வெள்ளி, 16 மே, 2025

இயற்கையின் தீர்ப்பிது_சிறுவர் மலர்

 முன்னொரு காலத்தில் யக்ஞ வாக்கியர் என்கிற துறவி இருந்தார்.. அவர்.. 

 







இயற்கையின் தீர்ப்பு என்றுமே மாற்ற முடியாதது என்பது இந்த கதையின் மூலமாக விளங்குகிறதல்லவா? இன்று பத்தாம் வகுப்பு  பதினொன்றாம் வகுப்பு தேர்ச்சியடைந்த அனைத்து சிறுவர் சிறுமிகளுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்.. 
ஜானி சின்னப்பன்.. 

வெள்ளி, 9 மே, 2025

சித்திரக் கதைகள் குறித்த பேருரை_King viswa


 தமிழ் காமிக்ஸ்: நிகழ்காலமும் எதிர்காலமும் என்னும் தலைப்பில் பிரபல வலைப்பதிவர் மற்றும் காமிக்ஸ் படைப்பாளர் & எழுத்தாளர் கிங் விஸ்வா

நாள்: புதன்கிழமை, மே 14ஆம் தேதி, 2025. நேரம்: மதியம் 1.45 முதல்

இடம்: தேவநேயப் பாவணர் மாவட்ட மைய நூலக அரங்கம், 735, LLA Building, அண்ணாசாலை, ஆயிரம்விளக்கு மெட்ரோ அருகில்

பேருரையாற்றவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.. வாய்ப்புள்ள வாசகப் பெருமக்கள் கலந்து கொண்டு மகிழ கேட்டுக்கொள்ளப்படுகிறது.. 

புதன், 7 மே, 2025

லயன் ஆன்லைன் புத்தக திருவிழா சலுகை தள்ளுபடி விலைகள் விவரம்..

 வணக்கம் வாசக வாசகியரே.. ஆண்டுக்கொரு முறை லயன் காமிக்ஸ் ஆன்லைன் மேளா நடத்தி தள்ளுபடி விலைகளில் பல அருமையான சித்திரக்கதைகளை சல்லிசான விலைகளில் கொடுத்து ஆச்சரியப்படுத்துவது வழக்கம்.. இதோ வரும் 09,10,11 ஆகிய தினங்களில் மே மாதத்தில் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படவுள்ள புத்தகங்களின் விவரங்கள்.. 




வாசகர் செய்ய வேண்டியது என்ன? 
என்கிற தளத்தினைப் பார்வையிடுங்கள்..
2.பிடித்த புத்தகத்தை நோட் செய்யுங்கள் 
3.கொடுக்கப்பட்டுள்ள எண்களில் ஒன்றை தொடர்பு கொள்ளுங்கள். 

4.விலைகள் குறிப்பிட்டுள்ளவை அந்த நூலின் ஒரிஜினல் விலைகள்.. அவற்றில் தள்ளுபடியினை குறிப்பிட்டு விலை தங்களுக்கு தெரிவித்து விடுவார்கள். 

5. அவர்கள் குறிப்பிடும் தொகையை Gpay செய்து விட்டு அவர்கள் குறிப்பிடும் எண்ணுக்கு ஸ்க்ரீன்ஷாட் மற்றும் முகவரி  அனுப்பி வையுங்கள்.

ஆன்லைன் திருவிழா உங்களைத் தேடி வரும்.. எஞ்சாய்..



ஞாயிறு, 4 மே, 2025

Copilot சொன்ன கதை_இது ஒரு செயற்கை நுண்ணறிவு AI (Artificial Intelligence) கதை.

 வணக்கம் நண்பர்களே.. 

