திங்கள், 17 செப்டம்பர், 2012

கதைக்கோர் கிழவி!

அன்புள்ளம் கொண்ட நண்பர்களே!

இனிய வணக்கம்!
       நாம எல்லோருமே பாட்டி கதைகளை கேட்டுதான் வளர்ந்திருப்போம்! நம்ம பாட்டி சொல்லும் கதையில் பாட்டி வடை சுட, காக்கா கொத்தி கொண்டு போகும். அதை, நரி தந்திரமாக கவர்ந்து செல்லும்.
       ஏழு கடல்கள், ஏழு மலைகள், ஏழு ஆறுகள் கடந்து ஒரு ராஜ குமாரி நமக்காக காத்து கொண்டு இருப்பாள். பல தடைகளை உடைத்து கொண்டு போய் பேய்களுடனும், அரக்கர்களுடனும் மல்யுத்தம் புரிந்து மீட்டுக் கொண்டு வருவோம். குழந்தையாக மாறி அவற்றை தரிசித்தால், நாம அந்த கதா பாத்திரமாகவே மாறி விடுவோம். அந்த மன நிலைக்கு நம்மைக் கொண்டு போகும் கதைகள் என்றுமே தகுந்த வரவேற்பு பெறும். வரப் போகிற

                                                  "சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்"


விலை வெறும் நூறு ரூபாய் மட்டுமே மக்கா!

இந்த புத்தகத்தை அதை போன்ற லாஜிக் பார்க்காத மனத்துடன் படித்து, ரசித்து, ருசித்து, அனுபவித்து மகிழுங்கள் ! நண்பர்களே!!

       இது தவிர அறிவுரை சொல்லும் கதைகள் இங்கு நிறைய உண்டு! அவை நமது வாழ்வின் அடிப்படையாக அமைந்து நம்மை நல்வழியில் நடத்திச்  செல்லும்.முக்கியமாக "அவ்வை பாட்டி" (விக்கி பீடியா லிங்க் கொடுக்கணுமா என்ன?????) எனும் மாபெரும் பாட்டி நம்ம வரலாற்றில் பதிவாகி உள்ளார். அவர் எழுதிய ஆத்திசூடி, கொன்றை வேந்தன் போன்ற அதி அற்புதமான வழி காட்டி நூல்கள் நம்மிடையே இன்றுவரை உலவி வருகின்றன. நச்சினார்க்கினியர், ஆண்டாள், காரைக்காலம்மையார் (அவுங்க சாமிகிட்ட வேண்டி பேயா மாறி தவம் செய்தாங்க நண்பர்களே!!!) போன்ற நிறைய வரலாறாக மாறியவர்கள் உண்டு நண்பர்களே!
   
கண்ணகி மதுரையே பற்றி எரியும்படி செய்தாங்க. சீதையோ ஒரு ராமாயணமே உருவாக காரணமாக இருந்தாங்க. எமனின் பிடியில் இருந்து தன் கணவனையே சாவித்திரி. நான் எதுக்கு அவங்களோட வரலாறை துணைக்கு அழைக்கிறேன் என்று கருதும் மானிடர்களே! இப்போ பாக்கப் போறதும் ஒரு தாய்க் குலம்தான். அதுக்கு முன்னாடி என்னோட வரலாறை கொஞ்சம் கொடுத்து உங்களை மகிழ செய்யும் எண்ணம். நிறைய கதைகள் இருக்கு நண்பர்களே. என் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள் பலப்பல!!! நேரம் கிடைத்தால் கடலை போடும் உத்தேசம் இருக்கு நண்பர்களே! அவை நம்பும்படி இருக்குமா?? தெரியவில்லை? கீழே நான் வாழ்ந்த வாழ்வின் அடிப்படையை கட்டமைத்த எனது பிரியமான ஆயா மற்றும்  தாத்தாவின் புகைப் படங்கள் உங்கள் பார்வைக்கு,

என்னை உருவாக்கி உயர்த்திய தாயும் தகப்பனும் ஆனவர்கள்! 

