ஞாயிறு, 26 டிசம்பர், 2021

வேங்கைப் பாண்டியன்_தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் டிஜிட்டல்

காமிக்ஸ் வாசக வாசகியருக்கு, வணக்கங்கள். வேங்கைப் பாண்டியன் என்னும் இந்த நூலை வழங்கி ஆவணப்படுத்திட உதவிய நண்பர் டெக்ஸ் சம்பத்துக்கு நன்றிகள். இணையம் முழுக்க சித்திரக்கதைகள் கொட்டிக்கிடந்தாலும் அழகுத்தமிழில் அந்த நாட்களில் வாசித்த நூல்கள் என்றுமே நீங்காத நினைவலைகளாக நம்மைக் கனவிலும் வந்து போவதையும் நாம் உணர்கிறோம். அதுபோன்று அந்த நாட்களில் வெளியான புத்தகங்கள் இன்றைக்குத் திரும்பி வாசித்தால் அத்தனை பெரியதாக கவர்வது இல்லைதான். ஆனால் அன்றைய நாட்களில் நமது மனம் விரிவடையவும், உலகத்தைப் பற்றிய நமது பார்வைகள் பெரிதடையவும் இந்த நூல்களே நமக்கு ஜன்னலாக இருந்தன என்பதில் மாற்றுக்கருத்தும் இருக்கமுடியுமா என்ன? இணையதளங்களும், செல் போன்களும் நம் மீது அதன் தாக்கத்தைக் காண்பிக்கா தருணங்களில் இவைதானே நமது சிறந்த பொழுது போக்காக இருந்திருக்க முடியும்? துள்ளித்திரிந்த நாட்களில் இவை நம்மை ஆக்ஷன், அதிரடிகள், உலகத்தில் உள்ள பல்வேறு இடங்கள் எனக்கு சுதந்திர தேவி சிலையும், ஐபெல் டவரும், மன்ஹாட்டனின் வானுயர்ந்த கட்டிடங்களும் அவற்றின் மூலமே வெகு பரிச்சயமாயிற்று. உங்களுக்கும் அப்படித்தானே இருந்திருக்கும்? அப்படிப்பட்ட கடந்து போன நாட்களின் சித்திரக்கதைகளை உயிர்ப்புடன் உங்கள் முன் நிறுத்தவே எனது வலைப்பூ எப்போதும் முயன்று வருகிறது. இடையிடையே எத்தனை புதிய மொழி மாற்றக்கதைகள் வெளிவந்தாலும்  அவற்றையெல்லாம் விட இந்த வேங்கைப் பாண்டியன் போன்ற அபூர்வ புத்தகங்களே எனக்குப் பிரியம். இன்றைய நாட்களின் மொபைல் ஸ்கான் எத்தனை எளிதாக இருப்பினும் தெளிவும் திருப்தியும் வருவது ஸ்கானர் இயந்திரங்களின் மூலமான ஒளி வருடலால் மாத்திரமே என்பது எனது கருத்து. நன்றி தோழமை கொண்ட உள்ளங்களே. இதோ வேங்கைப்பாண்டியன் உங்களுக்காகக் காத்திருக்கிறார். 

அட்டைப்படம் இல்லாமலேயே பதிவு பதிப்பிக்கப்பட்டதைக் கண்ட நமது அன்புக்கும் பெரு மதிப்புக்கும் உரிய திரு. முத்து விசிறி தனது மாபெரும் சேகரிப்பிலிருந்து வேங்கைப் பாண்டியனை மெருகூட்ட அட்டைப்படம், பின் அட்டைப்படம் கொடுத்து உதவி புரிந்திருக்கிறார். வலைப்பூ வாசகர்கள் சார்பில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தாங்க்யூ சார்.. 


 










சிறியதொரு வண்ண முயற்சி.. 