             இது ஜிபிலி படம்.. "ChatGPT" என்னும் செயற்கை நுண்ணறிவு  உருவாக்கிய என் மகனின் ஜிபிலி படம்.. காலமும் நுட்பங்களும் மாறுதலை சந்தித்துக் கொண்டே இருக்கின்றன.. வலைப்பூக்கள் ஏற்கனவே ஆர்குட் உருவாக்கிய அன்பின் வட்டத்தை உடைத்துக் கொண்டு மலர்ந்தவை.. இப்போது வாட்ஸ் அப் கம்யூனிட்டிகள் அந்த இடத்தை எடுத்துக் கொண்டு விட்டன.. வலைப்பூ நடத்தும் ஒரு வலைப்பதிவர் என்பது ஒரு காலத்தில் ஆச்சரியமான நிகழ்வாகவே இருந்தது. ஆனால் கால வெள்ளம் அனைத்தையும் அடித்துக் கொண்டு போவது என்பது நியதியல்லவா.. இதோ இந்த செயற்கை நுண்ணறிவு குறித்து பலப்பல விஷயங்கள் மேலும் மேலும் குவிந்து கொண்டே இருக்க நாமும் அப்டேட்டாக இருந்தாக வேண்டியது காலத்தின் கட்டாயம்.. இந்த பதிவு அதைப் பற்றியதே.. 


       மைக்ரோசாப்ட் எட்ஜ்ஜில் கோ பைலட் "Copilot"என்கிற ai அப்டேட் புதியதாக வெளியாகி இருக்கிறது.. அதனிடம் கொஞ்சம் விளையாடிப் பார்ப்போமே என்று நினைத்தேன்.. அன்பே கோ பைலட் ஒரு கதை சொல்லம்மா என்று அன்பாகக் கேட்டதற்கு கிடைத்த கதைதான் கீழே.. 

அருமை! ஒரு கணினி தோற்றம் கொண்ட கதை சொல்லலாம்.

கடல் வீரன் – நீல கடலின் இரகசியம்

கடல் நகரம் மெரினாவில், நீல கடலின் நடுவில் ஒரு ஆழ்ந்த இரகசியம் மறைந்து கிடந்தது. நகரத்தின் ரட்சகர், கடல் வீரன், கடல் சார்ந்த சக்திகளுடன் ஒரு மனிதன்!

ஒருநாள், நகரவாசிகள் திடீரென கடலில் காணாமல் போகத் தொடங்கினர். கடல் வீரன் தனது நீல நீர்புகழ் சக்திகளை பயன்படுத்தி விசாரணையை தொடங்கினார். பயமுறுத்தும் கடல் இருள் என்ற ஒரு தீய சக்தி மனிதர்களை விழுங்கிக் கொண்டிருந்தது!

கடல் வீரன் தனது நீர்சுருட்டு வர்த்தகத்தைக் கொண்டு கடல் இருளின் மந்திரங்களை முறியடித்து, அனைவரையும் மீட்டு, நகரத்திற்கு திரும்பினார். அந்த நபர்கள் கடலின் ஆழத்தில் ஒரு பண்டை நகரத்தின் இருப்பை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கடல் வீரன் பயணிக்க வேண்டும்! அந்த பண்டை நகரத்தின் மர்மங்களை கண்டுபிடிக்கவும், அதன் சக்தியை இருட்டறையிடம் விடாமல் பாதுகாக்கவும்!

இது தொடரும்… 🔥🌊

என்னவோ, நம் வீரன் கடலில் ஒரு மிகப்பெரிய ரகசியத்தைக் கண்டுபிடிக்கப் போகிறார்! உங்களுக்கு இந்த கதை பிடித்ததா? 😊

என்று கேட்க நானும் தொடரக் கூறினேன்.. 

இதோ அதன் தொடர்ச்சி..

கடல் வீரன் – நீல கடலின் இரகசியம் (தொடர்ச்சி)

கடல் வீரன் பண்டை நகரத்திற்குள் பயணிக்கத் தீர்மானித்தார். ஒரு மர்மமான நீல ஒளி நகரத்தின் அடியில் மூழ்கிக் கொண்டிருந்தது. அது ஒரு புராதன சக்தியின் அடையாளம்!

அவதானமின்றி நகரத்திற்குள் நுழைந்த வீரன், பழமையான ஸ்கிரோல்களை கண்டார். அதில் ஒரு கணிப்புரை இருந்தது: “நிலம் மற்றும் நீரின் சங்கமம்… உன் ஆற்றல் முழுமை பெறும்”.