      அற்புதமான தமிழ் வரலாற்றில் பதிவான பாட்டிமார்கள் குறித்து நான் இங்கே பெருமையோடு பதிவிடும் அதே சமயத்தில் எனக்கு வாய்த்த என் தாய் வழி பாட்டி (எங்க ஊர்ல ஆயா என்று அழைப்போம்) திருமதி.தாயார் அம்மாள் அவர்களும், எனது தாத்தா திரு.அமிர்தம் (காவல்துறை) அவர்களது  அரவணைப்பில் வளர வேண்டிய கட்டாயம்,  என் தந்தையார் மற்றும் குடும்பம் ராணுவ பணி காரணமாக ஈராக் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது வந்தது. எனக்கு மூன்றரை வயதில் எனது பாட்டியார் எனக்கு பாடம் எடுக்கும் சூழல். என்னை என் தாத்தா அப்போதெல்லாம் தன்னுடன் டீ கடைக்கு அழைத்து செல்வார். அங்கே இருக்கும் சிறுவர் மலரை படிக்க கொடுப்பார். அதில் வந்த உயிரை தேடி என்ற திகில் கதை தான் நான் படித்து பயந்த முதல் கதை. அதன் பின்னால் ராணி காமிக்ஸ் வெளியீடு வந்த பின்னர் தினத்தந்தி வாங்கும் முகவர் எங்கள் ஊரில் இருந்தததால் அவரே எங்கள் ஊருக்கு ராணி காமிக்ஸ் அறிமுகம் செய்த புண்ணியத்தை கட்டி கொண்டார். என் ஆரம்ப படிப்புத் திறமை (ஹி ஹி ) ஒரு மாதிரி இருப்பதை உணர்ந்து என் ஆயா முதலில் படம் பார்த்து கதை சொல் பாணியில் பாடம் எடுக்க ஆரம்பித்தார். அப்போ அறிமுகம் செய்து வைத்த, விதைத்த பழக்கம்தான் இன்றும் உயிரோடு இருக்கிறது. சும்மாவா பெரியவர்கள் சொன்னார்கள் "ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது என்று?" அழகியை தேடியில் இருந்தே வாங்கி படிக்க செய்து புண்ணியம் கட்டி கொண்டார். இன்று எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் ஒரு காமிக்ஸ் உடனிருந்தால் கவலைகளை மறந்து மனம் சாந்தமாகி விடுகிறது நண்பர்களே. 
          அப்போ வாரமலரில் ஒரு கிழவி பேய் கதை வரும். அந்த பேய் ஒரு மரத்தில் வசிக்கும் கொடூரமாக நடந்து கொள்ளும் --- கொல்லும்! அதை படித்து பல நாள் உறக்கம் இல்லாமல் இருந்தது உண்டு நண்பர்களே. அதற்கு படம் வரைந்தவர் மிக பயங்கரமாக வரைந்து இருப்பார். ( அந்த பேய் ஸ்கான் உள்ளவங்க எனக்கு அனுப்புங்க நண்பா இங்கே பதிவிட தகுதியான படங்கள் அவை )

இப்போ நம்ம கதைக்கு வரேன்!
இவுங்கதான் நம்ம மனதை கவர்ந்த கருப்பு கிழவி!!! அறிவுரை சொல்வாங்க. ஆனால் அதை கேட்டு நடக்க நாம முதல்ல உயிரோடுதான் இருக்கமா என்று நம்மை ஒரு முறை சுற்றி பார்த்து , கையை கிள்ளி சோதனை செய்து கொல்ல வேண்டியிருக்கும் நண்பர்களே. ஹீ! ஹீ! ஹீ !


பாட்டி சொல்லும் அறவுரை மற்றும் அறிவுரைகள் நமக்கு மட்டும் அல்ல மானிடர்களே! ஆவி உலகை சேர்ந்தவர்களுக்கும்தான்! நல்லதை நினைப்பவன் வாழ்வான்! மற்றவன் வீழ்வான்! அதான், நம்ம பாட்டி சொல்லும் கதைகளின் அடி நாதம்!!! எனினும் தவறிழைப்பவன் தண்டிக்கப்படும் விதம் படு பயங்கரமாக இருக்கும் நண்பர்களே!! உஷார்!

       "உப்பை தின்றவன் கண்டிப்பாக தண்ணீர் குடித்தே தீர வேண்டும்" என்ற கொள்கையை தன் கதைகளில் எப்போதும் எடுத்தாண்டு வரும் என் அன்பான எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் (ஆயிரம் நாவல்கள் எழுதிய அபூர்வ சிகாமணி ) சிந்தனையை போலவே இந்த பாட்டி சொல்லும் கதைகளும் நியாயம் வெல்லும் என்றே போதித்தாலும் சில சமயங்களில் பொய்யும் ஜெயிக்கும் (தற்காலிகமாகத்தான்) எனவும் சொல்லி பயமுறுத்தும்! 