அதிலேயே வேறு விதமாக முயற்சித்தால்.. 
குறிப்பு: இந்த நூலை டிஜிட்டல் வடிவில் மாற்றும் போது இந்த நூலின் முன் பின் அட்டைகள் எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியாது. இந்த பக்கம் என்னை ஈர்த்ததால் இந்த வண்ணமிடும் முயற்சியை செய்து வைத்திருந்தேன்.. 
நம்ம அன்பு அண்ணன் முத்து விசிறி அவர்கள் முன் பின் அட்டைகளை வாட்ஸ் அப்பில் பி. எம். பி. வடிவில் சிங்கப்பூரில் இருந்து அனுப்பி வைத்ததால்தான் இந்த சர்க்கஸ் அரங்கமே பின் அட்டையாக வைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். அது கீழே.. 















இந்த அட்டையின் கவர்ச்சி என்னை மட்டும் அல்ல.. உங்களையும் கவர்கிறதுதானே.. அதனால்தான் கதையின் இந்தப்பகுதியினை வண்ணத்தில் முயற்சித்துப் பார்த்தேன். இந்த ஒரிஜினல் அட்டைப்படத்தில் ஓவியர் எத்தனை வண்ணங்களை தூரிகை கொண்டு மிக சிறப்பாக சேர்த்திருக்கிறார் பாருங்களேன்.. 

ஒரு நிமிடம் பிளீஸ்:

            தரவிறக்க சுட்டி.. இந்த நூலை உங்களுக்கு விருப்பமான எந்த தளத்திலும் பகிர்ந்து கொள்ளலாம். முடிந்தால் எங்கிருந்து இதனை பெற்றுக் கொண்டீர்கள் என்பதை அறிவித்தால் மற்ற நண்பர்களும் தங்களது அபூர்வமான காமிக்ஸ்களை ஆவனப்படுத்த முன்வரலாம். அதுபோன்ற ஆர்வலர்களுக்கு தகுந்த வழிகாட்டுதல் இல்லாவிட்டால் அந்த புத்தகம் ஆவணப்படுத்திட காலதாமதமாகும் என்பதால் உங்கள் தரவிறக்கங்கள் அனைத்திலும் எங்கிருந்து பெறுகிறீர்களோ அந்த இணைய தளத்தையோ. வாட்ஸ் ஆப் குழுவையோ குறிப்பிட்டால் நல்லது என்பது எனது தாழ்மையான கருத்து.. 

வேங்கைப்பாண்டியன்_தமிழ் காமிக்ஸ் டிஜிட்டல்

இந்த கதைக்கு அட்டைப்படங்கள் திரு. முத்து விசிறி அவர்களது உதவியுடன் இணைக்கப்பட்டபின்னர் புதிய தரவிறக்க சுட்டி இணைத்திருக்கிறேன்.. அது கீழே:

வேங்கைப் பாண்டியன்-2.0

என்றென்றும் அதே அன்புடன்.. ஜானி சின்னப்பன் 

4 கருத்துகள்:

  1. ஆகா, அருமை அருமை

    பொக்கிஷ பதிவு ஐயா.

    இது போன்ற பொக்கிஷங்களை தேடி வழங்கும் உங்கள் வள்ளல் தன்மைக்கு என் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பு நிறைந்த வார்த்தைகளுக்கு நன்றிகள். நண்பர்கள் கொடுத்ததை நான் கொஞ்சம் எடிட் செய்து இங்கே பகிர்கிறேன். உண்மையான வள்ளல்கள் புத்தக ஆர்வலர்களே. அவர்களில் திரு. டெக்ஸ் சம்பத் கொடுத்த புத்தகமே இன்று தங்களுடன் பகிர்ந்து கொண்டு மகிழ முழுக்காரணம். நன்றி ஐயா.

      நீக்கு

எனக்கு எண்டே கிடையாது_ டிடெக்டிவ் ட்ரேசி_வண்ணத்தில்!!!

வணக்கம் அன்பு வாசகர்களே.. இது நம்ம வலைப்பூ.. லயன் காமிக்ஸில் வெளியான கனவே கொல்லாதே வாசித்திருந்தீர்கள் என்றால் அதில் கனவுக்குள் புகுந்து ஒரு...