வியாழன், 22 ஜூலை, 2021

"உசிருக்குள்ளே உன்னை வெச்சேன்.."_ஜானி சின்னப்பன்

கையைப் பிடிச்சுக் கூட்டிப்போகும் 
உன்னைக் கண்கள் தேடுதே அப்பா.. தோழமையா சிரிச்சுப் பழகி பலகதைகளை சேர்ந்து பேசிய அந்த நாளும் திரும்ப வருமா அப்பா.. கண்டிச்சாலும் தண்டிச்சாலும் நான் சாப்பிட்டேனான்னு ரகசியமா விசாரிச்சாலும் எதிலும் உன்கிட்ட அன்புதானே பாக்க முடியும்?

இந்த உலகமே எதிர்த்தாலும் எங்கப்பா கூட இருந்தா வர்ர பலமே வேறதான் அப்பா..

நீயில்லாம தனியா ஒவ்வொரு நொடியும் நானே முடிவெடுக்கையில ஒரு ஓரமா உசுருக்குள்ள ஒன் ஞாபகமும் ஒக்காந்துக்குதே அப்பா.. நீ இருந்தா நானே ஏன் தலையைப் பிச்சிக்கப்போறேன்னு நெனப்பு வந்து உன் நினைவைக் கிண்டிவிட்டுப் பறக்குதப்பா.. திரும்ப ஒரு நா உன்னை சந்திப்பேனா தெரியலை.. ஆனா சந்திச்சா கட்டிப் புடிச்சிக்கிட்டு என்னோட ஒலகத்தையே சமர்ப்பிச்சிட ஆசை அப்பா..

கிடைக்குமா ஒரு வாய்ப்பு

திரும்ப நான் ஒன்னைப் பாக்க..

_ஜானி சின்னப்பன்..


2 கருத்துகள்:

  1. என்னாச்சு ??!!!

    காலையிலேயே அப்பா நினைப்பு !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பா எப்போதும் தோழராகப் பழகியவர். எப்போதும் நெஞ்சில் அலையடிக்கும் உணர்வுகளின் ஒரு துளியைக் கவிதையாக்கினேன்..

      நீக்கு

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...