல்2019 ல தொகுப்பாக வெளியானது 🩷
2018ன் தடாலடி வரவேற்பை தொடர்ந்து 2019லும் இந்த வாமன டெக்ஸ் சந்தாதாரர்களுக்கு இலவசமாக தர பிளானிங் பண்ணப்பட்டது....
இம்முறை 3மாதங்களுக்கு 1மினி என 4 புத்தகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன...
பின்னர் ஒரே தொகுப்பாக வெளியிடலாம் என்ற எண்ணம் போல...
1.வெளிச்சத்துக்கு வந்த நிழல்
2.நட்புக்கு நாட்களேது
3.தகிக்கிம் நியூ மெக்சிகோ
4.ரெளத்திரம் மற
இம்முறையும் 2வது முறையாக இவைகள் பட்டையைக்கிளப்பின...😍😍😍
ஒரே தொகுப்பாக ஜனவரி2020ல இது வெளியானது... வழக்கம்போல சில நாட்களிலேயே ஸ்டாக்கும் அவுட்😉😉😉
நட்புக்கு நாட்களேது.. . மை டாப் கதை...
விளம்பரத்தில் அறிவிக்கப்பட்ட கைதியாய் கார்சன் தான் வெளிச்சத்துக்கு வந்த நிழலாகவும்,
ஆறாது சினம், ரெளத்திரம் மற-"-வாகவும் பெயர் மாறிற்று..
மினி டெக்ஸின் சரிவுப் போக்கு.....
இரு ஆண்டுகளின் அதிரடியான சக்சஸ் காரணமாக 3வது ஆண்டாக தொடர்ந்து 2020லயும் Mini TeX கள் பிளானிங் பண்ணப்பட்டன....
ஆனா முதல் கதையாக தேர்வான இருளோடு யுத்தம் அமானுஷ்ய பின்னணி கொண்டு மார்ச்2020ல் வெளியானது.... கடுமையான விமர்சனத்தை எதிர் கொண்டது...!!!
தொடர்ந்தது கொரானா பேரிடர் நாட்களின் முதல் அத்தியாயம்.... லாக்டவுன்1....
இந்த இடைவெளியை அடுத்து ரெகுலர் இதழ்களே வெளியாக நிறைய பிரயத்தன முயற்சியை செய்தார்.... இலவச டெக்ஸ்கள் ஒத்தி வைக்கப்பட்டது.
மினி டெக்ஸின் உச்சம்
லாக்டவுன்1க்குப் பிறகு 2020ன் மீதி சந்தா இதழ்களையே ,2021மார்ச் வரை எடிட்டர் நீட்டித்தார்...
இந்த மினி டெக்ஸின் உச்சம், பெரிய சைசில் 2020தீபாவளி மலருடன் இலவசமாக அளிக்கப்பட்ட விண்டர் ஸ்பெசல் என்ற 32 பக்க ஆயில் பெயிண்டிங் போன்ற வித்தியாசமான பாணி சித்திரக்கதையே....
இத்தாலியில் ப்ரைஸனர் ஆஃப் அப்பாச்சி என வந்தகதையே இது... கடந்த மினி டெக்கில் விழுந்த அடியை ஈடுகட்டியதோடல்லாமல் சும்மா டாப்புக்கு போனது....
பெரும்பாலான நண்பர்கள் பார்வையில் என் தீபாவளி மலர் புத்தகத்தை விட இதுவே டாப்...😍😍😍😍
மினி டெக்ஸின் ஒன்றிணைப்பு
துவக்கத்தில் இலவச இணைப்பாக தனித்தனியாக வெளியிடப்பட்டது Mini TeX கள்...சந்தா வாசகர்கள் மட்டுமே படிக்க முடிந்தது...
பின்னர் விற்பனைக்கு அந்த இலவச புத்தகங்கள் ஒரே தொகுப்பாகவும் வெளியாகி, அனைத்து வாசகர்களையும் அடைந்தது.
2020ல லாக்டவுன் காரணமாக ஒரு மினியோடு நிறுத்தப்பட்டு இருந்தது...
அறிவிக்கப்பட்ட பாக்கி இரு நிமிடங்களையும் ஒரே தொகுப்பாக நேரடியாக விற்பனைக்கு கொண்டு வந்தார்கள்... சந்தா வாசகர்களுக்கு அதே புக், விலையின்றி வழங்கப்பட்டது...
" தங்கத்தின் பாதையில் &
மின்னும் சொர்க்கம்* "- இரு நிமிட கதைகள் இடம் பெற்றிருந்தன....!!!
2ம் நல்ல வரவேற்பைப் பெற்றன.....🩷🩷🩷
சமீபத்திய காலங்களில் முக்கிய இதழ்களோடு இந்த மினி டெக்ஸ் வெளிவருகின்றன.
இதுவரை 18 மினி TeX கதைகள் வந்திருக்கு...
மினி டெக்ஸ் வரிசை
1.விரட்டும் விதி
2.கடைசிப்பலி
3.இரவுக்கழுகின் நிழலில்
4.மண்ணில் துயிலும் நட்சத்திரம்
5.புனிதப் பள்ளத்தாக்கு
6.யார் அந்த மரண தூதன்?
7.வெளிச்சத்துக்கு வந்த நிழல்
8.நட்புக்கு நாட்களேது
9.தகிக்கும் நியூ மெக்சிகோ
10.ரெளத்திரம் மற
11.இருளோடு யுத்தம்
12.விண்டர் ஸ்பெசல்-அப்பாச்சியின் கைதி
13.தங்கத்தின் பாதையில்
14.மின்னும் சொர்க்கம்
15.பனியில் ஒரு புது நேசம்.
16.குற்றத்தின் குரல்
17.பருந்துக்கொரு
18.சூறாவளியின் தடத்தில்
எக்ஸ் எஸ்.டி.வி.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக