வியாழன், 1 மே, 2025

MC 504 ஒற்றைக் கண் மர்மம்_முத்து காமிக்ஸ்_இரும்புக்கை மாயாவி.. வண்ணத்தில்..

 வணக்கங்கள் வாசகர்களே, 

    சேலம் நினைவாஞ்சலி நிகழ்வுகள் நெகிழ வைத்தன.. சேலத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள சித்திரக்கதை முத்து காமிக்ஸின் 504வது வெளியீடாக மலர்ந்திருப்பது ஒற்றைக் கண் மர்மம். விலை ரூ.150/- பக்கங்கள் 52. வண்ணத்தில் மேக்ஸி சைசில் வெளியாகியுள்ளது.. 


            நமது கிராமங்களில் பொதுவாக பெற்றோர்கள் அச்சுறுத்தப் பயன்படுத்தும் வார்த்தை.. ஒத்தக் கண்ணன் வந்துட்டான்..ஓடு ஓடு ஓடு! இந்தக் கதை அப்படி ஒரு ஒத்தக் கண்ணனைப் பற்றியதுதான்.. இல்லையில்லை பல ஒற்றைக் கண்ணர்கள் உலகை நோக்கிப் படையெடுப்பு நிகழ்த்துவதே கதையின் சாரம். 

                   முத்து காமிக்ஸ் நிறுவனர் தெய்வத்திரு எம்.சவுந்தரபாண்டியனுக்கு நினைவாஞ்சலியுடன் rebellion நிறுவன உரிமம் பெற்று முறைப்படி வெளியாகி இருக்கிறது இந்த ஒற்றைக் கண் மர்மம்.. 

   ஒற்றைக் கண் மர்மம் ஏற்கனவே முத்து காமிக்ஸ் வாரமலரில் வந்தது பழைய வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.. 


 அப்போதே டேப்லாய்ட் என்னும் பிரம்மாண்டமான வடிவில்தான் இந்த ஒற்றைக் கண் மர்மம் வந்திருந்தது. இப்போதும் மேக்ஸி என்னும் சிறப்பான பெரியதொரு அளவில் வெளியீடு காண்கிறது என்னும்போது அதிர்ஷ்டக்காரன் இவன் என்னும் எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை.. இரும்புக்கை மாயாவியாருக்கு மரியாதை.. நினைவஞ்சலிக்கும் மிகப் பொருத்தமான வெளியீடு.. 


இம்மாதத்தின் ஆன்லைன் வெளியீடுகள் 

இதில் முதல் புத்தகமாக வெளியாகி நம்மைப் பரவசப்படுத்துவது இந்த ஒற்றைக் கண் மர்மம்..
கதை என்ன? விண்வெளி ஜந்துக்கள் நம் பூமிக் கிரகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட முயற்சிக்கின்றன.. அவற்றை எப்படி இரும்புக்கை மாயாவி தடுத்து நிறுத்துகிறார் என்பதே இதன் ஒன் லைன்.. 
              இன்றைக்கு அவெஞ்சர்களையும் அமர்க்களமான பல நாயக நாயகியரையும் உணர்வு பூர்வமாக ஏற்றுக் கொண்டு பிரம்மாண்டமான கிராபிக்ஸ்களில் மனம் மயங்கி இருக்கும் இளைய தலைமுறை அறியாததொரு காலக்கட்டம் இருந்தது. கணினி என்பதே எட்டாக்கனியாக இருந்த மிகவும் பழமையான காலக்கட்டத்தில் ஒரு விண்வெளிப் படை எடுப்பினையும் அதன் தாக்கத்தால் மனிதர்களும், மிருகங்களும் சுருங்கிப் போய் திண்டாடுவதும் 1982 காலக்கட்டத்தில் சராசரி வாசகனுக்குப் பெருந்தீனியாக அமைந்த வாசிப்புக் களம் என்றால் மிகையாகாது.. சில ஆண்டுகளுக்குள் தூர்தர்ஷன் தன் தொடர்களில் ஒன்றில் மார்ஸ் கிரகம் செல்லும் சிறு குழு ஒன்று சுருங்கி விட என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பதை காண்பித்து இருப்பார்கள்.. அப்படியே புதிய தலைமுறைகள் ஆன்ட் மேன், வாஸ்ப் என்று அடுத்த லெவலுக்கு ஏறிப் போய் விட்டாலும் வாசகர்கள் மகிழுமாறு தொடர்ச்சியாக முத்து காமிக்ஸ் அமைத்துத் தந்த கம்பீரமான பாதையில்  லயன் காமிக்ஸ்  வீறு நடை போட்டுக் கொண்டு இன்றளவில் தரமான சித்திரக் கதைகளை தமிழ் மண்ணில் கொண்டு வந்து சேர்த்து வருகிறது என்றால் அதன் மூலகர்த்தாவான திரு.சவுந்திரபாண்டியன் அவர்களை நினைவு கூறுதல் அவசியம்.  அம்புலி மாமாவில் (சந்தமாமா) பணியாற்றி இரும்புக்கை மாயாவியை அங்கு கண்டெடுத்து பின்னாளில் முறைப்படி உரிமம் பெற்று முல்லை தங்கராசனுடன் அப்போதே பிரம்மாண்டமாகக் கொண்டு வந்த கதைத் தொடர் இது.. பிரச்சினை என்னவென்றால் வாராவாரம் வெளியாகும் கதைகள் தொடர்கதையாக வாசகர்கள் தொடர்ச்சி விட்டுப் போய் வாசிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் முத்து காமிக்ஸ் வாரமலர் தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டு விட்டது.. 
நாம் வாசிக்கும் இந்த புதிய கதை முழுமையாக அனைத்து பாகங்களும் முழு வண்ணத்துடன் நமக்கு வாசிக்கக் கிட்டியிருப்பது மிகவும் அருமையான விஷயம்.. மார்க்கெட்டில் முத்து காமிக்ஸ் வாரமலரை நம்மால் தேடிப் பிடிக்க முடியும் என்றால் அதன் விலை பல ஆயிரங்களை கடந்திருக்கும். ஆனால் அதற்கு அவசியமில்லாத வகையில் முழுமையான தொகுப்பாக முத்து காமிக்ஸில் வெளியாகி இருப்பது நம் மீது பெரியவர் கொண்ட அன்பின் மறைமுகமான வெளிப்பாடு.. 