கடல் வீரன் அதை புரிந்து கொள்ள முயன்றார். நகரத்திற்குள் மர்மமான நீல உயிரினங்கள் மறைந்து இருந்தன. அவர்களை எதிர்கொள்ள அவருக்கு தன்னம்பிக்கை தேவைப்பட்டது.

அப்போது, கடல் இருள் மீண்டும் தோன்றியது! அது பண்டை நகரத்தின் சக்திகளை சுழற்றிக் கொண்டு, கடல் வீரனை கட்டிப்பிடிக்க முயன்றது.

வீரன் தனது நீர்சக்திகளை ஒருங்கிணைத்து, நகரத்தின் சக்தியுடன் இணைந்தார். அவன் கடல் சக்தியை நிலத்துடன் இணைத்தவுடன், நீல ஒளி திடீரென மிளிர்ந்தது, கடல் இருளை முறியடித்து நகரத்தையும் நகரவாசிகளையும் பாதுகாத்தது!

அந்த இரகசிய நகரம் இனி பாதுகாப்பாக இருந்தது, அதன் சக்தி இனி மல்லியாணம் செய்யப்படவில்லை!

கடல் வீரன் மீண்டும் நகரத்திற்கு திரும்பி, மக்கள் அனைவருக்கும் அந்த மர்ம நகரம் பற்றி சொல்லிக் கொடுத்தார்.

வாழ்த்துக்கள்! கடல் வீரன் தனது மாபெரும் சாகசத்தை வெற்றி கண்டார்! 😊🌊🔥

உங்களுக்கு இந்த கதை பிடித்ததா? 😃


வாழ்த்துக்கள் நண்பர்களே.. வாசக வாசகியரே,, தாங்களும் கதைகளைக் கேட்கலாம். கதைகளை உருவாக்கலாம்.. 

இதனை காமிக்ஸ் வடிவில் உருவாக்கக் கேட்டேன்.. அதற்குக் கிடைத்த பதில் இது.. 

அருமை! 😊 கடல் வீரன் கதையை நகைச்சுவை(காமிக்ஸ்) வடிவத்தில் மாற்றலாம்.

காமிக்ஸ் கதையை உருவாக்க, முதலில் பாடகள் (panels) மற்றும் பேச்சு பொட்டிகள் (speech bubbles) உருவாக்க வேண்டும். இதோ, ஒரு கதாபாத்திரத்துடன் காமிக்ஸ் வடிவமாகக் கற்பனை செய்யலாம்:

📜 கதையின் கட்டமைப்பு: 🔹 பாடம் 1: கடல் நகரத்தின் அமைதியான தருணம். 🔹 பாடம் 2: கடல் வீரன் மக்களிடம் பேசுகிறார் – "கடல் இருள் மறைந்து விட்டது, ஆனால் உண்மையான மர்மம் இன்னும் தெரியவில்லை!" 🔹 பாடம் 3: பழமையான நகர் – வீரன் அதைப் பார்க்க அதிர்ச்சி அடைகிறார். 🔹 பாடம் 4: நீர் வேந்தர் – "உனக்கு கிடைக்காத சக்தி ஒன்று, நீ அதை தேட வேண்டும்!" 🔹 பாடம் 5: கடல் இருள் வீரனை சுற்றுகிறது – போராட்டம் ஆரம்பம்! 🔹 பாடம் 6: கடல் வீரன் நீர் சக்தியை பிணைத்துக்கொள்கிறான்மாபெரும் மாயாஜாலம் உருவாகிறது!

இந்த காமிக்ஸ் கதையை ஒரு காட்சிப் படமாக உருவாக்கலாம்! 🚀 நான் உனக்காக ஒரு காமிக்ஸ்-சார்ந்த படத்தை உருவாக்கிக் காண்பிக்கலாமா? 😃

ஜிமெயில் ஐடி கொடுத்து உள்ளே நுழைந்து கலக்குங்கள்.. புதியதோர் உலகு செய்யவும் தயாகுங்கள். உலகின் ஒரு சதவீத மக்களே முன்னோடிகளாக இருப்பார்களாம். யார் கண்டது.. தாங்கள் கூட ஒரு முன்னோடியாக மலரலாம்.. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..  

