திங்கள், 13 டிசம்பர், 2021

இது ஒரு வன்மேற்கின் கதை_ஜானி சின்னப்பன்

 பூம்...

வெடித்ததொரு டைனமைட்..

அதிர்ந்ததந்த சுரங்கம்..

வெளிப்பட்டதோ வண்டி வண்டியாய்த் தங்கம்..

சுரங்கத்தை சுரண்டி இயற்கையைச் சுரண்டியவர்களைச் சுரண்டிப் போகவொரு கூட்டம்..தெரு முக்கிலேயே காத்திருக்கும்.. கௌபீனத்தில் கட்டி வைத்திருந்தாலும் கவர்ந்து விடுமந்தக் கர்வமிகு கூட்டம்.. தீயதை ஒழிக்கவென்றே ஆங்காங்கே செரீப்புகளும் மார்சல்களும் அவதாரமே எடூத்து வந்து

டுமீல் டுமீலெனச் சுட்டாலும் புற்றீசல் கூட்டத்தை யாரால் தடுத்திட முடியும்?

நாளொரு கொலையும் பொழுதொரு வதமுமாய் திமிலோகப்படுமந்த மதுபானக் கூடம்.. உடையும் பாட்டில்களும் ஓடிப் பதுங்கும் பேரழகுப் பதுமைகளும் பஞ்சமில்லாப் பாலை வெளிகளும் கரைதெரியாப் பாலைவனக் கடல்களும் பாய்ந்து வரும் புரவிக் கூட்டமும் வெட்டியான்களின் வாய் நிறைந்த இளிப்புகளும் லாடங்கள் தெறிக்கும் கொல்லர் கூடமும் விற்றுத் தீர்ந்தே சலித்துப் போகும் தோட்டாக் கடைகளும் தினம் தினம் மரணம் தின்னும் இரத்த பூமியும்.. கண்டேன் வன்மேற்கிலொரு வன்முறைக் காவியத்தை...ஜானி சின்னப்பன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...