ஞாயிறு, 11 ஜூலை, 2021

சோகம் ஏன் சித்திரப்பெண்ணே?_ஜானி சின்னப்பன்

 


உன் சோகப் பார்வையில் 
ஒரு நூறு அர்த்தங்கள்.. 
தீராத அலையாய் 
உன்னுள் எழும் சிந்தனை 
நீர்த்திவலைகள் பட்டுத் 
தெறிக்கின்றன 
என் மீதும் கொஞ்சம்.. 
கொஞ்சுமொழிப் 
பேசிப் போனவன் 
வரவையெண்ணி ஏக்கமா? 
உன் கண்ணில் 
சமுத்திரத்து ஆழம் 
கண்டேன்..
 உன்னவனை 
ஊருக்கனுப்புகையில் 
உன் கண்ணிலுறைந்த 
துக்கமா 
அறியேன் நான்.. 
காற்றுகூட உன்னைக் 
கடந்து போகையில் 
சோகராகம் இசைத்துப் 
போவது என் காதில் 
கேட்கிறது.. 
நுட்பமாய்ப் பார்த்தால் 
நீயும் ஒரு தவமியற்றும் 
யோகியே.. 
காத்திருத்தல்..
கண்களில் நீர் கோர்த்தல்..
இடைவிடா மோனநிலை.. 
தீரட்டும் உன் மௌனம்.. 

அதோ உன்னவனின் 
வருகையை மோப்பம் 
பிடிக்கிறது என் நாசி..  
மகிழ்ச்சி கொள்கிறேன் 
நானும் வாலாட்டியபடி..
_ஜானி சின்னப்பன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திகில் கிராமம்_Follow Up

வணக்கம் ப்ரியமானவர்களே.. பலப்பல கதைகள் உலகெங்கும்.. எங்கோ ஒரு ட்ரான்ஸில்வேனியாவும், எப்போதோ ஒரு வெஸ்டர்னும் மனதில் பதிந்து இன்றும் நிற்பதை ந...