ஞாயிறு, 9 நவம்பர், 2025

LC 474-குருதியில் பூத்த குறிஞ்சி மலர்_லயன் காமிக்ஸ்_Nov 2025

வணக்கங்கள் அன்புள்ளங்களே.. 

நவம்பர் லயன் வெளியீடுகள் அனைத்தும் வெளியாகி விட்டன. இம்முறை புதியதோர் நாயகர் அறிமுகமாகியிருக்கிறார். கேட்டமவுன்ட் என்கிற பெயரில் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்ற கதை தமிழில் குருதியில் பூத்த குறிஞ்சி மலர் என்ற தலைப்பில் ரூபாய் 150 விலையில் வெளியாகி இருக்கிறது. மொத்த பக்கங்கள் 62 லயன் காமிக்ஸின் 474வது வெளியீடு இந்த அதிரடிக் கதை.. 

காட்டுப்பூனை ஒன்று குழந்தையைக் கவ்விக் கொண்டு செல்லும் இந்த அட்டை பிரமிப்பூட்டுகிறது.. இது ஒரு செவ்விந்திய-வெள்ளையர் யுத்தம் சார்ந்த கதை என்பதும் பின்னணியில் நிகழும் களேபரங்கள் நமக்குப் புரிய வைத்து விடுகின்றன.. வழக்கமான கதைதானே என்று எளிதில் தவிர்த்துக் கொள்ள முடியாத வகையில் இந்த கதையை பெஞ்சமின் ப்ளாஸ்கோ மார்ட்டினெஸ் கதை எழுதி ஓவியமும் வரைந்து அசத்தியுள்ளார்.. 


இவரைப் பற்றிய சிறு குறிப்பு இதோ..

1990 ஆம் ஆண்டு மோன்ட்லூசனில் பிறந்த பெஞ்சமின் பிளாஸ்கோ-மார்டினெஸ், மவுலின்ஸைச் சேர்ந்தவர் (03). இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு, அவர் லியோனில் உள்ள எமிலி கோல் பள்ளியில் சேர்ந்து, ஜூன் 2014 இல் பட்டம் பெற்றார். மேற்கத்திய ஆர்வலரான அவர், கேட்டமவுண்டின் ஆரம்பகால வாழ்க்கையை மாற்றியமைக்க ஆல்பர்ட் போனியுவின் மகளைச் சந்தித்தார். இந்தத் தழுவலைத்தான் அவர் தனது பள்ளியின் நடுவர் மன்றத்திற்கு வழங்கினார்மேலும் இது பிசாலிஸின் தலையங்க இயக்குநரான ஆலிவர் பெட்டிட்டின் கவனத்தை ஈர்த்தது. இவ்வாறு அவரது காமிக் புத்தக சாகசம் தொடங்கியது.

முகநூலில் இவரது ஓவியங்களையும் கதைகளையும் அறிந்து மகிழ: 

https://www.facebook.com/p/Benjamin-Blasco-Martinez-BD-Illustrations-100064084390022/

கதையைப் பற்றி: 

*கேரவன்களை தாக்கி அழிக்கும் செவ்விந்தியர் கும்பல்.. 

*தப்பிக்கும் ஒரே குழந்தையும் காட்டுப்பூனையால் தூக்கி செல்லப்படுகிறது.. 

*அதே தடத்தில் சற்று பின்னால் வந்த அன்பான குடும்பம் அந்த குழந்தையை மீட்டெடுத்து தங்கள் பிள்ளையாக வரித்துக் கொள்கின்றனர்.. 

*அவர்களை செவ்விந்தியரிடமிருந்து இராணுவம் காக்கிறது.. 

தொடர்வது அத்தனையும் இந்த குருதியில் பூத்த குறிஞ்சி மலர் தொடரில் திகைப்பூட்டும் சித்திரங்களுடன் நம்மை மிரளச் செய்ய காத்திருக்கிறது.. வாசிக்க லயன் காமிக்ஸ் இணையத்தளத்தில் ஆர்டர்களை கொடுக்கலாம்.. 

https://lion-muthucomics.com/?option=com_comics&view=comics&Itemid=83

வாசகர் திரு.சுரேஷ் குமார் அவர்களின் கருத்து: 

குருதியில்  பூத்த குறிஞ்சி மலர்..... தலைப்புக்கேற்றார்  போல கதை நெடுகிலும்  ரத்தம் ஆங்காங்கே தெறிக்கிறது.... பழி வாங்கும் கதை... வில்லனுக்கும்  பழி வாங்க மோடிவ் இருக்கிறது  ஹீரோ விற்கும்   முகாந்திரம் இருக்கிறது.  காட்டு பூனை (hero)  கருப்பு கீரி (வில்லன் )  இடையே நடக்கும் இறுதி மோதல்.... பூனை யை வெற்றி பெற வைத்து மரணத்தை தழுவுகிறது  கீரி. ( ஒரே விலங்குகள் ராஜ்ஜியமாக  இருக்கிறது ) இடை இடையே செண்டிமெண்ட்ஸ் தூவ பட்டு உள்ளது. அந்த பணியை கேட்டி, கிழவர் பேட் மற்றும் சாமுவேல்  செவ்வனே செய்கிறார்கள். Love episode உம் உண்டு அந்த role ஐ ஈதல் மற்றும் பியர் தியரி  பூர்த்தி செய்கிறார்கள். ஒரு ஜனரஞ்சக  story plot அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்கின்ற வகையில் அமைந்து இருக்கிறது குறுதியில் பூத்த குறிஞ்சி மலர்.  G. சுரேஷ் குமார், சிதம்பரம்.

2 கருத்துகள்:

  1. சாய்பாபு @ஸ்ரீபாபு 😘9 நவம்பர், 2025 அன்று 9:14 AM

    அட்டகாசமான கதை 😘👍
    அதற்கேற்ற கதை தலைப்பு 💐😘

    செம்மயான கதை 😘💐

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஜானி sir, என்னுடைய குறுதியில் பூத்த குறிஞ்சி மலர் பற்றிய விமர்சனத்தை தங்களின் வலைபூவில் பதிவேற்றியமைக்கு. 😍🥰🙏🤝💐

    பதிலளிநீக்கு

LC 474-குருதியில் பூத்த குறிஞ்சி மலர்_லயன் காமிக்ஸ்_Nov 2025

வணக்கங்கள் அன்புள்ளங்களே..  நவம்பர் லயன் வெளியீடுகள் அனைத்தும் வெளியாகி விட்டன. இம்முறை புதியதோர் நாயகர் அறிமுகமாகியிருக்கிறார். கேட்டமவுன்ட...