   எங்கள் அன்பை பெற்ற ஆசிரியர் திரு.அசோகன் அவர்கள் சமீபத்தில் கூட கிராபிக்ஸ் நாவல் வெளியிட்டார். அதை எழுதியவர் டாக்டர் திரு.L.பிரகாஷ். அவர் தனது வாசகர்களுக்கு எழுதும் வார்த்தைகள் எல்லாம் எடிட்டர் ஏரியாவில்  இடம் பெறும். ஸ்கான் செய்து கொடுத்த திரு ஜான் போஸ்கோ அவர்களுக்கு (ஹி ஹி என் மச்சானுக்குதான் நன்றிகள்!) 


திரு.அசோகன் அவர்களை வைத்தோ அல்லது திரு ராஜேஷ் குமார் அவர்களை வைத்தோ நெவெர் பிபோர் ஸ்பெஷல் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று இந்த இடத்தில் என் கோரிக்கையை வைக்கிறேன். திரு பட்டு கோட்டை பிரபாகர், திருவாளர்கள் சுபா ஆகியோரையும் கேட்டு பார்க்கலாம் என்பது எனது அன்பான வேண்டுகோள்! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே! நம்ம விஜயன் சாருக்கு தொலை பேசியில் சொல்லலாமே! புறப்படுங்கள் தோழர்களே! சாதனை சரித்திரம் படைப்போம்!

இங்கே ஒரு கிழவியின் கதை உங்க அன்பான பார்வைக்கு மட்டும்! நட்புக்காக மட்டும். இதனை பதிவிடுவதில் எந்த லாப நோக்கும் கிடையாது நண்பர்களே! உங்களுக்கு கிடைத்து இருப்பின் அந்த புத்தகம் கிடைத்த விதம குறித்து பின்னூட்டம் இடுங்களேன். இந்த நூல் கிடைக்க பெறாதவர்கள் மட்டும் கீழே போங்க . மத்தவங்க தாவிடுங்க! நன்றிகள் திரு விஜயன் அவர்களுக்கு போய் சேர வேண்டும் நண்பர்களே. தரமான மொழி பெயர்ப்பு. சிறப்பான தேர்வுகள் என்று தன் லயன் , முத்து , கிளாசிக்ஸ் காமிக்ஸ் வரிசைகளை வடிவமைத்து வருகிறார். வரப் போகும் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் நிறைய பக்கங்களுடன் அதிரடிக்க காத்து இருக்கிறது. நீங்கள் தயாரா? இங்கே வந்து இருக்கும் கதை ஹாரர் ஸ்பெஷல் புத்தகத்தில் வந்த ஒரு சிறு கதை.
அதிர வைக்கும் அட்டை. சிவகாசி பிரகாஷ் பப்ளிஷர்ஸ் கைவண்ணத்தில் என்னமாய் மிரட்டி எடுக்கிறது பாருங்கள்.










  அடுத்தடுத்து இது போன்ற மிரட்டல் விடுப்பது கிழவி கருப்புவின் வழக்கமான பாணி!!
படித்த நண்பர்களுக்கு இங்கே ஒரு வேண்டுகோள். ஹீ ஹீ ஹீ வேறென்ன அற்ப மானிடர்களே! நான்தான் கருப்பு கிழவி பேசுறேன் நானும் என் ஆவி கூட்டமும் உங்களை மிரட்ட நினைக்கிறோம். அடுத்த வருடமாவது எனக்கு வாய்ப்பு தர சிவகாசிக்கு தட்டவும். இல்லை உங்க கனவுல வந்து உங்களை கலாட்டா பண்ற நெனப்புல இருக்கேன் அம்பிகளா!! ஹீ ஹீ ஹீ ஹீ ஹீஈஈ!!!!!! (குரல் மெல்லியதாகி கொண்டே போகிறது)

சரி நண்பர்களே! அப்புறம் என்ன எங்க பாட்டி தங்க பாட்டி நிறைய கதை கைவசம் வெச்சு இருக்காங்க. நீங்க மனசு வெச்சா கதை சொல்லி பயமுறுத்துவாங்க! மீண்டும் சந்திக்கலாம் நண்பர்களே! அது வரை உங்களிடமிருந்து விடை பெறுவது பாட்டியோட குட்டி பேய்......ஈஈஈஈஈஈ......