அவரது நினைவுடன் அவரது மாறா கனவான 
இன்னும் பலப்பல உயரங்களை தமிழ் சித்திரக்கதைகள் எட்டிப் பிடிக்க வேண்டும் என்னும் பெரியதொரு இலக்குக்கு பயணிக்கும் தொடர் சிந்தனைகளுடன் உங்கள் நண்பன் ஜானி.. 

அடுத்து

முத்து காமிக்ஸின் பறக்கும் பிசாசு மற்றும் ப்ளாக் மெயில் வருகின்றன.. முந்தைய அட்டைகள் உங்கள் பார்வைக்கும். கண்டிப்பாக புதிய அட்டைகளும் சிறப்பாகவே அமையும் என்பது உறுதி.. காத்திருப்போம்.. 

வெளியீடு எண் 142


நினைவாஞ்சலி புகைப்படங்களை பின்னர் பகிர்கிறேன்.. லயன் வலைப்பூவிற்கு மரியாதை.. நன்றி.. 

6 கருத்துகள்:

  1. பெயரில்லா2 மே, 2025 அன்று 1:15 AM

    ஒற்றைக்கண் மர்ம்ம்பாதியில நிறுத்தப்படவில்லை.,இதற்கு அடுத்த கதையான மாயாவிக்கோர் மாயாவி முதல் அத்தியாயத்துடன. முத்துகாமிக்ஸ் வாரமலர் நின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நண்பரே. மொத்தம் இருபத்திரண்டு முத்து காமிக்ஸ் வாரமலர்கள் வாசித்திருக்கிறேன்.. அந்த இருபத்து மூன்றாவது தங்களிடம் இருந்தால் தெரியப்படுத்தவும். நன்றி.

      நீக்கு
  2. பெயரில்லா2 மே, 2025 அன்று 8:44 AM

    அன்றைய காலகட்டங்களில் இந்த கதை மிக பிரமிப்பாக அசத்தியது. இன்றும் அப்படித்தான் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே அது ஒரு எவர்க்ரீன் சக்சஸ் கதை.. ஒற்றைக் கண்ணைக் கண்டு அலறும் குழந்தைகளாக மாறி நாமும் பலமாக இரசித்த ஒன்று.. ஒத்தக் கண்ணன் வந்துட்டான் ஓடு ஓடு நினைவு வருகிறதா?

      நீக்கு
  3. ஸ்ரீபாபு, நாமக்கல் 😘😘3 மே, 2025 அன்று 2:57 AM

    பால்யத்தில் என் மனம் கவர்ந்த முத்து காமிக்ஸ் வாரமலரில் வெளி வந்த "இரும்பு கை மாயாவியின் ஒற்றை கண் மர்மம்"😘..

    தற்போது அருமையாய், அட்டகாசமாய் என் கையில் 😘🥰👍💐

    தேங்க்ஸ் to எடிட்டர் விஜயன் சார்😘💐💐🙏👍

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சார். பொருத்தமான ஒரு கதையை பொருத்தமான நினைவஞ்சலி தருணத்தில் வெளியிட்டு நம்மை நெகிழ வைத்திருக்கிறார். அவருக்கு நன்றிகள்.

      நீக்கு

இயற்கையின் தீர்ப்பிது_சிறுவர் மலர்

 முன்னொரு காலத்தில் யக்ஞ வாக்கியர் என்கிற துறவி இருந்தார்.. அவர்..    இயற்கையின் தீர்ப்பு என்றுமே மாற்ற முடியாதது என்பது இந்த கதையின் மூலமாக...