வியாழன், 1 மே, 2025

MC 504 ஒற்றைக் கண் மர்மம்_முத்து காமிக்ஸ்_இரும்புக்கை மாயாவி.. வண்ணத்தில்..

 வணக்கங்கள் வாசகர்களே, 

    சேலம் நினைவாஞ்சலி நிகழ்வுகள் நெகிழ வைத்தன.. சேலத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள சித்திரக்கதை முத்து காமிக்ஸின் 504வது வெளியீடாக மலர்ந்திருப்பது ஒற்றைக் கண் மர்மம். விலை ரூ.150/- பக்கங்கள் 52. வண்ணத்தில் மேக்ஸி சைசில் வெளியாகியுள்ளது.. 


            நமது கிராமங்களில் பொதுவாக பெற்றோர்கள் அச்சுறுத்தப் பயன்படுத்தும் வார்த்தை.. ஒத்தக் கண்ணன் வந்துட்டான்..ஓடு ஓடு ஓடு! இந்தக் கதை அப்படி ஒரு ஒத்தக் கண்ணனைப் பற்றியதுதான்.. இல்லையில்லை பல ஒற்றைக் கண்ணர்கள் உலகை நோக்கிப் படையெடுப்பு நிகழ்த்துவதே கதையின் சாரம். 

                   முத்து காமிக்ஸ் நிறுவனர் தெய்வத்திரு எம்.சவுந்தரபாண்டியனுக்கு நினைவாஞ்சலியுடன் rebellion நிறுவன உரிமம் பெற்று முறைப்படி வெளியாகி இருக்கிறது இந்த ஒற்றைக் கண் மர்மம்.. 

   ஒற்றைக் கண் மர்மம் ஏற்கனவே முத்து காமிக்ஸ் வாரமலரில் வந்தது பழைய வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.. 


 அப்போதே டேப்லாய்ட் என்னும் பிரம்மாண்டமான வடிவில்தான் இந்த ஒற்றைக் கண் மர்மம் வந்திருந்தது. இப்போதும் மேக்ஸி என்னும் சிறப்பான பெரியதொரு அளவில் வெளியீடு காண்கிறது என்னும்போது அதிர்ஷ்டக்காரன் இவன் என்னும் எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை.. இரும்புக்கை மாயாவியாருக்கு மரியாதை.. நினைவஞ்சலிக்கும் மிகப் பொருத்தமான வெளியீடு.. 