12 கருத்துகள்:

  1. நண்பரே உங்களுடைய பதிவுகள் அனைத்திலுமே எனக்கு மிகவும் பிடித்தது ஒவ்வொரு பதிவிலும் உங்களுடுய மிரட்டும் புகை படங்கள்தான்.
    இந்த பதிவிலும் நீங்கள் ஏமாற்றவில்லை.அப்பா அந்த மொட்டை புகைப்படம் பயமுறுத்திவிட்டது.
    பதிவின் தொகுப்புகளும் அருமை.

    இன்னும் அந்த தொடரும் பட்டையை இணைகவில்லையே?

    பதிலளிநீக்கு
  2. அண்ணே,
    மரணத்தின் பல முகங்கள் அட்டையை பார்த்தவுடன் இந்த டைலலாக் தான் நினைவுக்கு வந்தது.

    பரமா,
    மரண பயத்தை காட்டிட்டியே பரமா..... (சுப்ரமணியபுரம் ஸ்டைலில் படிக்கவும்).

    நீங்கள் (புத்தகத்தை வெளியிட வேண்டும் என்று) சொன்னவர்கள் எல்லோருமே நமது நண்பர்களே. ஆகையால் எடிட்டரிடம் கேட்டு சொல்லுங்கள். அவர்கள் அனைவரையுமே கூட வரவழைக்க இயலும்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி திரு கிருஷ்ணா அவர்களே. கடைசியில் நம்மளையும் நம்புறாங்க!! என்று உள்ள இடத்தை ஒரு கிளிக் பண்ணுங்க!

    பதிலளிநீக்கு
  4. நல்வரவு கிங் அவர்களே!! கண்டிப்பா நான் கோரிக்கை வைக்கிறேன். நீங்க நினைச்சா முடியும் தலை!

    பதிலளிநீக்கு
  5. போட்டு தாங்குங்க பாஸ் !!!

    போட்டோ அருமை ஆனால் ஏன் இந்த கொலை வெறி !!!!


    ;)

    பதிலளிநீக்கு
  6. நண்பரே, ஒவ்வொரு கதை பதிவு லும் உங்கள் குடும்பதி னரை வரவைப்பது உங்கள் அழகான பாச உணர்வை காட்டுகிருது.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. நண்பரே, ஒவ்வொரு கதை பதிவு லும் உங்கள் குடும்பதி னரை வரவைப்பது உங்கள் அழகான பாச உணர்வை காட்டுகிருது.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. என் சிறுவயதில் கருப்புக்கிழவியின் கதைகள் என்னுடைய favouriteகளில் ஒன்று! திகிலான சம்பவத்தின் முடிவில் குரூர புன்னகையுடன் நம் கருப்புக்கிழவி நியாயத்தை உபதேசிக்கும் அழகே தனிதான்! பல கதைகளில் பேய்கள் நல்லவைகளாக சித்தரிக்கப்பட்டிருந்த விதம், பேய்களின் மேல் நல்லதொரு அபிமானத்தை (!) அந்நாட்களில் ஏற்படுத்தியது.
    அதற்காக, கருப்புக் கிழவியின் introductionக்காக ஔவையாரிலிருந்தா ஆரம்பிப்பது? :-)
    மறுபதிப்பில் ஒரு digestஆக வந்தால் நானும் சந்தோசமடைவேன்.
    நண்பர் ஜான் சைமனை புகை(யாய் கிளம்பும்)படமாய் கண்டதில் மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  9. நண்பரே

    கையில் என்ன கத்தியா?

    நொம்ப நாளைக்கு அப்புறம் உங்கள் பதிவுக்கு வந்தால் இப்படியா பயமுறுத்துவது.

    பதிலளிநீக்கு
  10. வாங்க பரிமள்! அது சும்மா அன்பான வரவேற்புதான் நண்பா! கருப்பு கிழவியின் வரவேற்பே தனியாக தெரியுமில்லை!

    பதிலளிநீக்கு
  11. இன்றும் இக்கதைகளைப் படித்தால் நன்றாக இருப்பதே கருப்புக்கிழவியின் கதைகளின் தரம். எனக்கும் மிகவும் பிடித்த கதை வரிசைகளில் இதுவும் ஒன்று.

    ரீபிரிண்ட்ல் வருமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

    பதிலளிநீக்கு

கிளாசிக் ஸ்பெஷல் -2-வகம் காமிக்ஸ் மார்ச் வெளியீடு

  இனிய வணக்கங்கள் தோழர்களே.. இந்த மார்ச் மாதம் வெளியாகியுள்ள காமிக்ஸ்களின் வரிசையில் வகம் லேட்டஸ்டாக இறக்கி இருப்பதுதான் இந்த கிளாசிக் ஸ்ப...