இம்மாதத்தின் ஆன்லைன் வெளியீடுகள் 

இதில் முதல் புத்தகமாக வெளியாகி நம்மைப் பரவசப்படுத்துவது இந்த ஒற்றைக் கண் மர்மம்..
கதை என்ன? விண்வெளி ஜந்துக்கள் நம் பூமிக் கிரகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட முயற்சிக்கின்றன.. அவற்றை எப்படி இரும்புக்கை மாயாவி தடுத்து நிறுத்துகிறார் என்பதே இதன் ஒன் லைன்.. 
              இன்றைக்கு அவெஞ்சர்களையும் அமர்க்களமான பல நாயக நாயகியரையும் உணர்வு பூர்வமாக ஏற்றுக் கொண்டு பிரம்மாண்டமான கிராபிக்ஸ்களில் மனம் மயங்கி இருக்கும் இளைய தலைமுறை அறியாததொரு காலக்கட்டம் இருந்தது. கணினி என்பதே எட்டாக்கனியாக இருந்த மிகவும் பழமையான காலக்கட்டத்தில் ஒரு விண்வெளிப் படை எடுப்பினையும் அதன் தாக்கத்தால் மனிதர்களும், மிருகங்களும் சுருங்கிப் போய் திண்டாடுவதும் 1982 காலக்கட்டத்தில் சராசரி வாசகனுக்குப் பெருந்தீனியாக அமைந்த வாசிப்புக் களம் என்றால் மிகையாகாது.. சில ஆண்டுகளுக்குள் தூர்தர்ஷன் தன் தொடர்களில் ஒன்றில் மார்ஸ் கிரகம் செல்லும் சிறு குழு ஒன்று சுருங்கி விட என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பதை காண்பித்து இருப்பார்கள்.. அப்படியே புதிய தலைமுறைகள் ஆன்ட் மேன், வாஸ்ப் என்று அடுத்த லெவலுக்கு ஏறிப் போய் விட்டாலும் வாசகர்கள் மகிழுமாறு தொடர்ச்சியாக முத்து காமிக்ஸ் அமைத்துத் தந்த கம்பீரமான பாதையில்  லயன் காமிக்ஸ்  வீறு நடை போட்டுக் கொண்டு இன்றளவில் தரமான சித்திரக் கதைகளை தமிழ் மண்ணில் கொண்டு வந்து சேர்த்து வருகிறது என்றால் அதன் மூலகர்த்தாவான திரு.சவுந்திரபாண்டியன் அவர்களை நினைவு கூறுதல் அவசியம்.  அம்புலி மாமாவில் (சந்தமாமா) பணியாற்றி இரும்புக்கை மாயாவியை அங்கு கண்டெடுத்து பின்னாளில் முறைப்படி உரிமம் பெற்று முல்லை தங்கராசனுடன் அப்போதே பிரம்மாண்டமாகக் கொண்டு வந்த கதைத் தொடர் இது.. பிரச்சினை என்னவென்றால் வாராவாரம் வெளியாகும் கதைகள் தொடர்கதையாக வாசகர்கள் தொடர்ச்சி விட்டுப் போய் வாசிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் முத்து காமிக்ஸ் வாரமலர் தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டு விட்டது.. 
நாம் வாசிக்கும் இந்த புதிய கதை முழுமையாக அனைத்து பாகங்களும் முழு வண்ணத்துடன் நமக்கு வாசிக்கக் கிட்டியிருப்பது மிகவும் அருமையான விஷயம்.. மார்க்கெட்டில் முத்து காமிக்ஸ் வாரமலரை நம்மால் தேடிப் பிடிக்க முடியும் என்றால் அதன் விலை பல ஆயிரங்களை கடந்திருக்கும். ஆனால் அதற்கு அவசியமில்லாத வகையில் முழுமையான தொகுப்பாக முத்து காமிக்ஸில் வெளியாகி இருப்பது நம் மீது பெரியவர் கொண்ட அன்பின் மறைமுகமான வெளிப்பாடு.. 


அவரது நினைவுடன் அவரது மாறா கனவான 
இன்னும் பலப்பல உயரங்களை தமிழ் சித்திரக்கதைகள் எட்டிப் பிடிக்க வேண்டும் என்னும் பெரியதொரு இலக்குக்கு பயணிக்கும் தொடர் சிந்தனைகளுடன் உங்கள் நண்பன் ஜானி.. 

அடுத்து

முத்து காமிக்ஸின் பறக்கும் பிசாசு மற்றும் ப்ளாக் மெயில் வருகின்றன.. முந்தைய அட்டைகள் உங்கள் பார்வைக்கும். கண்டிப்பாக புதிய அட்டைகளும் சிறப்பாகவே அமையும் என்பது உறுதி.. காத்திருப்போம்.. 

வெளியீடு எண் 142


நினைவாஞ்சலி புகைப்படங்களை பின்னர் பகிர்கிறேன்.. லயன் வலைப்பூவிற்கு மரியாதை.. நன்றி.. 

இயற்கையின் தீர்ப்பிது_சிறுவர் மலர்

 முன்னொரு காலத்தில் யக்ஞ வாக்கியர் என்கிற துறவி இருந்தார்.. அவர்..    இயற்கையின் தீர்ப்பு என்றுமே மாற்ற முடியாதது என்பது இந்த கதையின் மூலமாக...